Advertisement

Responsive Advertisement

கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்தம் இன்றுடன் காலாவதியாகிறது : ஆட்சி தொடருமா?

ஐக்கிய தேசிய கட்சி – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்தம் இன்று 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை தொடர்வதா , இல்லையா என்பது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. ஆனால் இது வரை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பெப்ரவரியில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் அது தொடர்பாக தீர்மானிக்குமாறு கட்சியை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனபோதும் இன்று அல்லது நாளைய தினம் சுதந்திரக் கட்சி அது தொடர்பாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்களும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும் , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இரண்டு ஆசனங்களும் , ஜே.வி.பிக்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்தன. இதன்படி எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைத்திருக்கவில்லை. இதனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்தப்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 2017 டிசம்பர் 31ஆம் திகதி வரை கூட்டு அரசாங்கத்தை தொடர்வதற்கும் அதற்கு பின்னர் தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்து. என்பது குறிப்பிடத்தக்கது.-

Post a Comment

0 Comments