விளையாட்டினால் ஏற்ப்பட்ட விபரீதம், துணிச்சலானவர்கள் மட்டும் இதை பார்க்கவும்...

Wednesday, April 30, 2014

 விளையாட்டினால் ஏற்ப்பட்ட விபரீதம், துணிச்சலானவர்கள் மட்டும் இதை பார்க்கவும்
READ MORE | comments

அரைகுறையாகி மரணதண்டனை நிறைவேற்றம் நிறுத்தப்பட்ட கைதி மாரடைப்புக்குள்ளாகி மரணம்

அமெரிக்க ஒக்லஹோமாவில் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான நச்சு ஊசி மருந்து சரியாக செயற்படாததால்  மரணதண்டனை பிற்போடப்பட்ட கைதிகளில் ஒருவர் மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். 
கிளேடொன் லொக்கேட் (38 வயது) என்ற மேற்படி கைதிக்கு நாளமொன்றில் ஏற்பட்ட செயலிழப்பானது அவருக்கு உடலில் நச்சு ஊசி மருந்து முழுமையாக செயற்படுவதை தடுத்ததால் 20 நிமிடங்களின் பின் அவரது மரணதண்டனை அரைகுறை நிலையில் நிறுத்தப்பட்டது. அந்த 20 நிமிட நேரத்தில் கிளேடன் கடும் வேதனையில் துடித்துள்ளார். 
 
மரணதண்டனை நிறுத்தப்பட்டபோதும் கிளேடன் மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்தார். 
 
இந்நிலையில் அவரது மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு இரு மணித்தியாலங்களின் பின் மரணதண்டணை நிறைவேற்றப்பட்டிருந்த சார்ள்ஸ் வாரனரின் (46வயது) மரணதண்டனை 14நாட்களால் பிற்போடப்பட்டது. 
 
1999 ஆம் ஆண்டில் 19 வயது யுவதியொருவரை சுட்டுக் கொன்றமைக்காக லொர்கெட்டிற்றும் 1997ஆம் ஆண்டில் 11வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் வார்னருக்கும் மரணதண்டணை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

3 பிள்ளைகளின் தாயான என்.கோகிலராணி (வயது 33) என்பவரின் சடலம் மீட்பு!!

Sunday, April 27, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து  03 பிள்ளைகளின் தாயான என்.கோகிலராணி (வயது 33) என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (27)  காலை மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு வாழைச்சேனையில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கொண்டுசென்றவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனமும் சந்தேக நபர் ஒருவரும் இன்று(26) அதிகாலை கைது செய்யப்பட்டள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து ஓட்டமாவடிக்கு கொண்டுவரப்பட இருந்த நிலையில் இன்று(26) அதிகாலை வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதுரை மற்றும் பாலைபாலை மரங்கள் இருபத்தி நான்கு மற்றும் மரக்குற்றிகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

READ MORE | comments

விண்கல் மோதுவதால் பூமியின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் எச்சரிக்கை

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என நிருபிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஒரு விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சம்மானது என்று தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகமும் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய புதுவருட கலாசார விளையாட்டுப் போட்டியின் புகைப்படங்கள்

Saturday, April 26, 2014

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகமும் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய புதுவருட கலாசார விளையாட்டுப் போட்டியின் புகைப்படங்கள்READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகமும் இளைஞர் கழகமும் நடாத்தும் கலாசார விளையாட்டுப் போட்டி நேரலையாக இன்று (26.04.2014) பி.ப. 2.30 மணிக்கு எதிர்பாருங்கள்

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகமும் இளைஞர் கழகமும் நடாத்தும் கலாசார விளையாட்டுப் போட்டி நேரலையாக இன்று (26.04.2014) பி.ப. 2.30 மணிக்கு எதிர்பாருங்கள்
Video streaming by Ustream
READ MORE | comments

தமிழ் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தேசிய தமிழ் தின போட்டியில் தேசியமட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை (26) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் தலைமையிலும்; நடைபெறவுள்ள விழாவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
READ MORE | comments

மட். மாநகர சபையின் ஏற்பாட்டில் விளையாட்டு மைதான திறப்பு விழாவும் சித்திரைப்புத்தாண்டு விழாவும்.

மட்டக்களப்பு மாநகர சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்ட "பாட்டாளிபுரம்" விளையாட்டு மைதான திறப்பு விழாவும் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சிறப்பு விளையாட்டு விழாவும் நாளை (26) சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் காலை 9.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகளின் ஆரம்ப வைபவமாக மரதன் ஓட்டமானது காலை 6.00 மணிக்கு காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாவதுடன், அடுத்து மைதான திறப்பு விழாவும் ஏனைய நிகழ்வுகளும் காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகும்.
மலை நேர நிகழ்வாக பி.ப 2.00 மணி தொடக்கம் பாரம்பரிய வினோத விளையாட்டு நிகழ்வுகள் மாநகர சபையின் உத்தியோகத்தர்களுக்கென இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நலன்விரும்பிகள், விளையாட்டு ரசிகர்களென அனைவரையும் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு மாநகர ஆணையாளர் அழைப்பு விடுக்கின்றார்.
READ MORE | comments

மட்டக்களப்பு தாண்டவன்வெளி விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு தாண்டவன்வெளி ரெலிகொம் சந்தியில் இன்று வெள்ளி (25) மாலை இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஹமட் நஸீர் வயது (24) கால உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து சிறு உழவுஇயந்திரத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டியுடனும் மோதியதினாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
                 
READ MORE | comments

மண்முனையில் குடியேற்றங்களை நிறுத்தி புனித பிரதேசமாக்க கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனையில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்தி புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'மட்டக்களப்பு, மண்முனையில் உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்ற போதும், இன்னும் அப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன், குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலை நாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப் பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
'மஹிந்த சிந்தனை' மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்திற்கு மாத்திரம் இல்லையா என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது.   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் ஓர் அம்சமாக காணப்படும் புரதான பொருட்களையும் இடங்களையும் பேணிப் பாதுகாப்பது என்ற உயரிய சிந்தனை மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்தில் மாத்திரம் பேணப்படாமல் இருப்பது ஏன் என்கின்ற ஐயப்பாடு எமக்கு தோன்றுகின்றது.
அதிகாரிகளின் தாமதமா அல்லது அரசியல்வாதிகளின் அழுத்தமா என்பதனை தற்போது வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை அரசாங்க அதிபராகிய தாங்களே தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை கோரி நிற்கின்றேன்.
சுமார் கி.பி. 312ஆம் நூற்றாண்டில் இந்திய ஒரிஷா மாநிலத்தில் இருந்து புத்த தாதுவினையும் சிவலிங்கத்தினையும் கொண்டு வந்த சிற்றரசி உலக நாச்சியும் அவரது சகோதரரும் பொலன்னறுவையில் புத்த தாதுவினை கொடுத்து விட்டு தனது பரிபாரங்களுடன் ஆரையம்பதி சிகரம் பகுதியில் காடு வெட்டி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தினையும் அமைத்து பூஜை புரிந்து வந்த வேளையில் கொக்கட்டிசோலையில் கொக்கட்டி மரத்தில் இருந்து இரத்தம் வெளிவரவே அங்கு விஜயம் செய்து கொக்கட்டிச்சோலை  ஸ்ரீதான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்தில் பந்தலிட்டு வருடா வருடம் பூஜை புரிந்து வாழ்ந்து வந்ததோடு வருடாந்த உற்சவங்களுக்காக கி.பி. 312ஆம் நூற்றாண்டு அளவில் தன்னால் அமைக்கப்பட்ட ஆரையம்பதி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பூஜைப் பொருட்களையும் திருசூலத்தினையும் கொண்டு செல்வதனை வழக்கமாக்கியும் இருந்தார்.
இந்த நடைமுறை இதுவரையும் உள்ளது. அதாவது காசிலிங்கேஸ்வரர் ஆலயம் போத்துக்கீசர் படையெடுப்பில் உள்ளடக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரையம்பதி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்திற்கு திருசூலம் எடுத்துச் செல்வதும் வடம் புஸ்ரீட்டுவதும் ஓர் சம்பிரதாயமாக நடைபெற்று வருகின்றது.

இவை போன்ற பல ஆதாரங்களை சுட்டிக்காட்டிய போதும் இதுவரை இப்பகுதியினை அகழ்வாராட்சி செய்யவோ, புராதான இடமாக பிரகடனப்படுத்தவோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் எம்மால் உணர முடியவில்லை என்பதனை மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்றபோதும், இன்னும் இப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன் 1988ஆம் 1989ஆம் வருடப் பகுதியில் குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலைநாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப்பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.  
மேலும், கடந்த 29.11.2013 என்று திகதியிடப்பட்ட ஆரையம்பதி ஆற்றல் பேரவையினால் பொது அமைப்புகள்; சார்பாக தங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை சுட்டிக் காட்டுகின்றேன். எமக்கு எப்பதிலும் கிடைக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனையில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்தி புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'மட்டக்களப்பு, மண்முனையில் உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்ற போதும், இன்னும் அப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன், குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலை நாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப் பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
'மஹிந்த சிந்தனை' மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்திற்கு மாத்திரம் இல்லையா என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது.   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் ஓர் அம்சமாக காணப்படும் புரதான பொருட்களையும் இடங்களையும் பேணிப் பாதுகாப்பது என்ற உயரிய சிந்தனை மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்தில் மாத்திரம் பேணப்படாமல் இருப்பது ஏன் என்கின்ற ஐயப்பாடு எமக்கு தோன்றுகின்றது.
அதிகாரிகளின் தாமதமா அல்லது அரசியல்வாதிகளின் அழுத்தமா என்பதனை தற்போது வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை அரசாங்க அதிபராகிய தாங்களே தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை கோரி நிற்கின்றேன்.
சுமார் கி.பி. 312ஆம் நூற்றாண்டில் இந்திய ஒரிஷா மாநிலத்தில் இருந்து புத்த தாதுவினையும் சிவலிங்கத்தினையும் கொண்டு வந்த சிற்றரசி உலக நாச்சியும் அவரது சகோதரரும் பொலன்னறுவையில் புத்த தாதுவினை கொடுத்து விட்டு தனது பரிபாரங்களுடன் ஆரையம்பதி சிகரம் பகுதியில் காடு வெட்டி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தினையும் அமைத்து பூஜை புரிந்து வந்த வேளையில் கொக்கட்டிசோலையில் கொக்கட்டி மரத்தில் இருந்து இரத்தம் வெளிவரவே அங்கு விஜயம் செய்து கொக்கட்டிச்சோலை  ஸ்ரீதான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்தில் பந்தலிட்டு வருடா வருடம் பூஜை புரிந்து வாழ்ந்து வந்ததோடு வருடாந்த உற்சவங்களுக்காக கி.பி. 312ஆம் நூற்றாண்டு அளவில் தன்னால் அமைக்கப்பட்ட ஆரையம்பதி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பூஜைப் பொருட்களையும் திருசூலத்தினையும் கொண்டு செல்வதனை வழக்கமாக்கியும் இருந்தார்.
இந்த நடைமுறை இதுவரையும் உள்ளது. அதாவது காசிலிங்கேஸ்வரர் ஆலயம் போத்துக்கீசர் படையெடுப்பில் உள்ளடக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரையம்பதி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்திற்கு திருசூலம் எடுத்துச் செல்வதும் வடம் புஸ்ரீட்டுவதும் ஓர் சம்பிரதாயமாக நடைபெற்று வருகின்றது.

இவை போன்ற பல ஆதாரங்களை சுட்டிக்காட்டிய போதும் இதுவரை இப்பகுதியினை அகழ்வாராட்சி செய்யவோ, புராதான இடமாக பிரகடனப்படுத்தவோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் எம்மால் உணர முடியவில்லை என்பதனை மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்றபோதும், இன்னும் இப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன் 1988ஆம் 1989ஆம் வருடப் பகுதியில் குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலைநாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப்பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.  
மேலும், கடந்த 29.11.2013 என்று திகதியிடப்பட்ட ஆரையம்பதி ஆற்றல் பேரவையினால் பொது அமைப்புகள்; சார்பாக தங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை சுட்டிக் காட்டுகின்றேன். எமக்கு எப்பதிலும் கிடைக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறில் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய இளைஞன் கைது

Friday, April 25, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை கோட்டைக்கல்லாறில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்தபோது 15வயதுடைய சிறுமி 18 வயது இளைஞரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாக குறித்த சிறுமியின் பெற்றோரால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.இதன் கீழ் கோட்டைக்கல்லாறை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி முகமட் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி வரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
READ MORE | comments

பயணிகளுடன் அவுஸ்ரேலியா விமானம் கடத்தல் உலகில் பர பரப்பு

பயணிகளுடன் அவுஸ்ரேலியா விமானம் கடத்தல் உலகில் பர பரப்பு
அவுஸ்ரேலியா விமானம்
பாலி: ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் பரவியது.

இதனையடுத்து சர்வதேச அளவில் பதட்டம் ஏற்பட்டதுடன், பல விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.
ஆனால் விமானம் கடத்தப்படவில்லை பாதுகாப்பாக பாலியில் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு தணிந்தது.
ஆஸ்திரேலியா, பிரிஸ்பனில் இருந்து வந்த விமானம் இந்தோனேசியாவின் பாலி நகரில் இறங்கவிருந்த நேரத்தில், கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
விமானிகள் அறைக்குள் பயணி ஒருவர் செல்ல முயற்சி செய்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பயணி, விமானிகள் அறைக்குள் நுழைந்து, விமானத்தை பாலியில் தரையிறக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் பேரில் விமானம் அங்கு தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் இது கடத்தும் திட்டமாக இருக்குமோ என்ற பெரும் பீதி கிளம்பியது.
பயணிகளுக்கு நிம்மதி: இது தொடர்பாக விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விமானம் கடத்தப்படவில்லை என்றும், பயணி அளவுக்கதிகமாக குடித்து பைலட் அறைக்குள் வந்துள்ளார்.
இவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளது. இதன் பிறகே பயணிகளுக்கு நிம்மதி ஏற்பட்டது.
கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக இன்னும் மர்மம் விலகவில்லை.
இந்நிலையில் ஆஸி.,விமானம் கடத்தப்பட்டதாக தகவல் பரவிய போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு , பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை சிறிது நிமிடம் ஏற்படுத்தி பின்னர் தணிந்தது.
READ MORE | comments

குடும்பம் நடத்திய பாம்பை பிரித்து அடித்து கொன்றவரை கொத்தி கொலை செய்த பெண் பாம்பு

குடும்பம் நடத்திய பாம்பி பிரித்து அடித்து கொன்றவரை கொத்தி கொலை செய்த பெண் பாம்பு

மாத்தளை பகுதியில் அதிக போதையில் வந்த நாப்பத்தி இரண்டு
வயதுடைய நபர் வீதி ஓர பற்றைக்குள் பிணைந்திருந்த .குடும்பம் நடத்தி கொண்டிருந்த ஜோடி பாம்பு ஒன்றில்
அதன் ஆண் பாம்பை இந்த நபர் அடித்து கொலை செய்துள்ளார் .

இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாத பெண் பாம்பு அவரை
ஓட ஓட விரட்டி கொத்தி கொலை செய்துள்ளது .

இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும்
பர பரப்பை கிளப்பியுள்ளது .
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகமும் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் புதுவருட கலாசார விழா - 2014

குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகமும் இளைஞர் கழகமும் வருடா வருடம் இணைந்து நடாத்தும் புதுவருட கலாசார விழா இம்முறையும் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.  இந்நிகழ்வானது 26.04.2014 அன்று சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில்  இ.மதன் அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலாநிதி திரு.மூ.கோபாலரெத்தினம் (பிரதேச செயலாளர் ம.தெ.எ.ப.) அவர்கள், சிறப்பு அதிதிகளாக திரு.மா.உலககேஸ்பரம், (பிரதிக் கல்விப் பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம்) அவர்கள், திருமதி வசந்தகுமாரன் (செயலாளர் பிரதேச சபை ம.தெ.எ.ப.) அவர்கள், விசேட அதிதிகளாக திரு.கே. தர்மலிங்கம்    (அதிபர்,        மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி) அவர்கள், இராணுவ பொறுப்பதிகாரிகள், குருக்கள்மடம், அத்தோடு இன்னும் பல கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வுகளாக

1. மரதன் ஓட்டம் (15 வயது மேல் ஆண் )
2. மரதன் (13 - 15 வயது ஆண்கள்)
3. சறுக்குமரம் ஏறுதல்
4. முட்டி உடைத்தல்  (15 வயது மேல் ஆண் )
5. சமநிலை ஓட்டம்
6. தலையணை அடித்தல் 
7. கிடுகுபின்னல்
8. போத்தலில் நீர் நிரப்புதல் 
9. தடைதாண்டி ஓட்டம்
10. சங்கீத சைக்கிள் சவாரி
11. கயிறு இழுத்தல்
12. கலப்பு அஞ்சல்
13. விநோத உடை 
14. சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம்
15. பலூன் ஊதி உடைத்தல் 
16. பூனைக்கு வால் வைத்தல் 

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்

எம்முடன் இணைந்திருப்போர்

எம்முடன் இணைந்திருப்போர்

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |