Advertisement

Responsive Advertisement

யேமனில் இருவேறு விமானதாக்குதல்களில் 70 பொதுமக்கள் பலி

யேமனில் சவுதிஅரேபியா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட இரு வேறு விமானதாக்குதல்களில் 70 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை பொதுமக்கள் நிறைந்து காணப்பட்ட சந்தைப்பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டனர் எனஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜேமி மக்கோல்டிரிக் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அர்த்தமற்ற யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் மனித உயிர்களை முற்றாக அலட்சியம் செய்கின்றன என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும் ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 109 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments