2018 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவுள்ள நிலையில் பாடசாலை வகுப்பறை மற்றும் சுற்றுச் சூழல் சுத்தமாக்கும் சிரமதான பணி இன்று ( 31) பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு அற்ற பாடசாலை சூழலைப் பேண வேண்டும் என்ற கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய இந்த சிரமதான பணி பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போது பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments