மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடியில் சிரமதானப் பணி

Sunday, December 31, 2017

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
2018 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவுள்ள நிலையில் பாடசாலை வகுப்பறை மற்றும் சுற்றுச் சூழல் சுத்தமாக்கும் சிரமதான பணி இன்று 31) பட்டிருப்பு தேசிய  பாடசாலைகளுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.


நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு அற்ற பாடசாலை சூழலைப் பேண வேண்டும் என்ற கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய இந்த சிரமதான பணி பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போது பிரதி அதிபர்கள்ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

READ MORE | comments

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்லுமாறு கட்டாயப்படுதுதினால் முதலாம் திகதி முதல் பணி பகிஸ்கரிப்பு: இ.போ.ச தொழிற்சங்கம் தெரிவிப்பு

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சையின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
பேரூந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ளது. இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் முதலாம் திகதியில் இருந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு எம்மையும் செல்லுமாறு தெரிவித்ததுடன் பழைய பேரூந்து நிலையத்தினை மூடுமாறும் தெரிவித்துள்ளார்.
இதன்போது எமக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் வேறு பலர் இவ்விடயத்தில் சம்பந்தப்படாதவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். 1800 மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட எமது சங்கத்தினை வெளியேறுமாறு தெரிவித்து முதலமைச்சர் கூட்டத்தை நடத்தியதனால் எம்மை அவமதித்து விட்டார்.
இந் நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஓர் நீதியரசராக இருந்தவர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந் நிலையில் நாம் கடந்த 53 வருடங்களாக செயற்பட்டு வரும் பழைய பேரூந்து நியைலத்தில் இருந்து எம்மை வெளியேற்ற கோருவது நியாயமற்றது. நாம் 2018 ஆம் ஆண்டுக்கான நிதியை நகரசபைக்கு செலுத்தியுள்ளோம். எனினும் அப்பணத்தை மீண்டும் எமக்கு செலுத்திவிடு;டு எம்மை வெளியேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பேரூநது நிலையத்திற்கு செல்லுமுர்ற தெரிவிக்கின்றனர்.
எனவே எமது சேவைகளை புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து செயற்படுத்துமாறு தெரிவித்தால் எமது தொழிலாளர்களின் நலன்கருதி முதலாம் திகதியில் இருந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பில் 27 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி

1990ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு தரப்பினரின் முகாமாக இருந்துவந்த சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணி பொலீஸ் திணைக்களத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீள ஒப்படைக்கப்பட்டது.1990ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த தனியார் காணி பாதுகாப்பு தரப்பினரால் முகாமாக பயன்படுத்தப்பட்டுவந்தது.
இந்த நிலையில் மயிலம்பாவெளியில் சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) 2006 காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் பொழுதே இக்காணியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது.
அதன் பின்பு 2009 காலப்பகுதியில் இராணுவம் வெளியேறிய நிலையில், பொலீஸ் திணைக்களம் இக்காணியை பொறுப்பெடுத்தது (03 ஏக்கர். 2013 காலப்பகுதி முதல் இக்காவலரணை மீள ஒப்படைக்குமாறு சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இது சம்பந்தமாக மேன்மை தங்கிய ஐனாதிபதி, அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், தேசிய பொலீஸ் ஆணைக்குழு, மனிதஉரிமைகள் ஆணைக்குழு என்பவற்றிற்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் 2016 கார்த்திகை மாதம் சட்டமும் ஒழுங்கும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு இக்காணியை சுவிகரிப்பதற்கு, வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீட்டை கோரியிருந்த செய்தியை தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கையின் பிரகாரம் அறிய முடிந்தது.
இதனைத் தொடர்ந்து 31.12.2017 அன்று சுவிகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி குறிப்பிட்ட பொலீஸ் காவலரண் அமைந்துள்ள இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஞா.சிறிநேசன் (பா.உ), வியாழேந்திரன் (பா.உ), திரு.கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் இவ்விடயத்தை கோவிந்தன் கருணாகரன் தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் 13.12.2017 அன்று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸ் ஐனாதிபதி செயலகத்திற்கு நேரடியாகச் சென்று,
இவ்விடயத்தின் தொடர்ச்சியான இழுத்தடிப்பு நடவடிக்கைகள் பற்றி சுட்டிக்காட்டி 31.12.2017 க்கு முன் இக்காணியை விடுவிக்க ஆவண செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு அமைவாக இன்று காலை று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த காணியை மீள பெறுவதற்கு குரல்கொடுத்த அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கும் இந்த காணியை மீள வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கையெடுத்த ஜனாதிபதிக்கும் று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸ் இதன்போது நன்றி தெரிவித்தார்.
DSC07240DSC07242DSC07245DSC07252DSC07257DSC07270DSC07287
READ MORE | comments

சந்திரிகாவுக்கு அதிகாரம் இல்லை! - போர்க்கொடி தூக்கும் அமைச்சர்

அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு இல்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கம் தொடர்பில் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இரண்டு வருட காலத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், குறித்த உடன்படிக்கையை தொடர்ந்தும் நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்.
டளஸ் அலகப்பெருமவின் இந்தக் கூற்றை நிராகரித்துள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூட்டு உடன்படிக்கையை நீடிப்பது தொடர்பான பணிப்புரைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதே நேரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் 2018ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி நல்லிணக்க அரசாங்கத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை நீடிப்பு குறித்து தீர்மானமெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

வடமாகாண முதல்வருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் 2000 இபோச ஊழியர்கள்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தன்னிச்சையான முடிவுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம் எனத் தெரிவித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நாளை தொடக்கம் பணிப் புறக்கணிப்பில் குதிக்கப் போவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் க.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
"வவுனியா புதிய பேருந்து தரிப்பிட விவகாரம் தொடர்பில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 6 பேர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் கடந்த 27ஆம் திகதி பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேசி உரிய தீர்வைக் கண்டு மன்றுக்கு வரும் 3ஆம் திகதி அறிவிக்குமாறு வடபிராந்தி ஒன்றிணைத்த தொழிற்சங்கத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள், வடக்கு மாகாண மாவட்ட ரீதியாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோரை அழைத்தார். அதில் கலந்து கொள்ள அழைப்பு கிடைக்காத போதும் போக்குவரத்துச் சபை அதிகாரிகளுடன் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாகவும், அதிகார அதட்டல் போக்கையும் கடைப்பிடித்தார். வவுனியா பேருந்து நிலைய விவகாரத்தில் தொழிற்சங்கத்துக்கு இடமில்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிராக வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களும் நாளை போராட்டத்தில் குதிக்கின்றனர். இத்றகு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்" என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் க.அருள்பிரகாசம் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

2017இல் 2816 பேரைப் பலியெடுத்த விபத்துகள்!

இந்த ஆண்டில் இதுவரை 2816 பேர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக வீதிப் பாதுகாப்பு தேசிய சபை தெரிவித்துள்ளது. வாகன விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, முச்சக்கர மற்றும் கார் விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விடக் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

துவாரகனின் சாதனை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் சாதனை! - அனந்தி

கல்வி பொதுத்தராரத உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகனின் சாதனை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் சாதனை என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத்தராரத உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனைப்படைத்துள்ள பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை நேரில் சென்று வாழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,கடுமையான யுத்த சூழல் மற்றும் பொருளாதாரத் தடைக்கு மத்தியிலும் குப்பி விளக்கில் கல்வி கற்ற காலங்களில் வட மாகாணம் கல்வி செயற்பாடுகளில் இலங்கையில் முதன்மை மாகாணம் என்ற பெருமையைப் பெற்றிருந்தமை யாவரும் அறிந்ததே.
போருக்கு மத்தியிலும் புலிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தியிருந்தமையே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர் திட்டமிட்டு எமது அறிவுத்தளம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. மது, போதைப் பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வருவதன் ஊடாக மாணவர்களாக இருக்கும் இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதனால் இலங்கையில் முதன்மை மாகாணமாக இருந்துவந்த வட மாகாணம் இன்று கடைசி மாகாணமாக ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது.
இவ்வாறான நிலையிலும் துவாரகன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதை அறிந்த போது எனது வீட்டில் ஒருவர் சாதனை படைத்ததாக எண்ணி பெருமைப்பட்டேன். இதே மனநிலையில் தான் எல்லோரும் உள்ளார்கள். அந்த வகையில் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சாதனையாக துவாரகனின் சாதனை அமைந்துள்ளது.
இதே உத்வேகத்துடன் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்ப்பதுடன் இங்கேயே சேவையாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
READ MORE | comments

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நீடிப்பு!

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த காலஅவகாசத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது. எதிர்வரும் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கால அவகாசம் இம்மாதம் 31ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், 1949ம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என, அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் சாதித்த யாழ். போதனா வைத்தியசாலை!

யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக நடத்தப்பட்ட இருதய சத்திர சிகிச்சை அண்மையில் வெற்றியடைந்திருந்தது. இந்த சாதனையால், இலங்கையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை நடைபெறும் 4 அரச வைத்தியசாலைகளில் ஒன்றாக யாழ்.போதனா வைத்தியசாலை உயர்ந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட திறந்த இருதய சத்திர சிகிச்சை முழுமையாக மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவி மற்றும் ஆலோசனை வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 20, 21ஆம் திகதிகளில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையில் முதற்தடவையாக இதய நுரையீரல் மாற்றுவழி இயந்திரத்தினுடனான அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கு சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னர், கடந்த 1969 – 1970 காலப்பகுதிகளில் Dr.A.T.S.Paul தலைமையிலான குழு கொழும்பில் இருந்து வந்து யாழ். போதனா வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்றைய காலப்பகுதியில் இதயத்தின் செயற்பாட்டை நிறுத்தி மேற்கொள்ளும் சத்திரசிகிச்சைக்குரிய நவீன வசதிகள் காணப்படவில்லை.
தற்போது, அதிநவீன முறையில்நீண்டநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சையை ஆரம்பிக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் போதியளவு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளனர்.
புதிய ஆண்டில் முழுமையான ஆளணியினரை சுகாதார அமைச்சு நியமனம் செய்வதோடு புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
இதேவேளை, சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான இருதய சத்திரசிகிச்சைக்கான Cardiopulmonary Bypass Machine ஐ கொள்வனவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
தற்போது உள்ள வளங்களைக் கொண்டு போதனா வைத்தியசாலையில் வாரத்திற்கு 2 சத்திர சிகிச்சைகளை மாத்திரமே செய்து கொள்ளகூடியதாயுள்ளது.இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக தற்போது 360 இற்கும் மேற்பட்டவர்கள் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

READ MORE | comments

மகிந்த 2ஆம் திகதி விடுக்கும் முக்கிய அறிவித்தல் என்ன?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 2ஆம் திகதி முக்கிய அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாகவே அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்கள் மாநாட்டின் போதே அவர் இந்த அறிவித்தலை விடுக்கவுள்ளார்.
READ MORE | comments

சிரியாவின் ரக்காவில் பாரிய மனித புதைகுழி

பொதுமக்களினதும் சிரிய படையினரினதும் உடல்கள் அடங்கிய இரு பாரிய புதைகுழுகளை ரக்கா நகரில் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி எல்லையிலுள்ள நகரமொன்றை சேர்ந்த மக்கள் வழங்கிய தகவல்களை தொடர்ந்தே இந்த மனித புதைகுழிகள் இருப்பது தெரியவந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மிகப்பெரும் புதைகுழிகள் என்பதால் உடல்களை அகற்றும் பணிகள் சில நாட்களிற்கு நீடிக்கலாம் என சிரியாவின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்
ஐஎஸ் அமைப்பின் தலைநகராக விளங்கிய ரக்காவிலிருந்தே உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பிணை முறி விவகாரம் : ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும்?

சர்ச்சைக்குறிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது அரசியலில் புரட்சிகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக ஜனவரியிலிருந்து அது தொடர்பான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் துரும்பாக பயன்படுத்தப்பட்டு அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. -
READ MORE | comments

கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்தம் இன்றுடன் காலாவதியாகிறது : ஆட்சி தொடருமா?

ஐக்கிய தேசிய கட்சி – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்தம் இன்று 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை தொடர்வதா , இல்லையா என்பது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. ஆனால் இது வரை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பெப்ரவரியில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் அது தொடர்பாக தீர்மானிக்குமாறு கட்சியை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனபோதும் இன்று அல்லது நாளைய தினம் சுதந்திரக் கட்சி அது தொடர்பாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்களும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும் , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இரண்டு ஆசனங்களும் , ஜே.வி.பிக்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்தன. இதன்படி எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைத்திருக்கவில்லை. இதனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்தப்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 2017 டிசம்பர் 31ஆம் திகதி வரை கூட்டு அரசாங்கத்தை தொடர்வதற்கும் அதற்கு பின்னர் தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்து. என்பது குறிப்பிடத்தக்கது.-
READ MORE | comments

ரஸ்யாவின் ஒத்திகையால் பதட்டமடைந்து தனது விமானதளத்தை எச்சரித்த அவுஸ்திரேலிய- வெளியாகின புதிய தகவல்கள்

Saturday, December 30, 2017

ரஸ்யாவின் அதிநவீன குண்டுவீச்சுவிமானங்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் ஒத்திகையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலிய விமானப்படைத்தளமொன்று உசார் நிலையில் வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
டார்வினில் உள்ள விமானப்படைதளமொன்றினையே அதிகாரிகள் உசார்படுத்தியுள்ளனர்.
டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்காலப்பகுதியில் ரஸ்யாவின் இரு டியு95 எம்எஸ்குண்டுவீச்சுவிமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவிலிருந்தே இந்த விமானங்கள் புறப்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.பப்புவாவிற்கு வடக்கே உள்ள இந்தோனேசியாவின் பியாக் விமான தளத்திலிருந்து ரஸ்யா விமானங்கள் பறந்துள்ளன.
எனினும் சர்வதேச கடற்பரப்பின் மீதே தமது விமானங்கள் சென்றதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்தே அவுஸ்திரேலியா தனது விமானப்படை தளத்தை உசார்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த ஒத்திகை ரஸ்யா பசுவிக்கில் தனது நடவடிக்கைகளை விஸ்தரிப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
READ MORE | comments

மட்டக்களப்பில் காணியை ஒப்படைக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை

சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணியை மீள ஒப்படைப்பதற்கு பொலீஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுவாமி ராம்தாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் இரா.முருகதாஸ் தெரிவித்தார்.இது தொடர்பில் இன்று சனிக்கிழமை மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
மயிலம்பாவெளியில் சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) 2006 காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் பொழுதே இக்காணியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அதன் பின்பு 2009 காலப்பகுதியில் இராணுவம் வெளியேறிய நிலையில், பொலீஸ் திணைக்களம் இக்காணியை பொறுப்பெடுத்தது (03 ஏக்கர். 2013 காலப்பகுதி முதல் இக்காவலரணை மீள ஒப்படைக்குமாறு சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இது சம்பந்தமாக மேன்மை தங்கிய ஐனாதிபதி, அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், தேசிய பொலீஸ் ஆணைக்குழு, மனிதஉரிமைகள் ஆணைக்குழு என்பவற்றிற்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் 2016 கார்த்திகை மாதம் சட்டமும் ஒழுங்கும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு இக்காணியை சுவிகரிப்பதற்கு, வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீட்டை கோரியிருந்த செய்தியை தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கையின் பிரகாரம் அறிய முடிந்தது.
இதனைத் தொடர்ந்து 31.12.2017 அன்று சுவிகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி குறிப்பிட்ட பொலீஸ் காவலரண் அமைந்துள்ள இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஞா.சிறிநேசன் (பா.உ), வியாழேந்திரன் (பா.உ), திரு.கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் இவ்விடயத்தை கோவிந்தன் கருணாகரன் தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் 13.12.2017 அன்று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸ் ஐனாதிபதி செயலகத்திற்கு நேரடியாகச் சென்று, இவ்விடயத்தின் தொடர்ச்சியான இழுத்தடிப்பு நடவடிக்கைகள் பற்றி சுட்டிக்காட்டி 31.12.2017 க்கு முன் இக்காணியை விடுவிக்க ஆவண செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் பயனாக இக்காணியை ஒப்படைப்பதற்காக பொலீஸ் திணைக்களம் இக்காணிக்குள் அவர்களால் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றி அவர்களுக்கு சொந்தமான பொருட்களை இடமாற்றுவதை இன்று (30.12.2017) அவதானிக்க கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
READ MORE | comments

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி ஜனவரியில்

Friday, December 29, 2017

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென்று போட்டி ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் மஹின் அடுவரல்ல தெரிவித்துள்ளார்.
15 வயதிற்கு உட்பட்ட சிங்கர் வெற்றிக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுப் போட்டிக்கமைவாக இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு அமைய இந்தப் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் தலையீட்டில் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர், போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
READ MORE | comments

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஒன்று

அடுத்த வருடத்தில் புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஒருநாள் செயலமர்வு ஒன்றை நடத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்தள்ளது.
இந்த செயலமர்வில் ஒவ்வொருவரும் கலந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. -
READ MORE | comments

சேதமடைந்த நாணயத்தாள்கள் இருந்தால் 31க்கு முன் மாற்றிக்கொள்ளுங்கள்

கிழிந்த மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்
READ MORE | comments

சுயதேடலே எனது வெற்றியின் இரகசியம்: பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் துவாரகன்

படிப்பிற்கென ஒவ்வொரு இடமும் ஏறி இறங்கி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் நேரத்தை வீட்டில் ஒதுக்கி படித்தால் நல்ல நிலைக்கு வரமுடியும் என்று தனது வெற்றியின் காரணத்தை பகிர்ந்து கொள்கிறார் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள வடமராட்சி ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன்.
வடமராட்சி புலோலியில் அப்பா சிறிதரன், அம்மா அமுதா, தங்கை அபிநயா, பேரன் செல்லையா, பேத்தி சிவக்கொழுந்து என்ற சிறிய குடும்பம் தான் துவாரகனின் குடும்பம். வீட்டிலிருந்து ஈருருளியில் பாடசாலைக்குச் சென்றுவந்த துவாரகன் தான் படித்த காலத்தில் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையத்திற்கும் செல்வதையன்றி வேறு எந்த இடங்களுக்கும் அநாவசியமாக வீட்டிலிருந்து வெளிக்கிடுவதில்லை என்கிறார். வீட்டிலிருந்து மிகுதியாயுள்ள நேரங்களை படிப்பிற்கென ஒதுக்கியது தனது வெற்றிக்கான பலமிக்க அத்திவாரமாக இருந்ததாக அவர் கூறுகின்றார்.
அதிகமான புத்தகங்களைப் பெற்றோர் மூலமாகப் பெற்று கல்விக்கென உபயோகப்படுத்துவதும், கிடைக்கும் நேரங்கள் எல்லாம் சிக்கலான கணக்குகளையும் சமன்பாடுகளையும் செய்து பயிற்சி எடுப்பதும் மட்டுமல்லாது தேவையான பாடப்பரப்புகளை இணையம் மூலமாகத் தேடிக் கற்பதும் துவாரகனின் கல்வி முயற்சிகளாக விளங்கியிருக்கின்றன. தந்தையார் ஒரு கணினி வள முகாமையாளராக இருப்பதனால் துவாரகனின் கல்வி குறித்த இணையத் தேடுதல்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றது. தனது மகன் ஆரம்பத்திலிருந்து ஆங்கில மொழி மூலத்தில் கற்றதனால் அவர் இணையத்தில் தேடிக் கற்பதற்கு இலகுவாக இருந்ததாக துவாரகனின் தந்தை இராமநாதன் ஸ்ரீதரன் கூறுகிறார்.
அத்துடன் படிக்கின்ற காலத்தில் தாம் தமது பிள்ளையினைக் கட்டாயப்படுத்திப் படிப்பித்ததில்லை என்றும் அவராகவே உணர்ந்து படித்ததாகவும் அவர் கூறுகின்றார். கடந்த பல ஆண்டுகளாக மாலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியை யாருமே இயக்குவதில்லை என்றும் அவர் கூறுகின்றார்.
துவாரகனின் இந்த சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த அவரது வகுப்பு ஆசிரியரும் இரசாயனவியல் பாடத்தினைக் கற்பித்த ஆசிரியரும் தற்போதைய உப அதிபருமான குணசிங்கம் பிரதீபன் குறிப்பிடுகையில், “மிக நீண்ட காலத்தின்பின்னர் எமது கல்லூரிக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை இது. துவாரகன் சாதாரண தரத்தில் 8A 1C பெற்றவர். பின்னர் அவர் தனது ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் கற்றதால் இந்த வெற்றி கிடைத்தது. அவரது இந்த சாதனையைட்டு எமது பாடசாலை மிகுந்த பெருமையடைகிறது” என்றார்.
தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த பொறியியலாளராக வருவதே உயர்ந்த கனவு எனக் குறிப்பிடும் துவாரகன், கிடைக்கின்ற நேரத்தை வீணாகக் கழிக்காமல் படிப்பிற்காகவே ஒதுக்கி கற்குமாறு உயர்தர மாணவர்களுக்கு ஆலோசனையை கூறுகின்றார்.
READ MORE | comments

பொலித்தீன் தடை! மீறினால் கடும் நடவடிக்கை

ஜனவரி முதலாம் திகதி முதல் பொலித்தீன் மீதான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலித்தீன் உற்பத்தியாளர்களுக்கு கையிருப்பில் உள்ள பொலித்தீனை முடிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
இதன்படி ஜனவரியிலிருந்து அது தொடர்பான சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
READ MORE | comments

யேமனில் இருவேறு விமானதாக்குதல்களில் 70 பொதுமக்கள் பலி

யேமனில் சவுதிஅரேபியா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட இரு வேறு விமானதாக்குதல்களில் 70 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை பொதுமக்கள் நிறைந்து காணப்பட்ட சந்தைப்பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டனர் எனஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜேமி மக்கோல்டிரிக் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அர்த்தமற்ற யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் மனித உயிர்களை முற்றாக அலட்சியம் செய்கின்றன என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும் ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 109 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பில் இளைஞன் படுகொலையை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலைசெய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும்  வியாழக்கிழமை மாலை பெரியகல்லாறில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை (26-12-2017)மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
பெரியகல்லாறு ஊர்வீதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே கத்திக்குத்து கத்திக்குத்துவரை சென்றதுடன் இது தொடர்பில் தந்தையும் மகனும் கைதுசெய்யப்பட்டு ஜனவரி 11ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன் திமேசன்(23வயது)என்னும் இளைஞர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த இளைஞரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொலையினைக்கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதிகபட்சதண்டனை வழங்குமாறு கோரியும் உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள்,உறவினர்கள்,கிராம மக்கள் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை நடாத்தினர்.
குறித்த இளைஞன் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உறவினர்கள் இது தொடர்பில் முறையில் வசிhரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டதுடன் களுவாஞ்சிகுடி பொலிஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் அமைதியான முறையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து சடலம் கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
IMG_9121IMG_9133IMG_9134IMG_9156IMG_9158
READ MORE | comments

ஸ்ரீலங்கா விமான சேவையில் 18 வருடங்கள் பழைமை வாய்ந்த விமானங்கள் சேவையில் பயணிப்போரின் உயிருக்கு ஆபத்தா ?

பழைமையான விமானங்களை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய 18 வருடங்கள் பழைமையான 3 விமானங்களை அதிக விலைக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை கொள்வனவு செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சரவையின் அனுமதியின்றி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்தேயினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. விமான கொள்வனவு தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளாமல் 72 மாத குத்தகை அடிப்படையிலான ஒப்பந்தத்தில், பிரதான நிறைவேற்று அதிகாரி கையொப்பமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கான விமான நிறுவனம் தற்போது பாரிய நஷ்டத்திற்கு முகங்கொடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் விமான நிறுவனத்தை மூடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இந்நிலையில் வான் போக்குவரத்துக்கு பொருத்தமற்ற விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்ததன் மூலம், ஸ்ரீலங்கா விமான சேவையில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானமாக மாறலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முறை வெளியாகிய க.பொ.த. (உ.த) பரீட்சையில் தடைகளைத் தாண்டி சாதனை படைத்த மாணவர்கள்

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள்.

மட்டக்களப்பில் விஞ்ஞான பிரிவில்..
மட்./புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ராஜன் திபிகரன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த ராஜன் - சாரதாதேவி தம்பதியரின் புதல்வராவார்.

மட்டக்களப்பில் கணிதப் பிரிவில்..
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் சிவா விதுசனன் கணிதப் பாடப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு - கிரான்குளம் 7ஆம் வட்டாரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிவா டேஸ்ரஜனி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு கணிதப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சாதாரண கூலித் தொழிலாளியின் மகனான இவர் வறுமையிலும் சாதனை படைத்து பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் தொழில்நுட்பவியல் பிரிவில்..
மட்டக்களப்பு பட்/களுதாவளை மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தொழில்நுட்பவியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி இராசலெட்சுமி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.

விவசாயத்தை சீவனோபாயமாகக் கொண்ட சாதாரண விவசாயக் குடும்பத்தின் மகன் வறுமையிலும் சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பில் வணிகப் பிரிவில்..
வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவி சஜானி விஜயராசா வணிகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த விஜயராசா மதிமலர் அவர்களின் மகள் இவ்வாறு வணிகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

சாதாரண கூலித் தொழிலாளியின் மகள் வறுமையிலும் சாதனை புரிந்து பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில்..

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் கணிதப்பிரிவில் சாதித்த மாணவ மாணவிகளின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பொறியியல் தொழிநுட்ப துறையில் கல்வி கற்ற வில்வரெத்தினம் கதிஸ் என்ற மாணவன் 2C, 1B பெறுபேறு பெற்று மாவட்டத்தில் 13ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

முனைக்காடு கிராமத்தில் பொறியியல் தொழிநுட்ப துறையில் கல்வி கற்று மாவட்ட நிலையில் 13ஆவது இடத்தினைப் பெற்றுள்ளமை வரலாற்றில் முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கல்லடி மகளிர் விவேகானந்தா பாடசாலையில் கல்வி பயின்ற குருகுலசிங்கம் பிரஸ்ணவி என்ற மாணவி விஞ்ஞான பிரிவில் 2A, B பெறுபேறுகளுடன் மாவட்ட ரீதியில் 11ஆம் நிலையை பெற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில், கணித துறையில் கல்வி பயின்ற முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கனிஸ்ரன் என்ற மாணவன் 1A, 2B பெறுபேற்றினை பெற்று மாவட்டத்தில் 31ஆம் இடத்தினைப் பிடித்து பொறியியல் துறைக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

READ MORE | comments

ரிஷாத், சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டி.பியினரை வெளியேற தேர்தல் ஆணையாளர் உத்தரவு!

Thursday, December 28, 2017

வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஆகியோர் உடனடியாக அவற்றை மாவட்ட செயலகத்திடம் கையளிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
  
கட்சிச் செயலர்கள், பொலிஸார், தேர்தல் ஆணைக்குழுவினர் இடையிலான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டி.பியினர் மிக நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ளார்கள். இந்தக் கட்டடங்களுக்கு இதுவரையில் இவர்கள் வாடகை செலுத்தவில்லை என தேர்தல் முறைப்பாடாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, "சம்பந்தப்பட்ட தரப்பினர் மாவட்ட செயலகத்திடம் இவற்றை உடனடியாக மீள ஒப்படைக்க வேண்டும்" என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலை நடத்துவதற்கு சகல தரப்பினதும் ஒத்துழைப்பை தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார். வட்டாரத்தில் வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பது பொதுமக்களின் பொறுப்பு என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவரொட்டிகள், பதாதைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வட்டாரக் கட்சிப் பணிமனையில் மாத்திரமே பதாதை வைக்க முடியும். பொதுக் கூட்டங்களில் சுவரொட்டியும் பதாதைகளும் காட்சிப்படுத்த முடியும். தேசியக் கொடியையும், மதக் கொடிகளையும் தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்த முடியாது.வட்டாரத்தில் கட்சியொன்று ஒரு பணிமனையே திறக்க முடியும். வீட்டுக் கடன் உட்பட அரச உதவிகள் வழங்குவது நிறுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

மட்டு புனித மிக்கல் கல்லூரி மாணவன் விதுசனன் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.

படிக்கின்ற காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் நேர முகாமைத்துவத்தைப் பேணி பாடங்களை நன்றாகப் படிக்கவேண்டும். மனதில் ஒரு இலட்சியத்துடன் ஆர்வமுடன் படித்தால் கல்வியில் பல சதானைகளைப் படிக்க முடியும். எமது மாவட்டத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் நிலையை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியில 4ஆவது, 56 ஆவது என்ற நிலையில் பின்னோக்கியே நாம் செல்கின்றோம் இந் நிலையை மாற்றி மட்டக்களப்பு மாவட்டம் விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் , கலை ஆகிய துறைகளில் அகில இலங்கையில் முதலிடம் பெறவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இனி வரும் காலங்களில் பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள மாணவர்கள் தேசியரீதியில் முதலாம் நிலையை பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும் என்றார்.  
 என மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் விதுசனன் தெரிவித்தார்.  

க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் மட்டு புனித மிக்கல் கல்லூரி மாணவன் சிவா மிதுசனன் மாவட்டத்தில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார். 

இம்முறை கணிதப்பிரிவில் தோற்றிய இம் மாணவன் இரு பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்று மாவட்டத்தில் முதலாம் நிலையிலும் தேசிய மட்டத்தில் 346 ஆவது நிலையையும் பெற்றுள்ளார். 

மட்டக்களப்பு மண்முனைப்பற்று கிரான்குளம் கிராமத்தில் கணபதிப்பிள்ளை வீயில் வசிக்கும் சிவா டேஸ்ரஜனி தம்பதிகளின் மூத்த புதல்வன் விதுசனன் ஆரம்பம் முதல் கல்வியில் திறமைகாட்டிவந்துள்ளார். இவரின் தந்தை சாதாரண மேசன் (கட்டிடத் தொழிலாளி) ஆக தொழில் புரிந்தே குடும்ப சீவியத்தை நடத்திவருகின்றார்.

விதுசனன் தனது ஆரம்பக் கல்வியை கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்திலும் தரம் 6 இல் இருந்து  க.பொ.த. சாதாரணதரம் வரை கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றுள்ளார். பின்னர் தனது உயர்கல்வியை மட்டு புனித மிக்கல் கல்லூரியில் தொடர்ந்துள்ளார்.
2017 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு கடந்த ஆகஸ்ட மாதம் தோற்றியவர். துற்போது கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலையில் சித்தி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 

ஆரம்பம் முதல் தன்னை கல்வி கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்

இவருக்கு battinews சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
READ MORE | comments

க.பொ.த உயர்தரப் பரீட்சை - யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், இன்று அதிகாலை வெளியாகின. இந்தப் பெறுபேறுகளின் பிரகாரம் பௌதீகவியல் விஞ்ஞானத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரன், அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
பொது விடயத்தான துறையில் முதலிடத்தை கொழும்பு தேவி பாலிகா கல்லூரி மாணவி ஹிருணி சாக்யா அபேதுங்க பெற்றுக்கொண்டுள்ளார். உயிரித்தொழிற்நுட்ப பிரிவில், இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த லக்ஷித சத்துரங்க மெதலக முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
பொறியற் தொழிற்நுட்ப பிரிவில், அகில இலங்கை ரீதியில் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தைச் சேர்ந்த ரத்சிறினி ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டுள்ளார். கலை துறையில், அகில இலங்கை ரீதியில் இரத்தினபுரிய சத்தர்மாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த வண. பத்பேரியே முனித்தவங்ச தேரர் பெற்றுக்கொண்டுள்ளார். வணிகத்துறையில், மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரின் மாணவியான துலானி ரன்திகா பெற்றுக்கொண்டுள்ளார்.
READ MORE | comments

பெரிய கல்லாற்றில் இளைஞன் கொலை

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள தேவாலய வளாகத்துக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியதில் பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த 23 வயதான ஜேசுதாசன் திமேசன் என்னும் இளைஞர் உயிரிழந்தார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 54 வயதுடைய மார்க்கண்டு பரிமளராசா என்பவரும் அவருடைய மகனான 19 வயதுடைய பரிமளராசா அபிசனன் என்பவருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மகிந்த அணியிலிருந்து முக்கிய நபர் மைத்திரி பக்கம் தாவினார்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் கட்சியான மகஜன எக்சத் பெரமுனவின் உப தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சோமவீர சந்திரசிறி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
அவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |