படிக்கின்ற காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் நேர முகாமைத்துவத்தைப் பேணி பாடங்களை நன்றாகப் படிக்கவேண்டும். மனதில் ஒரு இலட்சியத்துடன் ஆர்வமுடன் படித்தால் கல்வியில் பல சதானைகளைப் படிக்க முடியும். எமது மாவட்டத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் நிலையை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியில 4ஆவது, 56 ஆவது என்ற நிலையில் பின்னோக்கியே நாம் செல்கின்றோம் இந் நிலையை மாற்றி மட்டக்களப்பு மாவட்டம் விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் , கலை ஆகிய துறைகளில் அகில இலங்கையில் முதலிடம் பெறவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இனி வரும் காலங்களில் பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள மாணவர்கள் தேசியரீதியில் முதலாம் நிலையை பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும் என்றார்.
என மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் விதுசனன் தெரிவித்தார்.
க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் மட்டு புனித மிக்கல் கல்லூரி மாணவன் சிவா மிதுசனன் மாவட்டத்தில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.
இம்முறை கணிதப்பிரிவில் தோற்றிய இம் மாணவன் இரு பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்று மாவட்டத்தில் முதலாம் நிலையிலும் தேசிய மட்டத்தில் 346 ஆவது நிலையையும் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மண்முனைப்பற்று கிரான்குளம் கிராமத்தில் கணபதிப்பிள்ளை வீயில் வசிக்கும் சிவா டேஸ்ரஜனி தம்பதிகளின் மூத்த புதல்வன் விதுசனன் ஆரம்பம் முதல் கல்வியில் திறமைகாட்டிவந்துள்ளார். இவரின் தந்தை சாதாரண மேசன் (கட்டிடத் தொழிலாளி) ஆக தொழில் புரிந்தே குடும்ப சீவியத்தை நடத்திவருகின்றார்.
விதுசனன் தனது ஆரம்பக் கல்வியை கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்திலும் தரம் 6 இல் இருந்து க.பொ.த. சாதாரணதரம் வரை கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றுள்ளார். பின்னர் தனது உயர்கல்வியை மட்டு புனித மிக்கல் கல்லூரியில் தொடர்ந்துள்ளார்.
2017 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு கடந்த ஆகஸ்ட மாதம் தோற்றியவர். துற்போது கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலையில் சித்தி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆரம்பம் முதல் தன்னை கல்வி கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்
இவருக்கு battinews சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 Comments