இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

Thursday, April 30, 2020

புதிய இணைப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்வடைந்துள்ளது.
சற்று முன்னர் மேலும் நான்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் அடிபப்டையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.
பிந்திய இணைப்பு
இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் இன்று மாலை ஐந்து மணி வரையான இலங்கையின் நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
  • உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை - 649
  • சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 506
  • தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் - 136
  • இறப்புகள் - 7 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

எரிபொருள் இறக்குமதியை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கா

எரிபொருட்கள் இறக்குமதி செய்வதை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்திற்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தற்பொழுது கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாள் தோறும் எரிபொருள் பயன்பாடு காரணமாக ஏற்கனவே எரிபொருள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பின்னர், எரிபொருளுக்கு கிராக்கி இல்லாத காரணத்தினால் எரிபொருள் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் பயன்பாடு 40 முதல் 50 வீதம் வரையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கொழும்பு மக்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட 14 பேர் மது போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது இதை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள அடுக்குமாடி தொடரில் வசிப்பவர்கள் கொரோனா தொற்று தொடர்பில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா அபாயவலயமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதிலும் கொழும்பு மாவட்டமே மிகவும் ஆபத்தான பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

செய்தியாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானங்கள்

2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாடு இன்றைய தினம் (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சரவைப் பேச்சாளர்களான கௌரவ உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கௌரவ பெருந்தோட்டத்துறை, ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சுருக்கம் பின்வருமாறு:
*** இலங்கையில் கொரோனா வைரசு தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட பெரும்பாலான அரச பிரிவினரால் பாரிய பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புலனாய்வு பிரிவு உன்னதமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இதற்கமைவாக இந்த பணிகளின் போது அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்புக்கள் மற்றும் அவர்களது செற்பாடு, அவர்கள் செயல்பட்ட முறை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக எதிர்வரும் சனிக்கிழமையன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரையில் ஒளிக் கருவிகள் ஊடகம் மூலமாக நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்புவதற்கு ஊடகங்கள் பங்களிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளல்

*** PCR பரிசோதனை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பெரும்பாலான அமைச்சுக்கள் பங்களிப்பு செய்வதுடன் உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பம் , புத்தாக்கம் அமைச்சு பல்கலைக்கழகம் அடங்கலாக நிறுவனங்கள் ஊடாக இதற்காக பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. 

இதில் பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள இந்த இயந்திரங்களை வழங்குவதன் மூலமும் பேராசிரியர்களின் தலைமையிலான பணியாளர் சபை பங்களிப்புடன் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனைகளை நாளாந்தம் 1000 இற்கும் மேற்பட்ட வகையில் அதிகரிப்பதற்காக அதற்கான பணிகளை விரிவுபடுத்துவதற்காக பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்.

*** சிறுபோகத்தில் 523,000 ஹெக்டர் நிலப்பரப்பில் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 150,000 மெற்றிக்தொன் உரத்தை பெற்றுக் கொள்வதற்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் உரத்தை மே மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் விவசாயிகளுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து உர விவசாய கிராமங்களை ஏற்படுத்துதல்.

50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200 விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல்.

விசேட விவசாய உற்பத்திகளுக்காக 10,000 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்தல்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உரிமையாளர்களுக்கு நிதிவசதியைப் பெற்றக் கொடுத்தல் மற்றும் மூடப்பட்ட அரிசி ஆலைகளை மீண்டும் ஆரம்பித்தல்

தற்போதைய நிலைமையின் கீழ் வாழ்வாதாரங்களை இழந்த கலைத்துறைக்குட்பட்ட தொழிற்துறையினருக்கு விசேட கடன் முறையொன்றை ஏற்படுத்தி 1 இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரையில் நிவாரண வட்டியின் கீழ் கடனை வழங்குவதற்கான பரிந்துரையை மேலதிக நடவடிக்கைகளுக்காக நிதியமைச்சிடம் சமர்ப்பித்தல்.

*** சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் காலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரையில் கல்வி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளை ஆரம்பிப்பதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரச ஊடக நிறுவனத்திற்காக மேலதிக அலைவரிசையை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைக்கான பரிந்துரைக்கு கொள்கை ரீதியிலான உடன்பாடு வழங்கப்பட்டமை.

*** வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட துன்பங்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெளிவுபடுத்தும் அமைச்சரவை ஆவணமொன்று வெளிநாட்டுத் தொடர்புகள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இது தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும்.

*** வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அந்நாடுகளிலுள்ள தூதரக அலுலகங்கள் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு வந்து தமது சிரமங்களை முறையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 24 மணித்தியாலம் செயல்படுத்தும் 1989 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களது உறவினர்களுக்கான தகவல்கள் மற்றும் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 

இதற்கு மேலதிகமாக பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக உள்ள இந்த அலுவலகத்தின் அதிகாரிகளை சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர் உள்ளிட்ட
நிவாரணத் தேவையுடையவர்களின் பட்டியலுக்கு அமைவாக
இலங்கைக்கு அழைத்து வருதல்.

வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு மேலதிகமாக ஒரு தொகையை வழங்குவதற்கு (ரூபாவை) கவனத்தில் கொள்ளுதல்.

*** அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் கீழ் எதிர்காலத்தில் 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதியை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைமேற்கொள்ளல்.

பொருளதார அபிவிருத்திக்கான குவைட் நிதியத்தின் மூலம் 08 பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்

*** மத்திய கொழும்பு நீர்விநியோக திட்டம் மற்றம் கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் அவற்றின் மூலம் இதுவரையில் தொடர்சசியாக நீர்விநியோகம் கிடைக்கப் பெறாத பிரதேசங்களுக்கு நீர்விநியோகத்தை தொடர்ந்து பெற்றுக் கொடுத்தல்

*** பொதுமக்களுக்கு e-Passport வழங்குவதற்காக தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டததை நடைமுறைப்படுத்துதல்.

*** இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கை போக்குவரத்து சபை எதிர்கொண்டுள்ள ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளித்து பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு நிதிவசதிகளை பெற்றுக் கொடுத்தல்

*** கொரோனா வைரசு பரவுவதை தடுப்பது தொடர்பில் இலங்கை மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக உலக நாடுகளுடன் எடுத்துக் கொண்டால் மக்கள் தொகையில் பத்து இலட்சத்துடன் ஒப்பிடுகையில் நோயை கட்டுப்படுத்துவதில் இலங்கை காத்திரமான நிலையில் இருப்பதற்கு முடிந்துள்ளது.

*** கொரோனா வைரசு தொற்று நிலைமைக்கு மத்தியில் நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் மதிப்பீடு அமைச்சரவை ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

*** வந்துராபீனுஎல்ல நீர்த்தேக்க திட்டம் உள்ளிட்டவற்றின் ஆய்வு முதலானவற்றை நடைமுறைப்படுத்தல்.

*** காணி அவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட லிட்ரோ கேஸ் terminal நடத்தப்பட்டு வரும் காணியை அந்த நிறுவனத்திற்கு வழங்குதல்.

*** சுகாதார அமைச்சிற்கு CT Scan இயந்திரமொன்றை பெற்றுக் கொள்ளல்.

*** மொரகொல்ல மின் உற்பத்தி நிலையத்தில் லோட் பி terminal ஜ மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்

*** ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல்.
READ MORE | comments

கொரோனாவால் தொடரும் ஊரடங்கு -அதனால் ஏற்படவுள்ள பாரிய பின்விளைவுகள் எவை?

கொரோனாவை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், அதன் பின்விளைவுகளும் வேறு சில பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளது ஐ.நா. சபையின் ஆய்வு முடிவுகள்.
கொரோனாவின் தாக்கம், அதனால் ஏற்படும் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றபோதும், பெண்களின் நலனையும், உரிமையையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த ஐ.நா. மக்கள்தொகை நிதியம் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கருத்தடை சாதனங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 114 நாடுகளில், சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதாகவும் ஆனால், தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும் என்றும், இதனால், வரும் மாதங்களில், 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்றும் ஐநா ஆய்வு தெரிவிக்கிறது.
இதுமட்டுமல்லாது, ஆண்களும், பெண்களும் வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வன்முறை சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 6 மாதங்களில், 3.10 கோடி குடும்ப வன்முறை சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்றும் ஐநா கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஊரடங்கு குழந்தை திருமணங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றும், ஐநா ஆய்வு எச்சரிக்கிறது.குழந்தை திருமணங்கள் அதிகரிக்க பொருளாதார சூழல் முக்கிய காரணியாக இருக்கும் என்றும், இது வருங்காலங்களில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஐநா குறிப்பிட்டுள்ளது. இவற்றை தடுக்கவும், பெண்களை உரிமைகளை பாதுக்காக்கவும் உலகநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.
READ MORE | comments

தனிமைப்படுத்தலில் 200 பொலிஸார் - வடமாகாணத்தில் பாடசாலைகளை தருமாறு நெருக்கடி - ஹாட்லிக் கல்லூரியும் கேட்கப்பட்டதா...?


கொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் மற்றும் கொரோனா கட்டுப்படுத்தல் வேலைத்திட்டத்தில் கடமையாற்றிய சுமார் 200 பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் சிலர் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலம் முழுவதும் நபர்களை கைது செய்தல், வீதி சோதனை சாவடிகளில் கடமையாற்றுதல், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களை கண்காணித்தல் உட்பட பல சேவைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் போது சாதாரண மக்களுடன் பழக வேண்டிய சூழ்நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டது எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுடன் சம்பந்தப்பட்டு செயற்பட்ட முப்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பொலிஸாருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தலைமையகத்தின் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வடமாகாணத்தில் படையினர் பாடசாலைகளை கோரிவரும் நிலையில் பொலிசாரும் தற்போது பாடசாலைகளைக் கோரி வருகின்றனர்.
அதற்கமைய பொலிஸ் நிலையங்களிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் மக்கள் தொடர்பாடல்களை ஏற்படுத்தி அங்கே மக்களிற்கான பணிகளையாற்றும் சமயம் பொலிஸ் நிலையங்களை பாதுகாக்க முடியும் எனப் பொஸார் கருதுகின்றனர்.
இதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும், கிளிநொச்சியிலும் முதல்கட்டமாக கோரியுள்ளபோதிலும் அவற்றினை வழங்க பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் பொலிசாரிற்கு இதுவரை பாடசாலைகள் வழங்காதபோதிலும் இது தொடர்பான அழுத்தங்கள் தொடர்வதாக கல்விச் சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.
இதேநேரம் விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காக ஏற்கனவே படையினர் அதிக பாடசாலைகளை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

பெண் ஒருவரால் முழுமையாக லொக்டவுன் செய்யப்பட்ட பிரதேசம்

குருணாகல் நிக்கவரெட்டிய பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவு பிரதேசத்தில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் கணவர் சிப்பாயாக செயற்படுகின்ற நிலையில் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பெண் பிரதேசத்தின் பலருடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கணவர் ஊடாக அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்றியதாக இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
விடுமுறைக்கு வந்த கணவருடன் இந்த பெண் பிரதேசத்தின் பல வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கு சென்றமையினால் குறித்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தட்டுள்ளது.


READ MORE | comments

பெற்ற மகளை கம்பியால் தாக்கிய தந்தை கைது ! வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் சம்பவம் !!!

மகளை அலுமினிய கம்பியால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் தந்தையொருவர் தனது ஒன்பது (09) வயது மகளை கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தந்தையைக் கைது செய்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் நேற்று (29..04.2020) மாலை உத்தரவிட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இரண்டு சகோதரர்கள் சண்டை பிடித்த போது பிள்ளைகளின் தந்தை தனது ஒன்பது வயது மகளை அலுமினியம் கம்பியால் தாக்கியதில் சிறுமிக்கு தலையில் ஏற்பட்ட காயத்துடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மகளை தாக்கிய குற்றச்சாடடில் தந்தை வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கு இணங்க எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

அமெரிக்க போர்க் கப்பலை விரட்டியடித்த சீனா

அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்த சீன இராணுவம், முதலில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் படி அறிவுரை வழங்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது.
இந்த பகுதியை சொந்தம் கொண்டாடும் சீனா, தன் கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானம் மூலம், அமெரிக்க கப்பலை விரட்டியடித்துள்ளது.
READ MORE | comments

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலைப் பரீட்சை


(சித்தா)
நாட்டில் covid 19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள இக்காலத்தில் மாணவர்களின் கல்வி நிலை, அவர்கள் எதிர்வரும் பொதுப் பரீட்சைகளுக்கு முகம் கொடுத்தல், அதற்கான திட்டமிடல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமைவாக பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன

இந்த வகையில் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் நாளை பிற்பகல் 03.30 – 04.30 மணி வரை (01.05.2020) தரம் 5 மாணவர்களுக்கான மாதிரிப் புலமைப் பரிசில் பரீட்சை, நிகழ்நிலைப் பரீட்சையாக (online examination) நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப் பரீட்சையில் அனைத்து வலய மாணவர்களும் பங்குபற்றமுடியும். இதற்கான இணையத் தள முகவரி https://sites.google.com/view/paddzeo/online-examination ஆகும்.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலைப் பரீட்சை

Rating: 4.5
Diposkan Oleh:
chithdassan
READ MORE | comments

அடுத்த ஒரு வருடத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் தொடரும்! ரணில் கணிப்பு

உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் குறைந்தது இன்னும் ஒருவருடத்திற்கு அச்சுறுத்தலை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிக்கை ஒன்றை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ரணில், அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை மக்களுக்கு அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


READ MORE | comments

மட்டக்களப்பில் பொலிஸாரினால் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகள்!!

மட்டக்களப்பில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு தலைமையகப் போக்குவரத்துப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் மற்றும் சுகாதாரத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அது தொடர்பாக மக்களை அறிவுறுத்தவும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் வெளியில் செல்வோர் முன்னெடுக்கவேண்டிய அடையாள அட்டை எண் நடைமுறைகள் குறித்து இதன்போது பொலிஸாரினால் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு தலைமையப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எப்.ஐ.ராஜபக்ஷ தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, மட்டக்களப்பு நகருக்குள் நுழைவோரும் மட்டக்களப்பு நகரில் இருந்து வெளியில் செல்வோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்துப் பேருந்துகளில் சமூக இடைவெளியைப் பேணுதல் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், பொலிஸ் பாஸ் நடைமுறைகள் மற்றும் பயணம் செய்யும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் முகக்கவசம் அணியாத பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.


READ MORE | comments

மட்டு போதனா வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 
தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை (29.04.2020) மேலும் தெரிவித்த அவர், நோயாளர்களுக்காக சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகளும் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால் சேவை மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் தற்போது வைத்தியசாலைக்கு வருபவர்கள் சமுக இடைவெளியைப்பேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும், அவசிய தேவை ஏற்படின் மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமூக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைத் தாம் அறிவுறுத்துவதாக கலாரஞ்சினி மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

திருகோணமலையிலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி! வெளியானது தகவல்

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பற்றி இன்று (30)இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 2829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான 47 நோயாளர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர பகுதியில் இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியில் ஒருவரும் கந்தளாய் - ரஜ எல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் 2101 பேருக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ள நிலையில் 728 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு நபர்களின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின் மாதிரிகளும் PCR பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமானால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சுகாதார திணைக்கள ஊழியர்கள் தமது உயிர்களை பணயம் வைத்துக் கொண்டு நோயாளர்களின் விடயத்தில் இரவு பகலாக சேவையாற்றி வருவதாகவும் தொடர்ந்தும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
READ MORE | comments

அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட உள்ள ஊரடங்கு சட்டம் மக்களின் பாதுகாப்பை உருதிப்படுத்தும் சுகாதார ஊரடங்கு சட்டம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்,
எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட உள்ள ஊரடங்கு சட்டம் மக்களின் பாதுகாப்பை உருதிப்படுத்தும் சுகாதார ஊரடங்கு சட்டமாகும்.
ஏனைய நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் வெவ்வேறு துறையினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் இலங்கையில் மக்களுக்கே மன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கொரோனா வைரஸ் தாக்கம்! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி எஸ்.சிறிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா நோயைத் தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு கட்டமாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பாரிய மருந்து வகைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, நிலாவெளி மற்றும் கப்பல்துறை போன்ற வைத்தியசாலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் மருந்து வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
கபச்சுர குடிநீர், பிரண ஜீவனி, HERBAL FUMES போன்ற மருந்து வகைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஞ்சி, வெள்ளைப்பூடு, கொத்தமல்லி, நெல்லி, சீந்தில் போன்றவற்றை நாளொன்றுக்கு 2 தடவைகள் குடிக்குமாறும் இலகுவான யோகாசனம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
READ MORE | comments

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.


கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் தற்போது வரை 649 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

136 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

நாடளாவிய ரீதியில் திடீர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

நாடாளவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று இரவு அரசாங்கம் திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன என பலராலும் வினவப்பட்டு வந்தது. எனினும் வெள்ளிக்கிழமை முதல் நீண்ட வார இறுதி விடுமுறை தினம் வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் என்பது அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதனாலும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வாரமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் அபாயமுள்ள வலயமான மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் காலை 5 மணி முதல் இரண்டு வரை 8 மணி தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

சிகரட் வகைகள் விற்பனை செய்வதனை தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருள் உற்பத்திகளுக்கு எதிரான அமைப்பு மற்றும் சுகாதரத் தரப்பினர் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸினால் அதிகளவு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக புகையிலை பொருள் உற்பத்திகளுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் மகேஸ் ராஜசூரிய தெரிவித்துள்ளார்.
புகை பிடிக்கம் போது விரல்கள் உதடு என்பன அடிக்கடி தொடுகையுறுவதனால் இந்த வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் வெகு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு பொதுவாகவே சுவாசப் பிரச்சினைகள் அதிகளவில் காணப்படலாம் எனவும் கொரோனா தொற்றினால் நிலைமை மோசமடையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றாளி பயன்படுத்திய சிகரட்டை பலர் புகைத்த காரணமாக அவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்ட சம்பவமொன்று அண்மையில் பதிவாகியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகைப் பொருள் பாவனையற்ற ஓர் தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு கிரமமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!!

Wednesday, April 29, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அடித்தட்டு மாணவர்களை கொண்டமைந்த வலயமாகும். இங்குள்ள மக்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கூலித்தொழிலை நம்பி தமது வாழ்க்கையினை நடத்துகின்றனர்.

கடந்தகால யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு பிரதேசம் தற்போது கல்வியில் முன்னேற ஆரம்பித்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு வலயம் அகில இலங்கை ரீதியில் 91ஆவது இடத்திலிருந்து இவ்வருடம் 81ஆவது இடத்துக்கு முன்னோக்கி சென்றுள்ளது . 

கன்னன்குடா மகா வித்தியாலய மாணவன் மிலக்சன், நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி கோ.லோவாஜினி, அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவன் பு.கிரோசன் ஆகிய மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி (9A) பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இம் மாணவர்கள் தமது கிராமங்களில் முதன் முறையாக 9A சித்தி பெற்று தமது குடும்பத்திற்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். சாதாரண வருமானம் பெறும் வறிய குடும்பங்களை சேர்ந்த இந்த மாணவர்கள் கல்வியில் பெற்ற வெற்றி இவர்களை போன்ற மாணவர்களின் சாதனைக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

பெறுபேறுகள் தொடர்பாக மேற்கு கல்வி வலய கல்வி பணிப்பாளர் சி.ஸ்ரீதரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்...
இந்த வெற்றியானது அனைவரது முயற்சியால் கிடைத்த வெற்றி என்றும் இதற்காக பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்ததுடன் சாதனை நிலை நாட்டிய மாணவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
READ MORE | comments

கொரோனா பணியிலிருந்து விலகவுள்ள மருத்துவர்கள் - அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

ஸ்ரீலங்காவில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற அரச அலுவலர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது குறித்து அரச மருத்துவ அதிகாரிகங் சங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் சி.எம்.சி மத்திய கொழும்பு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு பணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோவிட் 19 செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
READ MORE | comments

சற்றுமுன் ஸ்ரீலங்காவில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இரண்டாம் இணைப்பு
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 627 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 5 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இதுவரை 150 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீலங்காவில் இன்று மாலை வெளியான தகவலின் படி 3 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு 622ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
READ MORE | comments

ஊடரங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

நாளை முதல் நாடு முழுவது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

அட்டாளைச்சேனைப் பகுதியில் பெண் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வு! நால்வர் கைது!!

பெண் ஒருவரை அட்டாளைச்சேனை சம்புநகர் பகுதியில் இன்று (29) கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த பெண் வயல் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறித்த சந்தேக நபர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அறிந்த அக்கரைப்பற்று பெருங் குற்றப் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட 42 வயதுடைய பெண் கூலித்தொழில் நிமித்தம் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து அட்டாளைச்சேனை சம்பு நகர் பிரதேசத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்து வேறொரு பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அக்கரைப்பற்று பொலிஸார் சந்தேக நபர்கள் நால்வரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
READ MORE | comments

226 கடற்படை சிப்பாய்கள் கொரோனாவுக்கு இலக்கு!

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 226 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 147 சிப்பாய்களும், கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்தவர்களில் 79 சிப்பாய்களும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 21 கடற்படை சிப்பாய்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
READ MORE | comments

எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து - மரணங்கள் ஏற்படலாம் - மருத்துவர்கள் எச்சரிக்கை


எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதால், மக்கள் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு தொற்று நோய் தொடர்பான விசேட மருத்துவர்களின் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
எலிக்காய்ச்சல் பக்டீரியா ஒன்றின் மூலம் பரவுகிறது. தண்ணீருடன் எலிகளின் சிறுநீர் கலப்பதால், இந்த நோய் ஏற்படக் கூடும். சரியான நடைமுறைகளை கையாண்டால், இந்த நோய் பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு டொக்சிசய்க்லின் மாத்திரைகளை வாரத்தில் ஒரு முறை எடுத்துக்கொண்டால், எலிக்காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க முடியும் என சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வயல்களுக்கு அருகில் இந்த பக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கும் என்பதுடன் விவசாயிகள் இந்த நோய் தொடர்பாக கவனத்துடன் இருக்க வேண்டும்.
காய்ச்சல், சதை வலி, தலைவலி உள்ளிட்டவை இந்த நோயின் அறிகுறிகளாகும். அத்துடன் கண் சிவந்து போதல், வாந்தி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறுவது குறைந்து போதல் என்பவும் இந்த நோயின் அறிகுறிகள்.
உடலில் காயங்கள் இருக்கும் போது வயல்களில் வேலை செய்தால், வயல்களுக்கு அருகில் ஓடும் தண்ணீரில் குளிக்கும் போதும், அந்த காயங்கள் வழியாக இந்த பக்டீரியா உடலுக்குள் செல்லக்கூடும். சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகம், இருதயம், மூளை, கல்லீரல் போன்ற அவயங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மரணங்கள் கூட ஏற்படலாம் எனவும் விசேட மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
READ MORE | comments

ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்கா மக்களின் கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து இந்த மோசடிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

இணையத்தளத்தினூடாக பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் இணையத்தளத்தினூடாகவே பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் பொது மக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

எதிர்வரும் 4ஆம் திகதி பகுதியளவில் முழுமையாக இயங்கவுள்ள கொழும்பு


கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை அடுத்து இலங்கையில் கொழும்பு உட்பட சில மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 4ம் திகதி தளர்த்தப்படவிருக்கின்றது.
அன்று முதல் தபால் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திறக்கப்படும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு போன்றவை தபால் அலுவலக கடமை பீடங்களில் வழமை போன்று நடைபெறும்.
கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால்மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04 திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாகதிறக்கப்படும்.
02. இதற்கமைவாக 2020 மே மாதத்திற்கான பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, விவசாய ஓய்வூதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தியக்காரர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்தும் பணிகள் முன்பு போன்று தபால் அலுவலக கரும பீடங்களில் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
03. நீர்க்கட்டண பட்டியலை செலுத்துதல், மின்சார கட்டணம், தொலைபேசிக் கட்டணம்ஆகியவற்றை செலுத்துவதற்கும் உள்ளூர் இலத்திரனியல் முத்திரை பரிமாறலை மேற்கொள்வதற்கும் உள்ளூர் தபாலுக்கான கடிதங்கள் மற்றும் தபால் பொதிகளை கையளிப்பதற்கும் இந்த தினத்திலிருந்து பொதுமக்களுக்கு வசதிகள் செய்யப்படுகின்றன.
04. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொது மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்று தயவுடன் எதிர்பார்ப்பதுடன் தபால் ஊழியர் சபையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என்றும்எதிர்பார்க்கின்றோம் என இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக தபால் திணைக்கள மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை இருவர் கைது

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களை பயன்படுத்தி    சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த இருவர்  கைதாகியுள்ளதாக  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கடந்த  சனிக்கிழமை (25) மற்றும்  திங்கட்கிழமை (27)  மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர்  சுற்றிவளைப்பின் போது  இரு  சந்தேக நபர்கள் கைதாகியதுடன்   இரு வேறு நீதிமன்றங்களில்   வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.இதன் படி அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை(27) சீல் சாரயத்தை விற்பனை செய்ய முயன்ற ஒருவர் கைதானார்.இவ்வாறு கைதானவர் செவ்வாய்க்கிழமை(28) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் காயத்திரி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை(25) கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடா எனும் மூலப்பொருளை வைத்திருந்த நிலையில் கைதானவரை வியாழக்கிழமை(30) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்நடவடிக்கைக்காக  கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் க.தர்மசீலன் மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகரான எனது    வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் சென்ற மதுவரி பரிசோதகர்  ரி.நளீதரன் மற்றும் உத்தியோகத்தர்களான  எஸ்.புவனேசன், கே.செந்தில் வண்ணன் ,நித்தியானந்தன், பத்மசிவம்  ,தலதாவத்த, ஆகியோரே இச்சந்தேக நபர்களை கைது செய்தனர்.


 மேலும் இந்நடவடிக்கையானது மேலும் தொடரவுள்ளதாகவும் பொதுமக்கள் தமது ஒத்துழைப்புகளை வழங்குமாறு  கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் குறிப்பிட்டார்.



READ MORE | comments

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவர் சம்மாந்துறையில் விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான்

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விளினியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை(28) மாலை  சந்தேக நபர்   சந்தேகத்திற்கிடமாக  நடமாடியதை கண்ட விசேட அதிரடிப்படையினர் 30 வயதான ஒருவரை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வாறு இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை    எதிர்வரும் மே 5  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த நிலையில்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

ரீ-56 ரக துப்பாக்கி விவகாரம்-சந்தேக நபருடன் நெருக்கமாக பழகிய இராணுவ கெப்டன் இடமாற்றம்

பாறுக் ஷிஹான்

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில்  மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி  சூடு ஒன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான ஐவரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக முதலில் செவ்வாய்க்கிழமை(21) ஒரு சந்தேக நபர் கைதான நிலையில் துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய  4 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.இந்த கைது  நடவடிக்கையை  நீதிமன்ற உத்தரவிற்கமைய  சம்மாந்துறை  குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர்  முன்னெடுத்த நிலையில் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.


 இச்சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபருடன் நெருங்கி பழகிய அப்பகுதி  இராணுவ கெப்டன் தர அதிகாரி ஒருவருக்கு  தற்போது வடபகுதிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இவ் இராணுவ அதிகாரிக்கு பிரதான சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும்  கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன் அவ்வப்போது பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 26, 38 , 42,  40 ,மற்றும் 27 வயதினை உடையவர்களாவர்.இவ் ஐந்து  சந்தேக நபர்களும்   குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டு அடிப்படையிலும்   துப்பாக்கியை தன்வசம் உரிமையாக வைத்திருந்து பாதுகாத்தமை குற்றச்சாட்டிற்காகவும்  சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பாகவும்  ஏதாவது பயங்கரவாத குழுவினருடன் தொடர்புள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் பிரதான சந்தேக நபர்   செங்கல் வாடி மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் எனவும்   ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.

பின்னிணைப்பு

கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி  சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர்  மறுநாள் கைதாகி இருந்தார்.

குறித்த கைதான சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மேலதிக தகவலை பெற்ற பின்னர்  வியாழக்கிழமை(23) இன்று சம்மாந்துறை மலையடிக்கிராமம் 1 ஐ சேர்ந்த 38 வயதினையுடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு இரண்டாவதாக  கைதான  சந்தேக நபர் ஏலவே கைதான சந்தேக நபருக்கு   துப்பாக்கி சுடுவது  குறித்து  பயிற்சி அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இரண்டாவது  சந்தேக நபரது இடது கையில் 4 விரல் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏலவே  மீட்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை அதனை பயன்படுத்த உதவி செய்தமை துப்பாக்கி சூட்டு  பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய இச்சந்தேக நபர் கைதாகியுள்ளார்.இது தவிர பயங்கரவாத குழுக்களுக்கும் கைதான சந்தேக நபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மீட்கப்பட்ட துப்பாக்கி பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கிழக்கு மாகாண  சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய    அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அயாஷ கருணாரத்தினவின் மேற்பார்வையில்      அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  எம்.ஜெயந்த ரத்னாயக்க நெறிப்படுத்தலில்  கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தரவின்  நேரடிக் கண்காணிப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கி சூடு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள்(செவ்வாய்க்கிழமை(21)  26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய  ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் இருந்து தெரிய வந்துள்ளது.  
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |