Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முறை வெளியாகிய க.பொ.த. (உ.த) பரீட்சையில் தடைகளைத் தாண்டி சாதனை படைத்த மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முறை வெளியாகிய க.பொ.த. (உ.த) பரீட்சையில் தடைகளைத் தாண்டி சாதனை படைத்த மாணவர்கள்

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள்.

மட்டக்களப்பில் விஞ்ஞான பிரிவில்..
மட்./புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ராஜன் திபிகரன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த ராஜன் - சாரதாதேவி தம்பதியரின் புதல்வராவார்.

மட்டக்களப்பில் கணிதப் பிரிவில்..
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் சிவா விதுசனன் கணிதப் பாடப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு - கிரான்குளம் 7ஆம் வட்டாரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிவா டேஸ்ரஜனி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு கணிதப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சாதாரண கூலித் தொழிலாளியின் மகனான இவர் வறுமையிலும் சாதனை படைத்து பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் தொழில்நுட்பவியல் பிரிவில்..
மட்டக்களப்பு பட்/களுதாவளை மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தொழில்நுட்பவியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி இராசலெட்சுமி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.

விவசாயத்தை சீவனோபாயமாகக் கொண்ட சாதாரண விவசாயக் குடும்பத்தின் மகன் வறுமையிலும் சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பில் வணிகப் பிரிவில்..
வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவி சஜானி விஜயராசா வணிகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த விஜயராசா மதிமலர் அவர்களின் மகள் இவ்வாறு வணிகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

சாதாரண கூலித் தொழிலாளியின் மகள் வறுமையிலும் சாதனை புரிந்து பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில்..

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் கணிதப்பிரிவில் சாதித்த மாணவ மாணவிகளின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பொறியியல் தொழிநுட்ப துறையில் கல்வி கற்ற வில்வரெத்தினம் கதிஸ் என்ற மாணவன் 2C, 1B பெறுபேறு பெற்று மாவட்டத்தில் 13ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

முனைக்காடு கிராமத்தில் பொறியியல் தொழிநுட்ப துறையில் கல்வி கற்று மாவட்ட நிலையில் 13ஆவது இடத்தினைப் பெற்றுள்ளமை வரலாற்றில் முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கல்லடி மகளிர் விவேகானந்தா பாடசாலையில் கல்வி பயின்ற குருகுலசிங்கம் பிரஸ்ணவி என்ற மாணவி விஞ்ஞான பிரிவில் 2A, B பெறுபேறுகளுடன் மாவட்ட ரீதியில் 11ஆம் நிலையை பெற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில், கணித துறையில் கல்வி பயின்ற முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கனிஸ்ரன் என்ற மாணவன் 1A, 2B பெறுபேற்றினை பெற்று மாவட்டத்தில் 31ஆம் இடத்தினைப் பிடித்து பொறியியல் துறைக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |