பழைமையான விமானங்களை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய 18 வருடங்கள் பழைமையான 3 விமானங்களை அதிக விலைக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை கொள்வனவு செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சரவையின் அனுமதியின்றி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்தேயினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. விமான கொள்வனவு தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளாமல் 72 மாத குத்தகை அடிப்படையிலான ஒப்பந்தத்தில், பிரதான நிறைவேற்று அதிகாரி கையொப்பமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கான விமான நிறுவனம் தற்போது பாரிய நஷ்டத்திற்கு முகங்கொடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் விமான நிறுவனத்தை மூடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் வான் போக்குவரத்துக்கு பொருத்தமற்ற விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்ததன் மூலம், ஸ்ரீலங்கா விமான சேவையில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானமாக மாறலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 Comments