SLAS பரீட்சை புதிய பாடத்திட்ட விளக்கம்

Monday, August 31, 2015

இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சைக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் புதுத்தோற்றம் பெற்றுள்ளமை அது சார்பில் தெளிவின்மையை அல்லது கருத்து மாறுபாடுகளை / ஒத்தகருத்தின்மையை ஏற்படுத்தியுள்ளமை இங்கு பரீட்சார்த்திகளிடையே பெரும் ஐயங்களை தோற்றுவிக்கின்றது. எனவே அவை தொடர்பிலான விளக்கங்கள் பலரதும் அபிப்ராயங்கள் அனுமானங்களின் அடிப்படையில் இங்கே ஒரு சிறு தெளிவுரையாக உங்களுக்காக வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் முதலில் திறந்த பிரிவு சார்பில் அவதானம் செலுத்துவோம்.
திறந்த பிரிவானது ஐந்து பாடங்களை உட்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் நுண்ணறிவு, பொது அறிவு, கட்டுரையும் சுருக்கமும், முகாமைத்துவ உளச்சார்பு என்றவாறு நான்கு பாடங்களை உள்ளடக்கியிருந்தது. தற்போது  இப்பரீட்சைத்திட்டம் தற்போது ஐந்து பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளது. தெளிவாக கூறின், பொது அறிவு எனும் விடயமானது இங்கு சற்று விரிவான வியாக்கியானங்களுடன் இலங்கை தொடர்பான பொதுஅறிவு சார் வினாப்பத்திரம் , உலகியல் நடப்பு / போக்கு தொடர்பிலான இலங்கைக்கு வெளியே சார் பொதுஅறிவு பத்திரம் என்றவாறு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். பாடத்திட்டம் பின்வருமாறு:-z1இதன்படி சற்று விளக்கமாக வர்த்தமான பத்திரிகை பின்வருமாறு தருகிறது.z2z3
வினாப்பத்திர இல ௦1. பொது விவேகம் :- நுண்ணறிவு பரீட்சைக்கும் பொது விவேகத்திற்கும் வித்தியாம் உள்ளது. நுண்ணறிவு எனும்போது அனேகமாக உங்கள் வேகத்தினையும் கணிதவியலோடு தொடர்பான விவேகங்களையும் மொழியறிவோடு தொடர்பான திறன்களையும் உருவ/கோலங்களோடு தொடர்பான சிந்தனா சுழற்சியையும் அளவிடுவதாகவே 2௦௦7 மற்றும் அதன் முன்பான இ.நி.சேவை நுண்ணறிவு வினாப்பத்திரம் அமைந்திருந்தது. அனால் அதன்பின்னரான வினாக்கள் அனேகமாக 65 ‘/. ஆனவை பந்தி வடிவிலான வினா அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளதுடன் ஓரளவு சிக்கலான அனுபவமற்ற பரீட்சார்த்தி அதிக நேரங்களை செலவிடக்கூடிய தன்மையதாய் அமைந்து வருவது அவதானிக்கப்பட்டது. இப்பரீட்சைகளிலே தோற்றியவர்கள் அநேகமானோர் இவ்வினாத்தாள் பற்றி ” நேரம் போதாமை ” சார்பாக விமர்சனங்களை முன்வைக்கத்துவங்கினர். இதனால் இம்முறை நுண்ணறிவு எனும் அம்சம் பொது விவகம் என மாற்றப்பட்டுள்ளதுடன் வினாப்பத்திர பாடத்திட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஏலவே ௦1 மணித்தியாலமாக இருந்த நேரம் தற்போது ௦1  1/2 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வினாக்கள் 6௦-75 வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்படி,
z4
மேலே காட்டப்பட்டபடி ( இ.நி.சேவை பிரமானக்குறிப்பின் படி) நோக்கினால் , வினாக்கள் அதிகமாக ஒழுங்கமைப்பு , கிரகித்தல் திறன் சார், மாற்றுவழி உபாயம் , தர்க்க அறிவு என்பவற்றை ஒருமித்து விடை காணும் ஆற்றலை அளவிடுவதாகவே பெரும்பான்மையான வினாக்கள் அமையும். இவை பெரும் பந்திகளாகவும்/சிக்கல் மிக்க சிறு பந்திகளாகவும் அமையும். உதாரணமாகuh
மேற்கண்டவாறான வினாக்களே பெரிதும் எதிர் பார்க்கப்படுகின்றன. எனவே பரீட்சார்த்திகள் பழமைபேணும் விதத்தில் எழுதுனர் பதவிக்கான போட்டிப்பரீட்சை வினாப்பத்திரங்களில் அதிக பயிற்சி எடுப்பதிலும் பார்க்க ஒழுங்கமைப்பு மற்றும் தர்க்கவியல் , சிக்கல் மிக்க பிரசினங்களை தீர்த்தல் தொடர்பிலான வினாக்களோடு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல் புத்தி சாதூர்யமாகும்.
+++++குறிப்பு +++++ பொதுஅறிவு எனும் அம்சமே தற்போது இரண்டு விடயங்களாக பிரிக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகப் பொதுஅறிவு இலங்கைசார் பொது அறிவு என்று வேறுபாடில்லாமல் வினாவப்பட்டது. தற்போது அவை இரண்டு விடயங்களாக்கப்பட்டுள்ளன. அவை பின்வரும் ௦2ஆம் ௦3ஆம் விடயங்களாகும்.
வினாப்பத்திர இல ௦2. இலங்கையின் சமுக பொருளாதார அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள் :-
பழைய பாடத்திட்டத்தின்படி பொது அறிவு எனும் அம்சத்தின்கீழ் இலங்கைக்கு உட்பட்ட அல்லது தொடர்புபட்ட சகல பொது அம்சங்களும் வினாவப்படும். அதாவது சமுக,பொருளாதார,சமய,அரசியல்,கலாசார,வரலாற்று,கலை,விளையாட்டு,புவியியல் ரீதியிலான பதிவுகளும் சமகால நிலைமைகளும் வினாவப்படும். மேற்கூறிய சகலமும் ஆரம்பம், வரலாறு, வளர்ச்சி என்ற பின்னனியிலும் அவற்றின் தற்கால நிலை , போக்கு என்ற ரீதியில் CURRENT AFFAIRS வினாக்களாகவும் அமைந்தன.
ஆனால் தற்போது அதே பொது அறிவு விடயங்கள்,   இலங்கை சார்பாக மட்டும் வினாவப்படும் வினாப்பத்திரமாக இது அமையும்.z2 - Copyவித்தியாசம் என்னவெனில் ஏற்கனவே பல்தெரிவு வினாக்கள் மற்றும் சுருக்கவிடை முறைமைகளை மட்டுமே கொண்டிருந்த வினாப்பத்திரம் தற்போது அமைப்புக்கட்டுரை மற்றும் கட்டுரை வினாக்கள் எனும் புது வாசகங்களை உட்கொண்டுள்ளது. இதுவே இன்றைய பரீட்சார்த்திகளின் ஐய நிலைக்கு பிரதான காரணமாகும். வினாப்பத்திரத்துக்கான கடந்த கால பத்திரங்கள் ( pass papers) இன்மையால் இது நீடிக்கிறது. ஆனாலும் ஓரளவுக்கு எம்மால் இதற்கு தெளிவுவழங்க எதிர்பார்க்கிறோம்.
அமைப்புக்கட்டுரை எனும்போது… இலங்கையின் ஏதேனும் ஓர் ஆய்விடயம் / பிரச்சினை/சிறப்பம்சம் அல்லது ஏதேனும் ஓர் திட்டம் தொடர்பான தலைப்பு/சிறப்பு வரி/சிந்தனை தரப்பட்டு அதுபற்றிய பரீட்சார்த்தியின் அறிவு/தெளிவு/புரிதல்களை பரீட்சிக்கும் நோக்கில் வினாக்கள் வினவப்படும். இதற்கான விடைகள் அமைப்புக்கட்டுரை வடிவில் அமைதல் வேண்டும். ( அமைப்புக்கட்டுரையின் அம்சங்கள் பற்றி கீழே அவதானியுங்கள்)
வினாப்பத்திர இல 03. சர்வதேச/உலகளாவிய போக்கு (Global Trend) :-
உலகளாவிய போக்கு எனும்போது இவை பொதுஅறிவு சார் விரிவான பார்வையாகும். இவ்வினாப்பத்திரம் சர்வதேச பதிவுகளை,நிகழ்வுகளை, நகர்வுகளை,மாற்றங்களை,திட்டங்களை,மார்க்கங்களை,உபாயங்களை,பின்னனிகளை,விதானங்களை, அட்டவணைகளை , விளக்க/வியாக்கியானங்களை பற்றிய உங்கள் அறிவினைப் பரீட்சிப்பதாய் அமையும்.. இதற்கென நீங்கள் உலகளாவிய போக்குகளில் திளைத்தவராக இருக்கேவேண்டும் எனும் அவசியம் இல்லை.சளைக்காதவராய் இருக்கவேண்டும். உலக விவகாரங்களில் உங்கள் மூளை நுனிப்புல் மேய்ந்த காலம் இந்த பாடத்திட்ட மாற்றத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது இங்கு குறிப்பிடப்பட்டே ஆகவேண்டும்.
இவ்வினாத்தாளானது சர்வதேச அரசியல்,சமூக,வரலாறு,புவியியல், பொருளாதார,கலாசார,விஞ்ஞான,தொழிநுட்பம் சார் தரவுகள் தொடர்பிலான வினாக்களை உட்கொண்டிருக்கும். சாதாரணமாக பாட இலக்கம் இரண்டைப்போன்றே சுருக்கவினா,பல்தேர்வுவினா என்பவற்றுடன் கட்டுரை வினா , அமைப்புக்கட்டுரை என்பவற்றையும் கொண்டிருக்கும். எனவே முன்னர்போல் அல்லாது தற்போது சகல பொது அறிவுகள் சார் அம்சங்களும் ஆழமாக பார்க்கப்படல்வேண்டும். உதாரணமாக,
௦1.உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் முதனிலை வகிக்கும் நாடு எது? i)இந்தியா ii) சீனா  iii) அமேரிக்கா  iv) ஜப்பான்
௦2.உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் முதல் மூன்று நாடுகள் யாவை? i)……………ii)…………………iii)……………………….
௦3.சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளில் ஐந்தைக் கூறி அவற்றுள் மூன்றை சுருக்கமாக விளக்குக.
௦4.(  சீன அரசியல் கொள்கை சார்பான சிறு பந்தியை அல்லது ஒரு பிரபல்ய வசனத்தினை தந்துவிட்டு…) சீனாவின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்துவதில் அரசியல் ஸ்தீரம் வகுக்கும் வகிபாகங்களை தெளிவுபடுத்துக.
௦5. உலக வர்த்தக சந்தையில் சீனப்பொருளாதார வளர்ச்சியின்  தாக்கங்களை/ எண்ணெய் விலை அதிகரிப்பின் / மத்திய கிழக்கு அரசியல் ஸ்திரமற்ற நிலையின் தாக்கங்களை   பரிசீளிக்குக.
மேற்கண்டவாறு ஒரே விடயம் சகல வினா வகைகளிலும் உங்களின் ஒப்பீட்டுப்பார்வைக்காக தரப்பட்டுள்ளன. இதற்கேற்றவாறு உங்கள் சர்வதேச பொதுஅறிவு மட்டத்தினை விருத்திசெய்துகொள்ளுங்கள். இதே முறைமையிலேயே இலங்கைசார் (வினா பத்திரம் -௦2) வினாக்களும் வினாவப்படும் என்பதை கருத்திற்கொள்க.
வினாப்பத்திரம் ௦2&௦3 ====
நண்பர்களே! ஒற்றைச்சொல்லில் விடையளிக்கும் நோக்கில் பொதுஅறிவு படிக்கும்  பாரம்பரியம் இத்தால் முடிவுறுத்தப்படுகிறது. நீங்கள் விரிவாக எந்தவொரு விடயத்தினையும் விமர்சன நோக்கில் பார்க்கும் ஆற்றல் உள்ளவரை இருத்தல் வேண்டும் என்பதே இவ்வினாக்களினூடே எதிர்பார்க்கப்படுகின்றன.
வினாப்பத்திரம் ௦2 மற்றும் ௦3 என்பவற்றில் அமைப்புக்கட்டுரை வரும்போது அதற்கான உங்கள் விடையளிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றுவது சிறந்தது.
அமைப்புக்கட்டுரை பற்றிய மிகத்தெளிவான அடிப்படைகள் பின்வருமாறு படவடிவில் தரப்படுகிறது.1234இவற்றை உங்கள் கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்கும் போது கவனத்தில்கொள்வது சிறந்தது
வினாப்பத்திர இல ௦4. முகாமைத்துவ விவேகம் :-
z3 - Copyமுகாமைத்துவ / நிர்வாக ஆளுமைகள் , திறன்கள் உங்களிடம் இருக்கின்றதா? என்பதை மிகவும் நுட்பமாக பரீட்சிக்கும் வினாப்பத்திரம் இதுவாகும். முகாமைத்துவ விடயங்களோடு சம்மந்தப்பட்ட வினாக்கள் என்றாலும் இவற்றுக்கு விடையளிப்பதற்கு முகாமைத்துவ விடயங்களை முற்றிலும் கற்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் இவ்வினாக்களுக்கு விடையளிக்கும்போது முகாமைத்துவ அடிப்படைகள் அறிந்துவைத்திருப்பது அவசியமாகும். எனவே பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான சில தலைப்புக்களை இங்கே தருகின்றேன் . அவை பற்றிய குறிப்புக்களை இருமுறையாவது வாசித்துக்கொள்ளுங்கள். ஆனால் இது முகாமைத்துவ விடயம் அல்ல என்பதால் அதிகமாக நடைமுறைசார் விடய ஆய்வு வினாக்களாகவே இவை அமையும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
இவ்வகை வினாக்கள் உங்களிடம் ….
அ. பிரச்சினைகளை/நிகழ்வுகளை அணுகும் திறனை, தீர்மானங்களை எடுத்து பொறுப்புக்களை ஒப்படைத்து அதனை நடைமுறைப்படுத்தும் திறனை அளவிடுவதாய் அமையும்.
ஆ. உங்கள் மேல்நிலை / கீழ்நிலை உத்தியோகத்தர்களிடையே, பொதுமக்களிடையே அமைப்புக்களிடையே, சமாந்தர நிறுவனங்களிடையே  தொடர்பாடல்களை மேற்கொள்ளும் முறைமைகள் / உத்திகளை அளவிடுவதாகவும்,
இ. திட்டமிடல்,ஒழுங்கமைத்தல்,நெறிப்படுத்தல்,கட்டுப்படுத்தல் போன்ற முகாமை அம்சங்களினூடாக ஒரு பிரச்சினையை முகம் கொடுக்கும் அறிவை, ஒரு திட்டத்தினை அமுல்படுத்தி அதில் ஏற்படும் சவால்களை வெற்றிகாணும் தன்மையை அறியும் நோக்கிலும்
ஈ. மனிதவள முகாமைத்துவ அறிவினைப் பரீட்சிக்கும் விதத்திலும் ( மனித வள முகாமை எனும்போது… ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை பயன்படுத்தும் விதமும் அவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் சவால்களை வெற்றிகாணும் விதத்தினையும் அளவிடுவதை குறிக்கிறது|)
உ. நேரமுகாமைத்துவம் உள்ளிட்ட அலுவலக ஒழுக்கவியல் திறன்களை அளவிடுவதுடன் அது சார்பில் எழுகின்ற சவால்களை எதிர்கொள் திறனையும் அளவிடுவதாயும்
ஊ. பொதுமக்கள் சேவையை வினைத்திறன்மிக்கதாக்குதல், உற்பத்தித்திறன் மற்றும் ஊக்குவிப்பு தொடர்பில் பரீட்சார்த்திக்குள்ள அறிவு/ஆனுபவம்/யோசனைகளை அளவிடுவதாயும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்மானங்களை அளவிடுவதாயும்
எ. சமயோசிதமாக செயற்படும் திறன் உள்ளதா ? என்பதை அளவிடுவதாயும்
இவ்வினாப்பத்திரம் அமையும். இதனால் பரீட்சார்த்திகள் முகாமைத்துவம் சார் குறிப்புக்களை சற்று விளங்கிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அனால் விடைகள் தியரி அடிப்படையில் அளிக்கப்படக்கூடாது. தியரியையும் உள்வாங்கியதாக உங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வினாப்பத்திர இல -௦5.
ஆக்கபூர்வமான மற்றும் பகுப்பாய்வு ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்
பழைய பாடத்திட்டத்திலே இவ்வினாப்பத்திரமானது ” கட்டுரையும் சுருக்கமும்” என அழைக்கப்பட்டுவந்தது. இதே பழைய கள்ளே இன்று சில புது வர்ணத்தில் புதுப்பெயரில் அறிமுகமாகிறது . z3
இவ்வினாப்பத்திரத்தில் தரப்படும் தலைப்புக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு கட்டுரை வரையுமாறு கேட்கப்படுவர். இதற்கென பரீட்சார்த்தி ஒரு கட்டமைக்கப்பட்ட கட்டுரையொன்றை வரைவது தொடர்பிலான சகல ஆழ்ந்த அறிவையும் தெளிவான மொழி நடையும் பெற்றிருத்தல் வேண்டும்.
இரண்டாவதாக தரப்படும் தலைப்புக்களில் இருந்து பரீட்சார்த்தி அறிக்கையொன்றை அல்லது மெமோ ஒன்றை வரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுவர். இது எதிர்பார்க்கப்படுவது ஏன் எனில் , ஏற்கனவே ௦2 மணிநேரமாக இருந்த வினாத்தாள் நேரம் தற்போது ௦3 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளமையாகும். எனவே ஒரு அலுவலக சார் அறிக்கை/மெமோ தயாரிப்பது பற்றி நன்கு பயிற்ச்சி செய்துகொள்ளுங்கள்.
மூன்றாவதாக வழமைபோல் தரப்படும் கடினமான பந்தியோன்றினை மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதுமாறு வேண்டப்படுவீர்கள். இதற்கென க.பொ.த.சா/தர சுருக்க முறையை பின்பற்றாது… ஒரு உயர்மட்ட சுருக்கமுறையை நன்கு பயிற்சி பெற்றுக்கொள்ளுங்கள். சுருக்கம் எழுதுவது தொடர்பில் விஞ்ஞான / பொருளியல் ஆய்வுக்கட்டுரைகளின் 2௦௦ சொற்களிலான பந்தியொன்றினை தேர்ந்தெடுத்து சுருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
READ MORE | comments

கருணா அடித்த பெல்டி: கோட்டபாய தொலைபேசியில் கெட்டவார்த்தையால் திட்டி தீர்த்தார்!

தலைவர் பிரபாகரனை ராணுவம் கைது செய்து பின்னர் கொன்றது என்று ஊடகங்களுக்கு கூறிவந்தார் கருணா. இந்தக் கூற்று தமிழர்கள் மத்தியில் அவரை அவருவருக்கத் தக்க மனிதராக காட்டியது. ஆனால் சிங்களப் பகுதியில் கோட்டபாய மற்றும் ராஜபக்ஷர்களுக்கு பெரும் செல்வாக்கை தேடித்தந்து இவர் கூற்று. தற்போது ராஜபக்ஷர்களின் ஆதரவை முற்றாக இழந்து நடுத் தெருவில் தவிக்கும் கருணாவை , பயன்படுத்திக்கொள்ள மீடியாக்கள் தவறவில்லை. இப்போது கேட்டால் ஆதங்கத்தில் சில விடையங்களை இவர் நிச்சயம் உளறுவார் என்று மீடியாக்கள் கணக்குப் போட்டு அவரை நான் நீ என்று போட்டி போட்டு நேர்காணல் எடுக்கிறார்கள்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக் காட்சிக்கு கருணா கொடுத்த பேட்டியில், ஒரு அந்தர் பெல்டி அடித்தார் கருணா. தலைவர் பிரபாகரன் தன்னை தானே சுட்டுக்கொன்று இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். அப்படி என்றால் ராணுவம் அவரைக் கொல்லவில்லையா? என்று சிங்களவர் மத்தியில் மீண்டும் குழப்பம் எழுந்துள்ளது. அப்படி என்றால் ராஜபக்ஷர்கள் சொன்னது பொய்யா? என்ற சந்தேகமும் எழுகிறது அல்லவா? இது சிங்கள மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இதனை அடுத்து கோட்டபாய கருணாவை தொடர்புகொண்டு கெட்டவார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார். எனக்கு ஒரு சீட்டு தாருங்கள் என்று கேட்டபோது எவரும் எனது தொலைபேசி அழைப்பை எடுக்க வில்லை. ஆனால் இப்போது ஓடி வருகிறார்கள் பார்த்தீர்களா? என்று கருணா தனது நெருங்கிய சகா ஒருவருக்கு உளறியுள்ளார்.

முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு , தான் கூறுவதில் எதிலும் உண்மை இல்லை என்பதனை கருணா ஒருவாறு நிரூபித்துள்ளார். அவருக்கும் புலிகள் மேலும் ஆத்திரம் தற்போது ராஜபக்ஷர்கள் மேலும் ஆத்திரம். இதனால் எதனைக் கூறினாலும் இரண்டிற்கும் எதிராக கருத்தையே வெளியிடுகிறார். மகிந்தவோடு ஒட்டி உறவாடிய வேளை , யாழ் நாவற்குழியில் உள்ள இரால் வளர்ப்பு நிலையம் ஒன்றை வளைத்துப் போட்ட கருணா அதனூடாக ஏற்றுமதி லைசன்ஸ் ஒன்றை எடுத்து இராலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் பணத்தை சம்பாதித்தார். அவரது மனைவி கருணாவின் பெண்கள் சகவாசம் பிடிக்காமல் ஒதுங்கி வந்து ஸ்காட்லான்டில் வாழ்ந்து வருகிறார். தற்போது மனைவியோடு இணைந்து ஸ்காட்லாந்தில் வாழலாமா என்று கருணா எண்ணி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு ரணில் ஒத்துக்கொள்ள வேண்டுமே ... கருணா அல்லது கே.பி போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் அது தற்போதைய அரசாங்கத்திற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்.... இவர் திண்டாடுகிறார்.
READ MORE | comments

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூ.க்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்- சேகு இஸ்ஸதீன்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூட்டமைப்புக்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் வலியுறுத்தியுள்ளார். 

இந்த முயற்சி வெற்றியளிக்காது போனால் நல்லாட்சி அரசாங் கத்திலிருந்து ஜனநாயகத்தின் பெயரால் முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமெனவும் மு.கா. ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். 
தென்கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமான முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
ஒரே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை உருவாக்கி ஒருசிலர் அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டும், எஞ்சிய தொகையினர் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை அனுபவிப்பதற்குமாக செய்யப்படும் ஏற்பாடுகள் பாராளுமன்ற விழுமியங்களைப் பலிக்கடாவாக்கும் பாரம்பரியத்தை உருவாக்க இடமுள்ளது. 
எனவே, இரட்டைத் தலை சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்காமல் மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமையை வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அது முடியாமல் போகும் பட்சத்தில் ஆட்சிக்கு வரமுன்பே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கத் தயாராகும். ஐ.தே.க.முன்னணி ஆட்சியிலிருந்து முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தின் பெயரால் வெளியேற வேண்டும். 
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு ஐ.தே.கமுன்ன ணியுடன் சேர்ந்து கூட்டாட்சி ஒன்றை அமைக்க தமிழர் கூட்டமைப்பு தயாராகாமல் போனது மிகவும் துரதிஷ்டவசமான அரசியல் நிகழ்வாகும். 
ஐ.தே.முன்னணி ஆட்சியைக் காலூன்றவைத்து, பலப்படுத்தி ஆரம்ப காலகட்டத்தில் இந்த நாட்டின் மொத்த நன்மைக்கான அபிவிருத்திகளைச் செய்து காட்டி மக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டு தமிழர் தரப்பு உரிமைகளையும் நியாயங்களையும் படிப்படியாக இலகுவான முறையில் வென்றெடுக்க தமிழர் கூட்டமைப்பு தாராள மனதுடனும் தளராத நம்பிக்கையுடனும் முயற்சி செய்து பார்த்திருக்க முடியும். 
ஆனால் அது உள், வெளிக்காரணங்களால் நடைபெறாமல் போயிற்று அதன் விளைவாக இன்று ஆட்சி அமைப்பதற்காக இரட்டைத் தலை சுதந்திரக் கட்சியின் காலில் ஐ.தே.முன்னணி விழுந்து கிடக்க வேண்டியுள்ளது. 
இதனால் தேசிய அரசாங்கப் பெயரின் கவர்ச்சியில் ஐ.தே.மு. தேடிக்கொள்ளப்போவது தீராத தலைவலியைத்தான் என்பதைத் தெரிந்து கொள்ள பிரதமர் ரணிலுக்கு அதிக காலம் தேவைப்படாது. 
ஆட்சியிலமர்ந்து கொண்டும், எதிர்க் கட்சியில் இருந்து கொண்டும் சுதந்திரக் கட்சி ஆடப்போகின்ற நாடகம் ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியதாகவே அமையும் சாத்தியம் அதிகம் உண்டு. 
இதைவிட தமிழர் கூட்டமைப்போடு தேசிய அரசாங்கம் என்றில்லாமல் ஐ.தே.முன்னணி ஒரு கூட்டாட்சியை ஜனாதிபதி மைத்திரியின் துணையோடு நடத்தவும், அந்தக் கூட்டாட்சியை எதிர்க்கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சி வழி நடத்தவும் முடியுமாக இருந்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கி வீறு நடைபோட முடியும். 
ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயர் இலங்கை இதிகாசத்தில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட்டு சாகாவரம் பெறப்போவதை அமைக்கப்படப்போகும் பாராளுமன்ற ஆட்சிதான் தீர்மானிக்கப் போகிறது என்பதை ஜனாதிபதி உதா சீனம் செய்வதற்கில்லை. 
நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மஹிந்தவின் பாலருந்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொட்டிலில் இனவாதிகளின் தாலாட்டில் ஆடிக்கொண்டிருந்த சுதந்திரக்கட்சி ஞானஸ்ஞானம் செய்த ஐ.தே.முன்னணி ஆட்சியில் அங்கம் வகிக்கவுள்ளமை ஆட்சிக்கு ஆப்படிக்க அனுப்புவதாகவே மக்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள். 
இந்த இழுபறி இன்னும் தொடருமானால், அறுதிப் பெரும்பான்மை அளிக்கும்படி மக்களிடம் வேண்டிக் கொண்டு பாராளுமன்றத்தைக் கலைப்பது பற்றிப் பிரதமர் ரணில் யோசித்தால் அது தவறாக முடியாது. 
இந்த நிலைமையை நீடிக்க விடாமல் எதிர்க்கட்சித் தலைமையை தமிழர் கூட்டமைப்புக்கு வழங்குமாறு முஸ்லிம் கட்சிகள் பிரதமரையும், ஜனாதிபதியையும் காரணங்களை விளக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். 
அவர்கள் அதற்கு இணங்காத பட்சத்தில் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி சிறுபான்மை கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
READ MORE | comments

முல்லைத்தீவில் அகால மரணமடைந்த போராளியின் குடும்பத்துக்கு பா, உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மூலம் உதவி [படங்கள்]

யாழ்ப்பாணம் முல்லைத்தீவில் அகால மரணமடைந்த போராளியின் குடும்பத்துக்கு லண்டனில் இயங்கும் தமிழர் கராத்தே கல்லூரியின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் என்பவர் தலைப் பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டிக்கு கிசிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற போதிய பண வசதி இல்லாமையாலும், மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்திருந்தார்.
இச்செய்தியை கேள்வியுற்ற லண்டனில் ரென்சி ரவீந்திரனின் கீழ் இயங்கும் தமிழர் கராத்தே கல்லூரியின் கறுப்பு பட்டி பட்டம் பெறும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பெற்றுக் கொண்டு நேரடியாக மரணமடைந்தவரின் வீட்டுக்கு சென்று அவருடை மனைவியிடம் பணத்தினை வழங்கி ஆறுதல் வார்த்தைகளையும் தெரிவித்தார்.
இவ்உதவியை வழங்கிய லண்டனில் இயங்கும் தமிழர் கராத்தே கல்லூரியினருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக மரணமடைந்தவரின் மனைவி தெரிவித்தார்.
unnamed (21)unnamed (22)unnamed (23)unnamed (24)

READ MORE | comments

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்!

இன்னமும் அனுமான் உயிருடன் உள்ளாரா? நாம் வாழும் இந்த உலகத்தில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஆஞ்சநேயர் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி மற்றும் சேவையின் சின்னம் என்பதால் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுவோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவம் அவர். சரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா? சாகா வரத்தை பெற்றுள்ளதால், அவர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகிறது. ஆஞ்சநேயர் உயிருடன் இருப்பதற்கான சில ஆதாரங்களும், அறிகுறிகளும் இருக்கத் தான் செய்கிறது. பனி படர்ந்த மலைகளில் மிகப்பெரிய பாத அச்சுக்களைக் கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர். அப்படியானால் இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா? இறவாதவர் ஆஞ்சநேயர் சமயத்திரு நூல்களின் படி, ஆஞ்சநேயர் இறவாதவர். அவர் ராமாயணம் காலத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட, மகாபாரதம் காலத்திலும் கூட வாழ்ந்துள்ளார். அதனால் அவர் சிரஞ்சீவியாக இருப்பதற்கு இது ஒரு அத்தாட்சியாகும். அவர் ஆசீர்வாதிக்கப்பட்டவர் இந்த உலகம் அழியும் வரையில் ராமபிரானின் அனைத்து பக்தர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கால் தடங்கள் உள்ளது இந்தியாவின் சில பகுதிகளில் ராட்சச கால் தடங்கள் உள்ளது. அவை ஆஞ்சநேயருடையது என நம்பப்படுகிறது. ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் உள்ள கண்டமத்தனா மலைகளில் அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சில மூலங்கள் திடமாக நம்புகிறது. சமயத்திரு நூல்கள் கூறுவது என்ன? அனைத்து இந்து மத சமயத்திரு நூல்களை ஒருவர் கவனமாக தேடினாலும், ஆஞ்சநேயரின் மரணத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுப்பிடிப்பது கஷ்டமாக இருக்கும். அப்படியானால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தானே அர்த்தம். 
READ MORE | comments

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இருவர் பொலிசாரால் கைது

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 28,29 ஆம் திகதிகளில் இரண்டு வேவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம்பற்றி தெரியவருவதாவது மண்டூர் முருகனாலய உற்சவகாலம் ,போயா தினங்களில் தனிநபர் வீடு மற்றும் ஆலய வளாகத்திலும் சட்டவிரோதமான முறையில் பியர்,மதுபானப்போத்தல்களை விற்பனை செய்வதாக பொலிசாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில்  குறிப்பிட்ட இடத்தினை சுற்றிவளைத்தபோது விற்பனை செய்த நபர் மற்றும் மதுபானப்போத்தல்களை கைப்பற்றியுள்ளதாகவும்.பின்னர் பொலிசாரின் பிணையில் இருவரும் விடுவிற்கப்பட்டதாகவும்  இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது 31 திங்கல்  இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்படவுள்ளதாகவும் வெல்லாவெளிப்பொலிசார் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

மனைவியை ஓட ஓட கத்தியால் வெட்டிய கணவன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

இலங்கை திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆறாம் கட்டை, கிண்ணியாப்பகுதியில் மனைவியை கணவன் மனைவியை ஓட ஓட கத்தியால் வெட்டிய கணவன் -இலங்கையில் நடந்த பயங்கரம்  இலங்கை திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆறாம் கட்டை, கிண்ணியாப்பகுதியில் மனைவியை கணவன் கத்தியல வெட்டியுள்ளார் இருவருக்கும் குறித்த நாளில் வாய் சண்டை இடம்பெற்றுள்ளது இதன் போது சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமரியாக வெட்டியுள்ளார் .பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மனைவி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

கணவன் கைது செய்ய பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

 
READ MORE | comments

சென்னையில் தோன்றிய பிளட் மூன்: பேரழிவுக்கு எச்சரிக்கையா?

பிளட் மூன்’ என்பது பொதுவாக பேரழிவிற்கு எச்சரிக்கையளிக்கும் கடவுளின் குறியீடாக பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களால் கருதப்படுகிறது. இது முழுச் சிவப்பாக பார்க்கவே திகிலூட்டும் வகையில் இருப்பதனால் அவ்வாறு நம்பப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இச்சிவப்பு நிலா சென்னையில் நேற்று தோன்றியது. 

3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படும். பூமி கடந்து செல்லும் தூரம், சூரியன்-பூமி-நிலா ஆகிய கோள்கள் இடையிலான கோணம் போன்றவற்றின் அடிப்படையிலேயே சந்திர கிரகணம் நேரம் அமையும்.

சந்திரன் பொதுவாக சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகிறது என்றாலும், கிரகணம் நிகழும்போது பூமியின் நிழலில் நிலா இருக்கும்போதும், அதன் மேற்பரப்பை சில ஒளிக்கதிர்கள் தாக்குவதால் அது ரத்த சிவப்பாக தோன்றுகிறது. இந்த காரணத்தினாலேதான் சூரியன் மறையும்போது வானமும் அவ்வப்போது, ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பஞ்சு மிட்டாய் நிறங்களில் காட்சியளிக்கிறது.

சந்திர கிரகணம் பொதுவாக முழு சந்திரகிரகணம், பகுதி சந்திரகிரகணம் என 2 வகைப்படும். பகுதி சந்திரகிரகணம் வருடத்திற்கு 3 தடவையும், முழு சந்திரகிரகணம் வருடத்திற்கு ஒரு முறையும் தெரியும்.

நேற்று மாலை கடற்கரைகளில் இருந்து இந்த முழு சிவப்பு நிலாவை பலர் கண்டுகளித்தனர். மாலை சுமார் 6.30 மணிக்கு முழு பெளர்ணமியில் நிலா சிவப்பாக தோன்றியது. சிறிது நேரம் மேகத்துக்குள் மறைந்திருந்தாலும், நிலாவை சுற்றிலும் சிவப்பு நிறமாக அழகாகவே தோன்றியது.

இதனைத்தொடர்ந்து இரவு 7.15-7.30 வாக்கில் நிலா முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. தொடர்ந்து, மஞ்சள் நிறம் சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. பின்னர் சந்திரன் எப்போதும் போல வெண்மை நிறத்தில் மாறியது.

சென்னை கடற்கரைகளிலும், கோளரங்கத்திலும் ஏராளமான பொதுமக்கள் சந்திரகிரகணத்தை கண்டுகளித்தனர். இதே போல தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தச் சந்திரகிரகணம் தெரிந்தது.
READ MORE | comments

8வது பாராளுமன்ற அமர்விற்கான சகல ஏற்பாடுகளும் தயார்: தம்மிக தசநாயக்க

இலங்கையின் 8 வது பாராளுமன்ற அமர்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர், தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளைய தினம், சரியாக காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன்போது  தெரிவித்தார்.
இதில் முதலாவதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும் எனவும், அதற்காக வாக்களிப்பு ஒன்றினை நடாத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்படும் எனவும், மாலை வேளையில் ஜனாதிபதி தலைமையில்  அரசாங்கத்தின்  எதிர்க் கட்சி தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
READ MORE | comments

தாஜுதீன் கொலை: ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் மூன்று முன்னாள் அதிகாரிகளை தேடி வலைவிரிப்பு

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் மூவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படுவரென சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

இதேவேளை, லண்டனில் வசித்து வரும் இலங்கை பிரஜை ஒருவரும் தாஜுதீனின் கொலை விவகாரம் குறித்து தகவல் அறிந்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. “சந்தேக நபர்கள் இத்தாலிக்கு பறந்துவிட்டதாக கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

நிச்சயமாக லண்டனில் வசிக்கும் நபர் குறித்தே இவ்வாறுகூறப்படுகிறது. அவர் ஒரு சிவிலியன் மாத்திரமேயாகும். ஆனாலும் அவரிடமிருந்து பல தகவல்களை அறியலாம் என நம்பு கின்றோம். என்ற போதும் முக்கிய மான சந்தேக நபர்கள் இலங்கை யிலேயே உள்ளனர்.

அவர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். எச்சந்தர்ப்பத்திலும் அவர்களால் நாட்டை விட்டுச் செல்ல முடியாது” என விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார். “எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முன்பதாக சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்” என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

லண்டனில் வசித்து வரும் மேற்படி நபர், சர்ச்சைக்குரிய இலங்கை இராஜதந்திரி ஒருவரின் உதவிக்கூடாகவே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது குறித்த இராஜதந்திரியின் மீதும் வெவ்வேறு குற்றச்செயல்களுக்காக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார்.

தாஜுதீனின் கொலைக்கு முன்பாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தங்குமிடத்தில் முக்கிய இரகசிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருப்பதாக இம்மாத ஆரம்பத்தில் சி.ஐ.டி.யினருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் கடந்த ஆட்சியாளர்களுடன் மிகவும் நெருக்கமான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

ரகர் விளையாட்டு வீரரின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மோட்டார் வாகன விபத்து இடம்பெறவில்லை என எற்கனவே சி.ஐ.டி. உறுதியாக கூறியிருந்தது.

மேலும் தாஜுதீனின் சடலம் வாகனத்தின் சாரதிக்குரிய ஆசனத்தில் இருக்கவில்லை. அதற்கு அருகிலுள்ள முன் ஆசனத்திலேயே இருந்ததாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் சம்பவத்தைத் தொடர்ந்து ஒருசில செக்கன்களில் வாகனம் தீப்பற்றி எரிந்த போதும் எரிபொருள் தாங்கி அரைவாசிக்கு நிரம்பியிருந்ததாகவும் அவ்வதிகாரி கூறினார்.

தாங்கியின் அரைவாசிக்கு எரிபொருள் உள்ள நிலையில் வாகனமொன்று தீப்பற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வாகனத்தை சோதனையிட்ட போது அதில் விபத்து இடம்பெற்றதற்கான எந்தவொரு தடயமும் இருக்கவில்லை. கொலையை மறைப்பதற்காக விபத்து சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தைத் தொடர்ந்து நாரஹேன்பிட்டி பொலிஸாரே அதனை விபத்து என கூறியிருந்தனர். இதனால் பொலிஸார் அறிக்கைகளில் ஏதும் மாற்றங்களை செய்திருக்கலாமோ என்றும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த தாஜுதீனின் கொலை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவரது சடலம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது. இச்சோதனை தொடர்பிலான விரிவான அறிக்கை செப்டெம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

மேலும் தாஜுதீனை கடத்த பயன் படுத்திய வாகனம் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர். குறித்த வாகனம் முன்னாள் முதற் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் நடத்தப்பட்ட சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கு கையளிக் கப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

READ MORE | comments

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தில் வாகன விபத்து.

மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தில் 30.08.2015 முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பயணிகள் பஸ் வண்டியொன்றும் டிப்பர் வண்டியொன்றும் சேமடைந்துள்ளன.


திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டி (ANU EXPRESS)அதே வழியில் சென்றுகொண்டிருந்த டிப்பர் வண்டியை முந்திச் செல்ல முற்பட்டவேளையில் ஒன்றுடன் மற்றையது மோதி பினனர் அந்த பஸ் வண்டி வீதியோரமிருந்த தொலைபேசிக் கம்பத்துடன் மோதியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். 

இதனால் தொலைபேசிக் கம்பமும் சேதமடைந்துள்ளது. 
எனினும் பஸ்வண்டியில் பயணம்செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

READ MORE | comments

Two Arrested for 10 Million Theft


Two suspects have been arrested for theft of property belonging to garment factories in Maharagama, Homagama, Pannipitiya and Battaramulla.

The Police Spokesman's Office stated that it was revealed that a theft of property amounting up to a 10 million had taken place. 

The suspects were arrested the other day in accordance with complaints made by factory owners.
READ MORE | comments

சவுதி தீ விபத்தில் பலர் பலி

சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியின் அல்கொபா நகரத்திற்கு அருகாமையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர் வடைந்துள்ளது.

சம்பவத்தில் 259 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 70 பேர் வரையில் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருப்பதாக த அரப் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலியானவர்களில் பாகிஸ்தானியர்கள் மற்றும் சவுதிஅரேபிய பெண்களும் உடக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 
READ MORE | comments

கம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது. 

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ குணசேகர தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சி சார்பில் சந்தரசிறி கஜதீர இந்த முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். 

அதன்படி அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது சுயாதீனமாக செயற்படுவார் என்று டீயூ குணசேகர தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கிண்ணியாவில் இரண்டு தலைகளுடன் எருமை.

கிண்ணியா குட்டிக்கராச்சி என்னும் இடத்தில் எருமை ஒன்று நேற்று இரண்டு தலைகளுடன் குட்டி ஒன்றினை ஈன்றுள்ளது..How 01How 02How
READ MORE | comments

பருத்தித்துறையில் பிரபல ரௌடியை சுட்டுப்பிடித்தது பொலிஸ்

சுற்றிவளைப்பிலிருந்து தப்பிப்பதற்காக பொலிசாரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற பிரபல ரௌடி ஒருவனை பருத்தித்துறை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். கொலைக்குற்றச்சாட்டில் இந்த ரௌடி தேடப்பட்டு வந்தான். சிலகாலமாக பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் வடமராட்சி அல்வாய் வடக்கில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி குடும்பஸ்தர் ஒருவரை கல்லால் அடித்து கொன்றதாக சகோதரர்கள் மூவர் இனம்காணப்பட்டு தேடப்பட்டனர். இருவர் எற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகினான். மு.சதீஸ்குமார் (28) என்ற ரௌடி நேற்று அல்வாயில் வீடு ஒன்றில் பதுங்கியிருக்கும் தகவல் பொலிசாருக்கு கிடைத்தது.
இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிசார், அங்கு சென்றனர். பொலிசாரைக்கண்டதும் ரௌடி தப்பியோட முயன்றான். எனினும், பொலிசார் வீட்டை சுற்றிவளைத்து விட்டனர். இதனையடுத்து தன்னிடமிருந்த பயங்கரவாளால் பொலிசாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றான். கடைசிவழியாக ரௌடியின் காலின் கீழ் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி கைது செய்தனர்.
தற்பொழுது ரௌடி பொலிஸ் காவலில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
READ MORE | comments

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போலி நாணயத் தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஓட்டமாவடி மிறாவோடைப் பகுதியில் போலி நாணயத் தாள்களை ஓவ்வொன்றாக மாற்ற முற்பட்ட போது சந்தேகம் கொண்ட கடை உரிமையாளர்கள் அருகில் இருந்த வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இவரிடம் இருந்து 5000 ரூபா தாள்கள் -12, 1000 ரூபா தாள்கள்- 15, 500 ரூபா தாள்கள் -6 என 78000 ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
குறித்த நபரை திங்கட் கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
READ MORE | comments

தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்ததன் நோக்கம் என்ன? ரணில் விளக்கம்

கட்சித் தாவலை எதிர்த்த காரணத்தினால் தேசிய அரசாங்கம் அமைக்கத் தீர்மானித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து பேரை இணைத்துக்கொண்டு ஏன் அரசாங்கம் அமைக்க முடியாது என சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
கட்சித் தாவல் தடை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் இருந்த காரணத்தினால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளவில்லை.
கட்சித் தாவும் உறுப்பினர்களை ஏற்றுக்கொண்டால் மக்கள் எம்மீது குற்றம் சுமத்துவார்கள்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கவில்லை.
தேசிய அரசாங்கமொன்றை அமைத்து அமைச்சர்களை நியமிப்பது குறித்த யோசனை செப்டம்பர் மாதம் 3ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகள் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவார்.
அதன் பின்னர் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்வார்கள் என ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3ம் திகதி அமைச்சரவை எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் - ரணில்
இலங்கையின் நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதியன்று அமைச்சரவையின் எண்ணிக்கை குறித்து தீர்மானிக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 19வது திருத்தத்தின் கீழ் அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியன்று சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர். இதனையடுத்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |