Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சந்திரிகாவுக்கு அதிகாரம் இல்லை! - போர்க்கொடி தூக்கும் அமைச்சர்

அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு இல்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கம் தொடர்பில் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இரண்டு வருட காலத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், குறித்த உடன்படிக்கையை தொடர்ந்தும் நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்.
டளஸ் அலகப்பெருமவின் இந்தக் கூற்றை நிராகரித்துள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூட்டு உடன்படிக்கையை நீடிப்பது தொடர்பான பணிப்புரைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதே நேரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் 2018ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி நல்லிணக்க அரசாங்கத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை நீடிப்பு குறித்து தீர்மானமெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments