Home » » மட்டக்களப்பில் காணியை ஒப்படைக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை

மட்டக்களப்பில் காணியை ஒப்படைக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை

சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணியை மீள ஒப்படைப்பதற்கு பொலீஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுவாமி ராம்தாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் இரா.முருகதாஸ் தெரிவித்தார்.இது தொடர்பில் இன்று சனிக்கிழமை மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
மயிலம்பாவெளியில் சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) 2006 காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் பொழுதே இக்காணியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அதன் பின்பு 2009 காலப்பகுதியில் இராணுவம் வெளியேறிய நிலையில், பொலீஸ் திணைக்களம் இக்காணியை பொறுப்பெடுத்தது (03 ஏக்கர். 2013 காலப்பகுதி முதல் இக்காவலரணை மீள ஒப்படைக்குமாறு சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இது சம்பந்தமாக மேன்மை தங்கிய ஐனாதிபதி, அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், தேசிய பொலீஸ் ஆணைக்குழு, மனிதஉரிமைகள் ஆணைக்குழு என்பவற்றிற்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் 2016 கார்த்திகை மாதம் சட்டமும் ஒழுங்கும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு இக்காணியை சுவிகரிப்பதற்கு, வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீட்டை கோரியிருந்த செய்தியை தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கையின் பிரகாரம் அறிய முடிந்தது.
இதனைத் தொடர்ந்து 31.12.2017 அன்று சுவிகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி குறிப்பிட்ட பொலீஸ் காவலரண் அமைந்துள்ள இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஞா.சிறிநேசன் (பா.உ), வியாழேந்திரன் (பா.உ), திரு.கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் இவ்விடயத்தை கோவிந்தன் கருணாகரன் தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் 13.12.2017 அன்று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸ் ஐனாதிபதி செயலகத்திற்கு நேரடியாகச் சென்று, இவ்விடயத்தின் தொடர்ச்சியான இழுத்தடிப்பு நடவடிக்கைகள் பற்றி சுட்டிக்காட்டி 31.12.2017 க்கு முன் இக்காணியை விடுவிக்க ஆவண செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் பயனாக இக்காணியை ஒப்படைப்பதற்காக பொலீஸ் திணைக்களம் இக்காணிக்குள் அவர்களால் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றி அவர்களுக்கு சொந்தமான பொருட்களை இடமாற்றுவதை இன்று (30.12.2017) அவதானிக்க கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |