ரஸ்யாவின் அதிநவீன குண்டுவீச்சுவிமானங்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் ஒத்திகையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலிய விமானப்படைத்தளமொன்று உசார் நிலையில் வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
டார்வினில் உள்ள விமானப்படைதளமொன்றினையே அதிகாரிகள் உசார்படுத்தியுள்ளனர்.
டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்காலப்பகுதியில் ரஸ்யாவின் இரு டியு95 எம்எஸ்குண்டுவீச்சுவிமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவிலிருந்தே இந்த விமானங்கள் புறப்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.பப்புவாவிற்கு வடக்கே உள்ள இந்தோனேசியாவின் பியாக் விமான தளத்திலிருந்து ரஸ்யா விமானங்கள் பறந்துள்ளன.
எனினும் சர்வதேச கடற்பரப்பின் மீதே தமது விமானங்கள் சென்றதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்தே அவுஸ்திரேலியா தனது விமானப்படை தளத்தை உசார்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த ஒத்திகை ரஸ்யா பசுவிக்கில் தனது நடவடிக்கைகளை விஸ்தரிப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
0 Comments