மட்டக்களப்பில் இன்று விடுதலைப் புலிகளின் 24 கைக்குண்டுகள் கைவிடப்பட்ட நிலையில்

Saturday, November 30, 2019

மட்டக்களப்பு- காஞ்சரம்குடா, வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் வெடிகுண்டு பிரிவினர் வெடிக்க வைத்துள்ளனர்.
இன்று குறித்த கைக்குண்டுகளை மீட்ட படையினர், அப்பகுதியில் வெடிக்கவைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் .
கொக்கட்டிச்சோலை - வேக்கந்தசேனை வயல் பகுதிக்கு அருகில் மண்மேடு ஒன்றில் கைக் குண்டுகள் இருந்ததை கண்ட விவசாயிகள் பொலிஸர் அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர், கைவிடப்பட்ட கைக்குண்டுகளை பார்வையிட்டனர். 
பின்னர் அதனை வெடிக்க வைக்க நீதிமன்ற உத்தரவை பெற்று, 24 கைக்குண்டுகளை மீட்டு உடனடியாக வெடிக்க வைத்துள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அவர்களால் இந்த கைக்குண்டுகள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்க கூடுமென சந்தேகிப்பதுடன் தற்போது பெய்துவரும் கனமழையினால் மண் அரிக்கப்பட்டு இந்த குண்டுகள் வெளியே தென்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு கோட்டையின் மர்மங்களும் உண்மைகளும்!!

மீன்பாடும் தேன் நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு - காலனித்துவ காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்பட்டது. 
போர்த்துக்கேயர் இலங்கையை நிரந்தரமாக தமது காலனித்துவத்துக்குள் கொண்டு வந்ததை பறைசாற்றும் விதமாக முக்கிய கரையோர கேந்திர இடங்களிலெல்லாம் தமது பலமான கோட்டைகளை நிறுவினார்கள்.
அந்த வரிசையில் மட்டக்களப்பு வடக்கு மண்முனை பிரதேச செயலாளர் பிரிவில் கடலை அண்மித்து புளியந்தீவில் வாவி சூழ்ந்த பகுதியில் அமைந்த கோட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 
இது 1628இல் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டது. இது தொடா்பான மேலதிக தகவல்களை காணொளியில் காணலாம்....
READ MORE | comments

மட்டக்களப்பில் மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் இன்று பகல் இராட்சத சுறா மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பாலமீன் பகுதியில் கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் இந்த சுறா சிக்கியுள்ளது.
சுமார் 400கிலோவுக்கு மேல் எடைகொண்டதாக இந்த இராட்சத சுறா காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலையிலும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த சுறாமீன் பிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தமிழரசுக் கட்சியின் கந்துவட்டி ஜீவன்முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வன்னியில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இந்நிலையில் எரிகின்றன வீட்டில் கூரையை பிடுங்குவது போல் கந்துவட்டி மற்றும் நுண்கடன் அந்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. 

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கந்து வட்டியின் பின்னால் இருப்பவர்களில் ஒருவர் தான் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரின் அடியாளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்மடு வட்டாரத்தை சேர்ந்த கரைச்சிப் பிரதே சபை உறுப்பினருமான கந்துவட்டி ஜீவன் ஆவார். 

ஆரம்பத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேரந்த குட்டியுடன் வேலை செய்தவர்தான் இந்த கந்து வட்டி ஜீவன். இவர் முள்ளிவாய்காலில் யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகளின் பழைய இரும்புகளை தென்னிலங்கைக்கு களவாக விற்பனை செய்துவந்ததோடு தன்னுடைய கடத்தலுக்கு உதவியவருக்கு 3பவுணில் தங்க மோதிரத்தையும் பரிசாக அளித்துள்ளார். 

மேலும் இவரிடம் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற விசுவமடுவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் (வேணி-நகைமாடம்) அவர்கள் இவரின் மீற்றர் வட்டியினை கட்டமுடியாது இவரது அச்சுறுத்தலாலும் பல தொல்லைகளாலும் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத் தக்கது. இதனை தனது  பண பலம் மற்றும் அரசியலில் உள்ள செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி மறைத்து விட்டார் இந்த கந்துவட்டி ஜீவன்.

மேலும் இவர் வட்டிக்கு கொடுத்தவர்களின் வீடுகளுக்கு சென்று வீடுகளில் உள்ள பெண்களுடன் தவறான வார்த்தை பிரயோகம் செய்து வருவதுடன் இதன் காரணமாக கிளிநொச்சி திருநகர் சுடலையடியில் இவரை கட்டிவைத்து ஒரு தடவை பாதிக்கப்பட்டவர்களால் நையப்புடைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. 

இவ்வறானவர்களை தங்கள் சுயலாப கட்சி அரசியலுக்கு பயன்படுத்தும் சில அரசியல்வதிகளுக்கு எதிர்காலத்தில் தகுந்த பாடத்தை புகட்டுவோம் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

READ MORE | comments

லங்காநேசனின் இழப்பு வடக்கு-கிழக்கு மக்களுக்கு பேரிழப்பாகும்-சிவசக்தி ஆனந்தன்வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு லங்காநேசன் அவருடைய இழப்பு வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமரர் லங்காநேசன் அவர்கள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,சக அரச உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள்,பொதுமக்கள் என அனைவரோடும் மிக நெருங்கி சினேக பூர்வமாக பழகக் கூடிய ஒரு மக்கள் சேவகன். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும் இவருடைய காலத்திலே இவர் ஆற்றிய இப் பணிகள் தமிழ் மக்களின் மனங்களில் காலத்தால் என்றும் அழியாதவை. 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

வடமராட்சி கற்கோவளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் தம்பையா லங்காநேசன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கற்கோவளம் மெதடிஸ்த பாடசாலையிலும் பின்னர் பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வர்த்தகவியல் பட்டதாரியானார்.

1973ம் ஆண்டு கிண்ணியா உதவி அரசாங்க அதிபராகவும் பின்னர் வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராகவும் அதனைத் தொடர்ந்து உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டப் பணிப்பாளராகவும்,புனர்வாழ்வு புனரமைப்பு புனருத்தாரண அமைச்சு கப்பல் துறைமுக அமைச்சின் மேலதிக செயலாளராகவும்,நெக்கோட்டின் திட்டப்பணிப்பாளராகவும் பதவியேற்று வவுனியா மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

திட்டமிடல் துறையில் தனக்கென்று ஒருதனி இடத்தை பெற்றுக்கொண்ட அமரர் லங்காநேசன் அவர்கள்  தேசிய புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக பதவியேற்ற காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய எல்லப்பர் மருதங்குளம் விவசாயப் பண்ணை நிலையம்,வவுனியா கூட்டுறவு சங்கத்திற்கான கட்டிடம்,கமநலசேவை திணைக்களத்திற்குட்பட்ட பல்வேறு சிறிய நீர்ப்பாசன புனரமைப்பு மற்றும் நெக்கோட் திட்டத்தின் கீழ் வடக்கு-கிழக்கு சமுதாய புனர்வாழ்வு அபிவிருத்தியின் திட்டப்பணிப்பாளராக பதவி வகித்தபோது வவுனியா நகரசபை கலாசார மண்டபம், வவுனியா சைவப்பிரகாசா வித்தியாலயத்திற்கான  ஒன்றுகூடல் மண்டபம்,ஓமந்தை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி,வவுனியா மாவட்ட செயலகத்திற்கான கேட்போர் கூடம் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவராது அயராத முயற்சியால் முன்னெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே போன்று சுகாதாரம்,கல்வி,வீட்டுத்திட்டம் என்பன வவுனியா மாவட்டதிற்கு இவரால் ஆற்றிய சிறப்பான பணியாகும்.மேலும் அமரர் லங்காநேசன் அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பின் மூலம் இருபதாயிரம் மில்லியன் ரூபா பெறுதியையுடைய கருத்திட்டங்களின் இயக்குணராக கடமையாற்றினார்.மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட உப கருத்திட்டங்களை அமுல்படுத்தி போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழக்கைக்கு புத்தியிர் அளித்தார்.

அத்துடன் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை நிறுவுவதற்கும் மற்றும் முந்நூறு மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வைத்தியசாலையும் இன்றும் அவருடைய சேவையின் அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றது.

இவருடைய இழப்பு எமக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி,பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள்,நன்பர்களுக்கு அவர் எம்மக்கள் சார்பில் அவர் ஆற்றிய சேவைக்காக நன்றியுடன் நினைவு கூறுகின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மஹிந்த,பஸில், நாமல் ஆகியோருடன் தைரியமாக சென்று பேசினேன் : பா.உ ஹரீஸ் !!சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் முடிந்து புதிய அரசு செயற்பட தொடங்கி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் நான் சம்மந்தமாக பல உணர்வுகள்,பல கதையாடல்கள் நடைபெறுகின்ற இந்த காலகட்டத்தில் இந்த அரசின் பொறிமுறையில் ஒரு அங்கம் என்ற ரீதியில் இந்த தேர்தலுக்கு பின்னர் முதல் முதலாக பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதாக இந்த நிகழ்வினை கருதுகின்றேன்.

 நான் அரசியல் ரீதியில் முதிர்ச்சி பெற்ற ஞானியும் அல்ல அதே நேரம் எதுவும் தெரியாத கடைக்குட்டியும் அல்ல. ஒரு சராசரி அரசியல் வாதியாக இருக்கின்றேன். இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் சமூகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடுதலை புலிகளின் உச்சக்கட்ட யுத்தகாலத்திலும் கூட எமது அரசியல் கொள்கை என்பது அணிசேராக் கொள்கை அல்லது நடுநிலை கொள்கை என்னும் வகிபாகத்தை எமது முன்னைய தலைமைகள் மிக கட்சிதமாக பேணிவந்தது. 

குறிப்பாக எமது முன்னைய தலைமைகள் தன்னிச்சையாக முடிவெடுத்த வரலாறுகள் இல்லை. மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தனிமனித கொள்கை இல்லாமல் கொள்கை வகுப்பாளர்கள் குழாம் அவருக்கு பின்னணியாக இருந்து அவருடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றனர்.என . கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் நேற்று  (28) கல்லூரி அதிபர் யூ.எல் அமீன் தலைமையில் இடம்பெற்ற வருடந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்...

இந்த நாட்டில் நாம் விரும்பியோ விரும்பாமலோ பெரும்பான்மை இனம் சிங்களவர்கள் எனும் இயற்கை நியதியை நாம் மாற்றமுடியாது.தமிழ் தலைவர்கள் அதனை மாற்ற முற்பட்டார்கள் இந்த தேசத்தில் சிங்களவர்களுடன் வாழமுடியாது என்பதற்காக சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் செயற்பாட்டில் இருந்தும், ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களின் 50 ற்கு 50 எனும் கொள்கையில் இருந்தும், தந்தை செல்வநாயகத்தின் சமஸ்டி கட்சியின் சுய நிர்ணய உரிமை அதாவது பிரிந்து செல்லுகின்ற உரிமை என்கின்ற சிங்கள எதிர்ப்பு வாதத்தில் இருந்தும் அதன் பின்னர் வந்த அமிர்தலிங்கத்தின் ஈழக்கொள்கையில் இருந்தும் அத்தோடு இணைந்ததாக பிரபாகரனின் ஈழதேசத்திற்கான போராட்டத்தில் இருந்தும் இந்த நாட்டின் தமிழ் மக்களின் அரசியல் என்பது சிங்கள மக்களின் எதிர்ப்பு அரசியலின் துருவ நிலைக்கு சுமார் நூற்றாண்டு காலமாக கொண்டு வந்தது.

எமது முஸ்லிம் சமூகம் இந்த அக்கினி பரீட்சையில் யாருக்கும் துனைபோகமல் மிக துல்லியமாக பயணித்த சமூகம் இந்த சமூகத்தின் எதிர்பார்ச்சல் என்பது சாதாரணமாக இலங்கைக்குள் கட்டியெழுப்பப்பட்ட விடயம் ஒன்றல்ல அமெரிக்காவின் ஜனாதிபதி டெனால்ட் ரெம்ப் கூட முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கொண்டுவந்துதான் ஆட்சியை கைப்பற்றினார். அதுபோல தெற்காசியாவில் நரேந்திர மோடியின் கொள்கையை குறிப்பிடலாம்.

இந்த நாட்டில் ஆட்சியை கைபற்றுவதற்கு ஆட்சியாளர்களின் மன எண்ணங்கள் அவர்களின் பலவீனங்கள் என்பவற்றை நான் நன்கு அறிந்தவன். ஏனென்றால் நான் எந்த அரசியல் தலைமையையும் எதிரியாக பார்க்கவில்லை அவர்களை சந்திப்பதற்கு பின்னிற்பதும் இல்லை.நான் முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் அத்தோடு கடந்த ஆட்சியில் ஒரு இராஜாங்க அமைச்சர் கடந்த டிசம்பரில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராக வந்தவுடன் என்னுடன் உதவி கோரியபோது நான் தைரியமாக சென்று அவருடன் பேசினேன் அதற்கான கணிப்பு என்னவென்றால் அவர் சிங்கள பெரும்பாலான மக்களின் பிரதிநிதி என்கின்ற அந்தஸ்த்தில் நான் சென்று பேசினேன்.அதுபோல பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோருடன் பேசினேன். இதில் மறைக்கவேண்டிய விடயம் எதுவும் இல்லை.

எமது முஸ்லிம் சமூகம் கடந்த 20 வருடமாக அவருடன் மோதி இருக்கின்றோம் கடந்த 2005 அவர் வெற்றி பெறுவார் என்று தெரிந்தும் நாங்கள் அவருக்கு எதிராக நின்று அவரை தோற்கடிக்க முற்பட்டோம் அதுபோல் 2010ம் ஆண்டும் அவரை தோற்கடிக்க முயன்றோம்.அத்துடன் 2015ம் ஆண்டு மக்கள் சக்தியாக நின்று சிங்கள பெரும்பான்மை மக்களும் அவரை வெறுத்ததனால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் 2019ம் ஆண்டு அவரை சிங்கள தேசத்தில் புத்திஜீவிகள்,வர்த்தகர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பல மக்கள் ஏகமனதாக தீர்மானித்து இருந்த நிலையில்தான் ஈஸ்டர் குண்டுதாக்குதல் நடைபெற்றது. அந்த தாக்குதலை செய்தது எமது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதி சஹ்ரான் என்பவன்.

அதன் பின்பு இந்த நாட்டின் நிலைமையினை தலைகீழாக புரட்டி போட்டது தமிழ்,சிங்கள பிரிவினைவாதமாக இருந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாற்றப்பட்டது.மாற்றியவர்கள் அரசியல்வாதிகளை விட இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் வர்த்தகர்கள், புத்திஜீவிகள் மதகுருமார்கள் என சகல தரப்பினரும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்பு மிக வேகமாக பிரச்சாரம் செய்து கொண்ட நிலையில்தான் எங்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறியது. 
டாக்டர் சாபி மீது நடைபெற்ற விடயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் என தொடர் கதையாக சென்ற போதுதான் கடைசியில் கண்டி தலதா மாளிகையில் அதுரலிய ரத்னதேரர் அவர்களினால் இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டி இருந்த பொழுதுதான் நான் குறிப்பாக அதில் எச்சரிக்கையடைந்து இது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் எனவே இது அடுத்த கட்டமாக இனத்திற்கு எதிரான போராட்டமாக மாறுவதற்கு இடையில் நாம் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தேன் அதனால் பதவி விலகி இருந்தோம்.ஆனால் நான் விரும்பினேன் இந்த இராஜினமா இந்த ஜனாதிபதி தேர்தல் வரையும் நீடித்து இருக்க வேண்டும்.

இந்த முஸ்லிம் சமூகம் நடுநிலை சமூகமாக இருக்க வேண்டும் நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை இரண்டு தரப்பு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைப்போம் என்ற உத்வேகம் என்னிடம் இருந்தது அது சம்மந்தமாக நான் சகலரிடமும் பேசினேன் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இறுதியில் நான் மட்டும் அமைச்சு பதவி எடுக்காமல் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருந்தேன்.

எனவே எமது நாட்டில் உள்ள 20 இலட்சம் முஸ்லிம் மக்களின் அரசியல் அமைப்பு சார்ந்த உரிமைகள்,மற்றும் வாழும் உரிமைகள் இந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எவ்வாறான அடிப்படையில் கையளப்படுமோ! என்ற பயமும்,பீதியும் எங்களிடம் உள்ளது.எனவே எமது எதிர்காலம் சம்மந்தமாக நாங்கள் இன்னும் இன்னும் தனிமனித தேவைகளுக்கு அப்பால் ஒரு சமூகமாக ஒரு கொள்கை வகுப்பாளர்களை கொண்டு இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நூருல் ஹுதா உமர் , சார்ஜுன் லாபீர் )


UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
READ MORE | comments

ஆரம்ப பிரிவுகளுக்காக 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள்

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி  தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார்.

ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதா தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்  உயர்கல்வி  தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்த சுட்டிக்காட்டினார் .
READ MORE | comments

மஹிந்த,பஸில், நாமல் ஆகியோருடன் தைரியமாக சென்று பேசினேன் : பா.உ ஹரீஸ் !!சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் முடிந்து புதிய அரசு செயற்பட தொடங்கி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் நான் சம்மந்தமாக பல உணர்வுகள்,பல கதையாடல்கள் நடைபெறுகின்ற இந்த காலகட்டத்தில் இந்த அரசின் பொறிமுறையில் ஒரு அங்கம் என்ற ரீதியில் இந்த தேர்தலுக்கு பின்னர் முதல் முதலாக பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதாக இந்த நிகழ்வினை கருதுகின்றேன்.

 நான் அரசியல் ரீதியில் முதிர்ச்சி பெற்ற ஞானியும் அல்ல அதே நேரம் எதுவும் தெரியாத கடைக்குட்டியும் அல்ல. ஒரு சராசரி அரசியல் வாதியாக இருக்கின்றேன். இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் சமூகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடுதலை புலிகளின் உச்சக்கட்ட யுத்தகாலத்திலும் கூட எமது அரசியல் கொள்கை என்பது அணிசேராக் கொள்கை அல்லது நடுநிலை கொள்கை என்னும் வகிபாகத்தை எமது முன்னைய தலைமைகள் மிக கட்சிதமாக பேணிவந்தது. 

குறிப்பாக எமது முன்னைய தலைமைகள் தன்னிச்சையாக முடிவெடுத்த வரலாறுகள் இல்லை. மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தனிமனித கொள்கை இல்லாமல் கொள்கை வகுப்பாளர்கள் குழாம் அவருக்கு பின்னணியாக இருந்து அவருடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றனர்.என . கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் நேற்று  (28) கல்லூரி அதிபர் யூ.எல் அமீன் தலைமையில் இடம்பெற்ற வருடந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்...

இந்த நாட்டில் நாம் விரும்பியோ விரும்பாமலோ பெரும்பான்மை இனம் சிங்களவர்கள் எனும் இயற்கை நியதியை நாம் மாற்றமுடியாது.தமிழ் தலைவர்கள் அதனை மாற்ற முற்பட்டார்கள் இந்த தேசத்தில் சிங்களவர்களுடன் வாழமுடியாது என்பதற்காக சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் செயற்பாட்டில் இருந்தும், ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களின் 50 ற்கு 50 எனும் கொள்கையில் இருந்தும், தந்தை செல்வநாயகத்தின் சமஸ்டி கட்சியின் சுய நிர்ணய உரிமை அதாவது பிரிந்து செல்லுகின்ற உரிமை என்கின்ற சிங்கள எதிர்ப்பு வாதத்தில் இருந்தும் அதன் பின்னர் வந்த அமிர்தலிங்கத்தின் ஈழக்கொள்கையில் இருந்தும் அத்தோடு இணைந்ததாக பிரபாகரனின் ஈழதேசத்திற்கான போராட்டத்தில் இருந்தும் இந்த நாட்டின் தமிழ் மக்களின் அரசியல் என்பது சிங்கள மக்களின் எதிர்ப்பு அரசியலின் துருவ நிலைக்கு சுமார் நூற்றாண்டு காலமாக கொண்டு வந்தது.

எமது முஸ்லிம் சமூகம் இந்த அக்கினி பரீட்சையில் யாருக்கும் துனைபோகமல் மிக துல்லியமாக பயணித்த சமூகம் இந்த சமூகத்தின் எதிர்பார்ச்சல் என்பது சாதாரணமாக இலங்கைக்குள் கட்டியெழுப்பப்பட்ட விடயம் ஒன்றல்ல அமெரிக்காவின் ஜனாதிபதி டெனால்ட் ரெம்ப் கூட முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கொண்டுவந்துதான் ஆட்சியை கைப்பற்றினார். அதுபோல தெற்காசியாவில் நரேந்திர மோடியின் கொள்கையை குறிப்பிடலாம்.

இந்த நாட்டில் ஆட்சியை கைபற்றுவதற்கு ஆட்சியாளர்களின் மன எண்ணங்கள் அவர்களின் பலவீனங்கள் என்பவற்றை நான் நன்கு அறிந்தவன். ஏனென்றால் நான் எந்த அரசியல் தலைமையையும் எதிரியாக பார்க்கவில்லை அவர்களை சந்திப்பதற்கு பின்னிற்பதும் இல்லை.நான் முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் அத்தோடு கடந்த ஆட்சியில் ஒரு இராஜாங்க அமைச்சர் கடந்த டிசம்பரில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராக வந்தவுடன் என்னுடன் உதவி கோரியபோது நான் தைரியமாக சென்று அவருடன் பேசினேன் அதற்கான கணிப்பு என்னவென்றால் அவர் சிங்கள பெரும்பாலான மக்களின் பிரதிநிதி என்கின்ற அந்தஸ்த்தில் நான் சென்று பேசினேன்.அதுபோல பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோருடன் பேசினேன். இதில் மறைக்கவேண்டிய விடயம் எதுவும் இல்லை.

எமது முஸ்லிம் சமூகம் கடந்த 20 வருடமாக அவருடன் மோதி இருக்கின்றோம் கடந்த 2005 அவர் வெற்றி பெறுவார் என்று தெரிந்தும் நாங்கள் அவருக்கு எதிராக நின்று அவரை தோற்கடிக்க முற்பட்டோம் அதுபோல் 2010ம் ஆண்டும் அவரை தோற்கடிக்க முயன்றோம்.அத்துடன் 2015ம் ஆண்டு மக்கள் சக்தியாக நின்று சிங்கள பெரும்பான்மை மக்களும் அவரை வெறுத்ததனால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் 2019ம் ஆண்டு அவரை சிங்கள தேசத்தில் புத்திஜீவிகள்,வர்த்தகர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பல மக்கள் ஏகமனதாக தீர்மானித்து இருந்த நிலையில்தான் ஈஸ்டர் குண்டுதாக்குதல் நடைபெற்றது. அந்த தாக்குதலை செய்தது எமது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதி சஹ்ரான் என்பவன்.

அதன் பின்பு இந்த நாட்டின் நிலைமையினை தலைகீழாக புரட்டி போட்டது தமிழ்,சிங்கள பிரிவினைவாதமாக இருந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாற்றப்பட்டது.மாற்றியவர்கள் அரசியல்வாதிகளை விட இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் வர்த்தகர்கள், புத்திஜீவிகள் மதகுருமார்கள் என சகல தரப்பினரும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்பு மிக வேகமாக பிரச்சாரம் செய்து கொண்ட நிலையில்தான் எங்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறியது. 
டாக்டர் சாபி மீது நடைபெற்ற விடயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் என தொடர் கதையாக சென்ற போதுதான் கடைசியில் கண்டி தலதா மாளிகையில் அதுரலிய ரத்னதேரர் அவர்களினால் இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டி இருந்த பொழுதுதான் நான் குறிப்பாக அதில் எச்சரிக்கையடைந்து இது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் எனவே இது அடுத்த கட்டமாக இனத்திற்கு எதிரான போராட்டமாக மாறுவதற்கு இடையில் நாம் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தேன் அதனால் பதவி விலகி இருந்தோம்.ஆனால் நான் விரும்பினேன் இந்த இராஜினமா இந்த ஜனாதிபதி தேர்தல் வரையும் நீடித்து இருக்க வேண்டும்.

இந்த முஸ்லிம் சமூகம் நடுநிலை சமூகமாக இருக்க வேண்டும் நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை இரண்டு தரப்பு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைப்போம் என்ற உத்வேகம் என்னிடம் இருந்தது அது சம்மந்தமாக நான் சகலரிடமும் பேசினேன் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இறுதியில் நான் மட்டும் அமைச்சு பதவி எடுக்காமல் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருந்தேன்.

எனவே எமது நாட்டில் உள்ள 20 இலட்சம் முஸ்லிம் மக்களின் அரசியல் அமைப்பு சார்ந்த உரிமைகள்,மற்றும் வாழும் உரிமைகள் இந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எவ்வாறான அடிப்படையில் கையளப்படுமோ! என்ற பயமும்,பீதியும் எங்களிடம் உள்ளது.எனவே எமது எதிர்காலம் சம்மந்தமாக நாங்கள் இன்னும் இன்னும் தனிமனித தேவைகளுக்கு அப்பால் ஒரு சமூகமாக ஒரு கொள்கை வகுப்பாளர்களை கொண்டு இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நூருல் ஹுதா உமர் , சார்ஜுன் லாபீர் )


UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
READ MORE | comments

பார்த்து எழுத அனுமதிக்காத ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள்!


பரீட்சையின் போது தாம் மறைத்து வைத்திருந்த சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது, ஆத்திரம் கொண்ட மாணவர்களும், அவர்களுடன் வந்த குழுவினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த மேற்பார்வையாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் கடந்த 25 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

மொத்தமாக 218 மாணவர்கள் தத்தமது பிரிவுகளுக்கான பரீட்சைகளை எழுதும் நிலையில், அங்கு 12 பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வேறு கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் ஆவர்.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, சில மாணவர்கள் மறைத்து வைத்திருந்த சிறுகுறிப்பு துண்டுகளை பரீட்சை மேற்பார்வையாளர்கள் கைப்பற்றியிருந்தனர்.

ஆயினும், பரீட்சை நடந்து கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த காகிதத் துண்டுகளை வெளியில் வைத்துக் கொண்டு, கேள்விகளுக்கான பதில்களை எழுதிக் கொண்டிருந்தாகவும், தாங்கள் அந்த மாணவர் முறைகேடு செய்வதைக் கண்டுபிடித்ததாகவும் பரீட்சை மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை அடுத்து, குறித்த மாணவரை தொடர்ந்தும் பரீட்சை எழுத அனுமதிக்காத மேற்பார்வையாளர்கள், அவரை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.

இதனை அடுத்து, பகல் 12 மணி அளவில் தம்மிடம் வந்து மேற்படி மாணவர் சச்சரவில் ஈடுபட்டதாகவும், பின்னர் அங்கு வந்த சுமார் 30 பேரைக் கொண்ட குழுவினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பரீட்சை மேற்பார்வையளர் ஒருவரும், உதவி மேற்பார்வையாளர் இருவரும் காயமடைந்த நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"எங்கள் மீது அவர்கள் தடிகள் கொண்டு தாக்கினர். நாங்கள் தடுத்த போது, தொடர்ந்தும் அவர்கள் தாக்கினார்கள். அவர்களில் சிலர் தலைக்கவசம் அணிந்து தமது முகத்தை மறைத்திருந்தனர்," என்று, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி மேற்பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமது திணைக்களத்தின் அனுமதியின்றி தங்களுடைய பெயர் மற்றும் படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹசன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பரீட்சைக் கடமைகயில் ஈடுபடுவதற்கு மேற்பார்வையாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், திங்கட்கிழமை நடைபெறுவதற்கு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள பரீட்சையினை நடத்துவது குறித்து தாம் கலந்தாலோசித்து வருவதாகவும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ஹசன் தெரிவித்தார்.
READ MORE | comments

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை தளர்த்துமாறு கோரிக்கை
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை தளர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேன்விகே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரி சலுகைகளால் மோட்டார் வாகன இறக்குமதி மற்றும் அதன் சந்தை விலையில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் புதிய வரி சலுகைகளை அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

மட்/வின்சன் மகளீர் உயர்தர தே.பா. யின் வருடாந்த பரிசளிப்பு விழா


இதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர ,சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு , தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நாடத்தப்பட்ட நாடக போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தினை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, சிறந்த புள்ளிகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான
மாணவர்களுக்கும் பரிசில்களும் ,சான்றிதழ்களும் , வெற்றிக்கின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரின் இரண்டாவது செயலாளர் கலாநிதி திருமதி எஸ் . அதிரா , மூன்றாவது செயலாளர் திருமதி .

சஞ்சனா மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , வலயக் கல்விப்பணிப்பாளர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

கல்முனை கிட்டங்கி வீதியினுடாக பயணிக்கும் பொது மக்களின் கவனத்திற்க்கு

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக கல்முனை -நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கி
வீதியினுடாக வெள்ள நீர் கடுமையா ஊடறுத்து செல்வதனால் அவ் வீதியில் பயணிக்கும் பொது மக்கள் போக்குவரத்து செய்வதை தவிர்துக்கொள்ளுமாறும் அல்லது அவசியம் பயணிக்க வேண்டியவர்கள் மிகவும் அவதானத்துடன் கடந்து செல்லுமாறும் கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரக்கீப் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
READ MORE | comments

குப்பைகளால் நிரம்பும் மாளிகா வீதி தோணா : மழைக்காலத்தில் துன்புறும் மக்கள் !!
- நூருல் ஹுதா உமர் -

கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சாய்ந்தமருது, மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச மக்கள் வீசும் திண்மக்கழிவுகளால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் பாரிய சிக்கல்களுக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வருகிறார்கள்.

கல்முனை மாநகர சபை திண்மக்கழிவகற்றலில் உள்ள அசமந்தம் காரணமாக சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் தினமும் இரவு நேரங்களில் குறித்த தோணாவில் தமது அன்றாட குப்பைகளை வீசுவதனால் பாரிய துர்நாற்றம் வீசுவதுடன் , கட்டாக்காலி நாய்களின் தொல்லையும் அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பிரதேச சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பல நோய்களுக்கு ஆளாவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பிரதேச வடிகான்கள் சகலதும் இத்தோனாவில் முடிவடைவதுடன் வீதியால் வரும் மழைநீரும் அத்தோனாவில் வந்து சேர்கிறது. மழை காலம் ஆரம்பித்துள்ளதால் குப்பைகள் நிரம்பி நீர் ஓட்டம் குறைந்துள்ளதால் அப்பிரதேசத்தில் பாரிய துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. 

இந்த தோணாவிற்கான நிரந்தர தீர்வுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தும் முறையான வேலைத்திட்டங்கள் இல்லாமையால் பல தசாப்தங்களாக மக்கள் தொடர்ந்தும் பாரிய இன்னல்களை அனுபவித்துவருவதாகவும் இது தொடர்பில் எல்லோரும் பாராமுகமாக இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு அண்மையில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலை, சுகாதார மத்திய நிலையம், பிரபல உணவகங்கள், மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளதால் கல்முனை மாநகர சபை, சுகாதார நிறுவனங்கள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துக்கின்றனர். 


UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
READ MORE | comments

மனோகணேசன் மன்னிப்பு கேட்க வேண்டும் : இழப்பீட்டுக்கான ஆய்வு மையம் கோரிக்கை !!


- நூறுல் ஹுதா உமர் -


முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் மீது நடந்து கொண்ட முறையற்ற சம்பவம் முதல் கடந்த அரசில் முஸ்லிங்களுக்கு எதிராக செய்த சகல முறையற்ற அரசியல் முன்னெடுப்பு தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்திடம் முன்னாள் சமூக நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் மன்னிப்பு கோர வேண்டும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

கடந்த வாரம் தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா , மனோ கணேசன் ஆகியோர்களுக்கிடையிலான கருத்து பரிமாற்றத்தின் போது நடைபெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் இழப்பிட்டுக்கான ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் தமது பக்க உரையாடல்களை தொடர்ந்துகொ திருந்த போது திடீரென எழுந்த மனோகணேசன் அவர்கள் ஆவேசப்பட்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது தண்ணீரை வீசினார். "தோட்டகாட்டான்" எனும் சொல்லாடல் மலையகத்தை சேர்ந்த இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் தொன்று தொட்டு பாவித்து வரும் சாதாரண சொல்லாடல்.

அன்று அந்த ஊடகத்தில் நடைபெற்றது திட்டமிடமிடப்பட்டவகையில் செய்யப்பட்ட ஒன்றாகும். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பேசுவதற்க்கு இடையூறு செய்துகொண்டே வந்த குறித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இறுதியில் அதை தெளிவாக வெளிக்காட்டினார்.

கடந்த அரசில் முஸ்லிங்களை இலக்கு வைத்து பல முன்னெடுப்புக்களை செய்துவந்த மனோ கணேசன் அவர்கள் வழக்கமாக மக்களின் பாவனையில் இருந்து வந்த சொல்லை பூதாகரமாக்கி அரசியல் ஆதாயம் தேடும் பணியையே அங்கு செய்தார்.

வழமையாக மக்கள் கண்டியான், கொழும்பான், யாழ்பாணி, சோனி, சிங்களவன் என்பதுபோல அதுவும் ஒன்று. ஓரிடத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும் போது வெள்ளம் என்றும் அது படர்ந்து இருந்தால் வெள்ளகாடு என்றும் அழைப்பது போன்று தோட்டப்பரப்பு காடு போன்று விரிந்து இருந்தமையால் தோட்டக்காடு என்று அன்று முதல் இன்றுவரை இலக்கியங்களிலும், பேச்சிலும் இருந்து வருகிறது. அது இழி சொல்லாக இருந்திருந்தால் கடந்த அரசில் அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்தபோது மனோ கணேசன் அவர்கள் அதை தடைசெய்திருக்க வேண்டும்.

கடந்த அரசில் அமைச்சராக இருந்து கொண்டு மனோ கணேசன் அவர்கள் முஸ்லிங்களை நிந்திக்கும் எத்தனையோ வேலைத்திட்டங்களை செய்திருக்கிறார், எத்தனையோ சொல்லாடல்களை பயன்படுத்தியும் உள்ளார். அவை அடங்களாக முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களிடமும் பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் நடந்துள்ளார்.
"தோட்டகாட்டான்" எனும் சொல்லாடல் மலையக மக்களின் கௌரவத்திற்க்கு பங்கம் விளைவிப்பதாக கருதினால் திரு.மனோகணேசன் அவர்களின் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சியும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இனிவரும் காலங்களில் எங்கும் அந்த சொல்லை பயன்படுத்த கூடாது எனும் பிரகடனத்தை முன்மொழிய வேண்டும்.

ஆகவே முன்னாள் அமைச்சர் திரு மனோகணேசன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாங்கள் தெரிவிக்க விரும்புகிறேன். என்றார்.

READ MORE | comments

யாழ் மாநகரசபைக் கூட்டுக் குலைந்தது!!யாழ்ப்பாண மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் 28.11.2019 ஈபிடிபி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரகசிய ஒப்பந்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.மேலும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு மறைமுக ஆதரவாக புளெட்டும் வேறு சில உறுப்பினர்களும் சாணக்கியமாக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளமல் தவிர்த்துக் கொண்டனர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் வட,கிழக்கு பிராந்திய கட்சியாக திகழும் தமிழரசுக் கட்சி கடந்த உள்ளுராட்சி தேர்தலிலிருந்து,ஐக்கிய தேசியக் கட்சி,ஈபிடிபி,முஸ்லீம்காங்கிரஸ்,சுதந்திரக் கட்சி,பொதுஜனபெரமுன,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து வடக்கு கிழக்கிலே 39 உள்ளுராட்சி மன்றங்களை தமிழரசுக் கட்சி தலைமையில் கூட்டாட்சி செய்து வருகின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் எதிரொலிதான் யாழ் மாநாகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு பிரதான காரணமாகும்.இது தமிழரசுக் கட்சிக்கு விழுந்த இரண்டாவது அடியாகும்.

உள்ளுராட்சி மன்ற சட்டத்தின்படி இரண்டு வரவு செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டாலும் சபை தவிசாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் தோற்கடிக்கபட்ட வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்பது நியதி. ஆனால் இதற்கு பின்பாக சபை தவிசாளருக்கு எதிராக சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பாண்மையால் நிறைவேற்றப்பட்டால் சபை தலைவர் பதவியை இழக்க நேரிடும்.இவ்விடயம் தமிழரசுக் கட்சி ஆட்சி செய்யும் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களிற்கும் பாரிய சவாலாக அமையப்போகின்றது.

இவ்வாறாக மாநகர முதல்வர் ஆர்னோல்டுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேணை கொண்டுவரப்பட்டு அவர் பதவியிழந்த பின்பு ஈபிடிபியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்த ஓர் ஆட்சியே யாழ் மாநகரசபையில் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.மேலும் ஏற்கனவே யாழ் மாநகர சபை ஆட்சி அமைப்பதற்காக முன்னணியினர் ஈபிடிபியின் ஆதரவை கோரியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல வருடகாலமாக தமிழ்த் தேசியம் பேசிவந்த தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈபிடிபி கட்சியுடன் வெளிப்படையானதும் மறைமுகமானதுமான உறவை வைத்திருந்தது யாழ் மாநகரசபை வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அம்பலத்திற்கு வந்தள்ளது இது இவ்விரண்டு கட்சிகளினுடைய கொள்கை வழியிற்ற சுயலாப கட்சி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என வெளிப்டையாக தெரியவருகிறது.
READ MORE | comments

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 பேர் இணைந்து சபாநாயகருக்கு அனுப்பிய முக்கிய கடிதம்!

Thursday, November 28, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு அக்கட்சியைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்து பதிவு செய்து கடிதமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த கடிதம் தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய இன்றைய தினம் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலைமை வலுத்துவருகின்றது.
கட்சியின் தலைமைத்துவத்தையும், எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ கோரிவரும் நிலையில், இதுவரை அப்பதவிகளை கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக சமரசப் பேச்சுக்களுக்கான ஏற்பாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், அந்த பேச்சை சஜித் பிரேமதாஸ நிராகரித்துவிட்டார்.
இதன் காரணமாக கட்சிக்குள் இருக்கும் நெருக்கடி நிலை தொடர்ந்தும் உக்கிரமடைந்துள்ளது. இந்த நிலையில், எதிர்கட்சித் தலைமை பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்து பதிவு செய்து கடிதமொன்றை சபாநாயகருக்கு நேற்று மாலை அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதத்தின் பிரதியை சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு இன்று வியாழக்கிழமை அனுப்பிவைத்திருக்கின்றார்.
வெகுவிரைவில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை கட்சிக்குள் முடிவு செய்து தனக்கு அறிவிக்கும்படி சபாநாயகர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை அவ்வாறு விரைவில் தனக்கு அறியப்படுத்தும் பட்சத்தில், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதனை அறிவிப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைப்பாளராக வியாழேந்திரன்!! யாழ்பாணத்திற்கு அங்கஜன்!!

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர்களாக பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் இன்று (27) வழங்கப்பட்டன.
இந்தவகையில் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் வருமாறு,
கொழும்பு விஜேதாச ராஜபக்ஸ
கம்பஹா சுதர்சனி பெர்ணாந்து புள்ளே
களுத்துறை பியல் நிசாந்த
கண்டி கலாநிதி சரத் அமுனுகம
மாத்தளை லக்ஸ்மன் வசந்த பெரேரா
மொனராகலை சுமேதா பீ. ஜயசேன
நுவரெலியா முத்து சிவலிங்கம்
காலி சந்திம வீரக்கொடி
மாத்தறை நிரோசன் பிரேமரத்ன
யாழ்ப்பாணம் அங்கஜன் ராமநாதன்
மன்னார் காதர் மஸ்தான்
மட்டக்களப்பு எஸ். வியாழேந்திரன்
அம்பாறை சிறியானி விஜேவிக்ரம
அனுராதபுரம் வீரகுமார திஸாநாயக்க
பதுளை தேனுக விதானகமகே
கேகாலை சாரதீ துஸ்மன்த மித்ரபால
இரத்தினபுரி துனேஸ் கன்கந்த
ஆகியோரே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களாவர்.
READ MORE | comments

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு !!!!

(அஸ்ஹர் இப்றாஹிம் )

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , (தேசிய பாடசாலை ),  களுவாஞ்சிகுடி  மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்றினை மக்கள் வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை , கிளை முகாமையாளர் என்.மதன சாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று ( 27) இடம்பெற்றது.
இப்பாடசாலையிலிருந்து 122 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 114 மாணவர்கள் 70 க்கு மேல் புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன் வெட்டுப் புள்ளிக்கு மேல் 30 மாணவர்கள் பெற்று புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையைச் சேர்ந்த பழனித்தம்பி பவுஸ்தினி எனும் மாணவி 193 புள்ளிகளைப்  பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் நிலையிலும் , கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது இடத்தினையும் பெற்று சாதனையை ஏற்படுதியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் , ஆசிரியர்கள், வங்கி உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாஸ எங்கே?

சமகால அரசியல் செயற்பாடுகளில் இருந்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ விலகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கிய கட்சித் தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானமிக்க கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் சஜித் பிரேமதாஸ வராமையினால் அது இரத்துச் செய்யப்பட்டது.
இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கும் ரணில் விக்ரமசிங்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன், கட்சியின் தலைவராக தொடர்ந்து செயற்பட போவதாக அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக விரக்தியடைந்த சஜித் அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுக்கியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பலத்த சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ கலந்துரையாடல்களை புறக்கணித்தமையினால் இந்த முடிவு சபாநாயகரினால் எட்டப்பட்டதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
READ MORE | comments

மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி மாணவர்கள் தமிழ் தினப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை

Monday, November 25, 2019

அகில இலங்கை கர்நாடக சங்கீத தமிழ் கீர்த்தனை போட்டியில் குழுப்பாடலிலும்,   தமிழ்ப் பதப்போட்டிலும், மாகாண மட்டத்தில் 1 ஆம்இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள்
READ MORE | comments

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள தீர்த்தக்குளம் ஒன்றில் குளித்துக்கொண்டிருந்தபோது காணாமல்போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி தீர்த்தக்கேணியில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது குளத்தின் சகதிப்பகுதிக்குள் நான்கு இளைஞர்கள் சிக்கியுள்ளனர்.
இதன்போது அருகில் இருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் ஒருவர் காப்பாற்றப்பட்ட அதேவேளையில் மூன்று பேர் காணாமல்போயிருந்தனர்.

குறித்த குளத்தில் நீர்மட்டம் அதிகமாக காணப்பட்டதனால் தேடுதல் முயற்சிகள் மிகவும் கஸ்டமான நிலையில் குறித்த பகுதி இளைஞர்களினால் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேசசபையினால் குளித்த குளத்தில் இருந்து நீர்வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் அப்பகுதிய சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குறித்த மூவரின் சடலங்களும் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட சடலங்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கள்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் ஆரையம்பதி,செல்வாநகர் கிழக்கினை சேர்ந்த சு.தர்சன்(20வயது),கே.திவாகரன்(19வயது),எஸ்.யதுர்சன்(19வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதிpல் தர்சன் திருமணம் முடித்து நான்கு மாதங்களே கடந்துள்ள நிலையில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மூன்று இளைஞர்களின் மரணம் காரணமாக மண்முனைப்பற்று பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |