அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ஆம் கிராமத்தில் வைத்தியத்துறைக்கு தெரிவான முதல் மாணவன்! ஊரே மகிழ்ச்சியில்

Sunday, December 30, 2018

அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ஆம் கிராமத்தை சேர்ந்த மாணவன் முருகமூர்த்தி கிருஷாந் க.பொ.த உயர் தரத்தில் மாவட்ட ரீதியில் 13ஆம் இடத்தை பெற்று பிரதேசத்தில் வைத்தியத்துறைக்குத் தெரிவான முதல் மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கல்லோயா குடியேற்ற கிராமங்களை உள்ளடக்கிய நாவிதன்வெளி பிரதேசத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 1 ஏ, 2 B சித்திகளையும் பெற்று குறித்த மாணவன் வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளார்.
இந்த மாணவன் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் உயர் கல்வியை கற்றுள்ளார். இது தொடர்பில் முருகமூர்த்தி கிருஷாந் கருத்து தெரிவிக்கையில்,


பெற்றோரும், ஆசிரியர்களும், சக தோழர்களும் கொடுத்த ஊக்குவிப்பும் பக்கபலமும் தான் நான் வெற்றி பெற காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் வைத்தியதுறைக்கு தெரிவான முதலாவது மாணவனான முருகமூர்த்தி கிருஷாந்திற்கு தவிசாளர் மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை அப்பகுதி மக்கள் அனைவரும் குறித்த மாணவனுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



READ MORE | comments

பேரதிர்ச்சியில் மஹிந்த; வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்!

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்ததன் பின்னர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு அவருக்கு தீவிர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரகர் விளையாட்டின் போது இடம்பெற்ற கடுமையான விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தீவிர உட்படுத்தப்பட்டார்.
எவ்வாறாயினும் அவரது உடல் நிலை ஆபத்தான கடத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளதுடன் அவரது முகம் இரும்பு தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அவர் மீளவும் ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

இலங்கையின் இப்போதைய வானிலை: காலையும் இரவும் குளிர்; பகல் வறட்சி!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதுதொடர்பில் திணைக்களம் இன்றைய நாளுக்காக வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனினும் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
READ MORE | comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு: விண்ணப்பங்கள் ஜனவரி 16ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த் தடவை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 3,21,469 பரீட்சாரத்திகள் தோற்றியிருந்த நிலையில், இவர்களில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை பரீட்சையில் சித்தியடைந்த 1,60,907 மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வௌியாகின.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதாயின், 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது, 0112 78 42 08 / 011 2 78 45 37 / 011 31 88 350 அல்லது 011 3 14 03 14 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

விடை காணமுடியா காரணங்களினால் தொடரும் தற்கொலைகள்?மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கம் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துவந்த நிலையில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒரு தற்கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானசூரியம் சதுக்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்றே கண்டெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதினை உடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையாக பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.




READ MORE | comments

உயர்தர பரீட்சை முடிவுகள்: தேசிய ரீதியில் முதன்மை பெற்ற மாணவர்கள்


கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு நேரத்தில் வெளியிடப்பட்டன.
இதன்படி தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த மாணவர்களின் சில விபரங்கள் வருமாறு: .
இந்த நிலையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது,
உயிரியில் விஞ்ஞான பிரிவில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கலனி ராஜபக்ச
பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி விஜயகுணவர்தன
வர்த்தக பிரிவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கசுன் விக்ரமரத்ன
கலை பிரிவில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த சேனதி த டி அல்விஸ்
பொறியியல் பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ம.ப.ப.யசாஸ் பத்திரன
தொழில்நுட்பவியல் பிரிவில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி கொடிபுலி
READ MORE | comments

167,000 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி


நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு  2018 கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீீீட்சை பெறு பேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளின் அடிப்படையில்  ஒரு இலட்சத்து  67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும்  உயிரியல் விஞ்ஞானத்துறையில் கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அதேபோல் வர்த்தக துறையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லுாரி மாணவன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அத்தோடு கலைத்துறையில் பாணந்துறை லைஸியம் சர்வதேச கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும், பொறியியல் தொழில்நுட்ப துறையில் கொழும்பு ஆனந்தா கல்லுாரியைச் சேர்ந்த மாணவனும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் துறையில் கம்புறுப்பிட்டிய நரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி முதலிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த அதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. -(3)
READ MORE | comments

உயர்தர பரீட்சை: வட கிழக்கில் முதன்மை பெற்ற சில மாணவர்கள் விபரம்


க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித்.
தேசியரீதியில் ஆறாமிடத்தையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர் தேசிய ரீதியில் 124ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614 இஸட் புள்ளியைப் பெற்றுள்ளார்.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.
READ MORE | comments

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்


2018 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் இவற்றை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கையேட்டை சரியான முறையில் விளங்கிக் கொண்டு தாம் விண்ணப்பிக்கக்கூடிய ஆகக்கூடிய கற்கை நெறிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது முக்கியமானது என்று என்று பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டார்.

சில மாணவர்கள் இரண்டு நெறிக்கு அல்லது 3 கற்கை நெறிகளுக்கு மாத்திரம் விண்ணப்பிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பொருத்தமான கற்கை நெறி இல்லாமல் போகின்றது. ஆரம்பத்திலேயே சரியான கோரிக்கையை முன்வைக்காமையால் பின்னர் அந்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என்றும் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டார்.

2019ம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. புதிதாக சில கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)
READ MORE | comments

ஜனவரி மாதத்தில் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவை ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.இதற்கு மேலதிகமாக அந்த மாகாணங்களில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் பண்ணைகளில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியையும் துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கமைய வடமாகாண விவசாயப் பண்ணை அமைந்துள்ள ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் இந்தக் காணிகள் விடுவிக்கப்படும்.

இதற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில்; பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் ஜயபுரம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 194 ஏக்கர் விடுவிக்கப்பட உள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஜயபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள 285 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 120 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. -(3)
READ MORE | comments

தேசிய ரீதியில் முதல் இடம் பெற்றவர்கள் இவர்கள்தான்! தமிழ் பிள்ளைகள்?

இலங்கையின் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் வெளியிடப்பட்டன.
இதன்படி தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது,
உயிரியில் விஞ்ஞான பிரிவில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கலனி ராஜபக்ச
பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி விஜயகுணவர்தன
வர்த்தக பிரிவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கசுன் விக்ரமரத்ன
கலை பிரிவில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த சேனதி த டி அல்விஸ்
பொறியியல் பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ம.ப.ப.யசாஸ் பத்திரன
தொழில்நுட்பவியல் பிரிவில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி கொடிபுலி
இதேவேளை வெளியாகிய பெறுபேறுகளின்படி தமிழர் தாயகத்தைச் சேர்ந்த மாவட்டங்களோ அல்லது தமிழ் பிள்ளைகளோ முதல் இடத்தைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர் தேசிய ரீதியில் 124ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614 இஸட் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாதனை பொறியியல் பிரிவில் முதலிடம்!

2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவ மாணவிகள் மாவட்டத்தில் பொறியல் துறை, மருத்துவத்துறைகளில் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து மருத்துவ பீடத்திற்கு 6 பேரும், பொறியியல பிரிவிற்கு 12 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பொறியியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முகமட் பர்ஹாத் என்ற மாணவன் முதலிடத்தினைப் பிடித்துள்ளதுடன், 3, 4, 5, 7, 8ஆம் இடங்களையும் ஏனைய மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையில் மருத்துவ பீடத்துக்கு 6 பேரும், பொறியியல் பீடத்துக்கு இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் ஒரு மாணவி முதலிடம் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி ரரணியா சுபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பின் புனித சிசிலியா பெண்கள் தேசியப் பாடசாலை, சிவானந்தா தேசியப்பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளிலும் மருத்துவ, உயிரியல், பொறியியல் பீடங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இப் பெறுபோறுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், சிறப்பு நிலை பெறறவர்கள் தொடர்பான விபரங்கள் பின்னரே கிடைக்கப்பெறும் என்றும் அதிபர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகங்களுக்குத்தெரிவான மாணவ, மாணவிகளுக்கு பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
READ MORE | comments

வெள்ளம் காரணமாக முல்லை மற்றும் கிளிநொச்சியில் ஏற்பட்ட அழிவு விபரம்

Saturday, December 29, 2018


அண்மையில் வன்னியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மாவட்ட ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி
  • 24184 குடும்பங்களைச் சேர்ந்த 74730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஒருவர் உயிரிழப்பு
  • 386வீடுகள் முற்ராக சேதம், 2223 வீடுகள் பகுதியளவில் சேதம்
  • 189 வீதிகள் பெரியளவில் சேதம்
  • 26400 ஏக்கர் வயல் அழிவு
  • 2400 ஏக்கர் ஏனைய பயிர்ச்செய்கை அழிவு
  • நாளாந்த கூலித் தொழிலாளிகள் 9ஆயிரம்பேர் பாதிப்பு
முல்லைத்தீவு
  • 10104 குடும்பங்களைச் சேர்ந்த 31923பேர் பாதிப்பு
  • 86 வீடுகள் முற்றாக சேதம்
  • 2297 வீடுகள் பகுதியளவில் சேதம்
  • 277கிலோமீட்டர் நீளமான வீதிகள் சேதம்
  • 9929 ஏக்கர் வயல் அழிவு
  • 4500 ஏக்கர் ஏனைய பயிர்கள் அழிவு
  • 17 படகுகள் 187 வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
  • 127- மாடுகள் 363 ஆடுகள் 3363 கோழிகள் சாவு
READ MORE | comments

அட்டன் தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை – 108 பேர் தஞ்சம்


அட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் 29.12.2018 (சனிக்கிழமை) காலை 6.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 35 பேரும், சிறுவர்கள் 45 பேரும் அடங்குகின்றனர்.
வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து அட்டன் பொலிஸார், அட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.
எனினும், சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் தற்காலிகமாக போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், நோர்வூட் பிரதேச சபையினரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அட்டன் பொலிஸார், அட்டன்பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
DSC00727 DSC00734 DSC00739 DSC00741 DSC00744 DSC00750
READ MORE | comments

அரச ஊடகங்கள் அமைச்சர் மங்களவின் கீழ்: பொலிஸ் மற்றும் முப்படைகள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்


ரூபவாஹினி, ஐ. ரி. என் மற்றும் ஏரிக்கரை ஆகியவை உட்பட அரச ஊடகங்கள் அனைத்தும் மங்கள சமரவீரவின் நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய எல்லா அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்குமான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதன்படி, பொலிஸ் மற்றும் முப்படைகள், அரச அச்சகம் ஆகியவை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
READ MORE | comments

உடைந்து விழுந்த மின்னுயர்த்தி : இளைஞன் பலி


கொழும்பு கொம்பனித்தெரு பகுதியல் தனியார் நிறுவனமொன்றில் மின்னுயர்த்தி உடைந்தால் இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டிடத்தில் 9ஆவது மாடியில் அமைந்துள்ள களியாட்ட விடுத்திக்கு சென்றுக்கொண்டிருந்த குழுவொன்று இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளது. இதன்போது 24 வயதுடைய இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)
READ MORE | comments

இன்று கிளிநொச்சியை உலுக்கிய துயரச் சம்பவம்!

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது,
கிளிநாச்சி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் அவரது அம்மம்வாவின் வீட்டுக்கு சென்று அங்கு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
இதன் போது அப்பகுதியில் வெள்ளத்தினால் நிறைந்திருந்த வாய்க்கால் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வவினோதரன் அன்புரதன் என்ற சிறுனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

க.பொ.த உயர்தர பெறுபேறுகள் வெளியீடு: பெறுபேறுகளை அறிய...

கடந்த ஓகஸ்ட் மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் கல்வி அமைச்சின் உள்மட்டத்திலிருந்து வெளியாகியுள்ளது.
கடந்த வாரமே வெளியாகும் என ர்திர்பார்க்கப்பட்ட உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகவுள்லதாக கூறபட்டுள்ளது.
இந்த பரீட்சைக்கான பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கீழ் குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தில் பிரவேசித்து அறிந்துகொள்ளமுடியும்.
READ MORE | comments

முல்லைத்தீவில் திடீரென்று உடைப்பெடுத்த குளம்!

Thursday, December 27, 2018


முல்லைத்தீவில் கடந்த ஜந்து நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக மக்களின் குடியிருப்புக்களில் புகுந்த வெள்ளம் தற்பொழுது வடிந்தவண்ணமுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் எல்லையில் அமைந்துள்ள கந்தரோடை குளம் நேற்று அதிக மழை காரணமாக நீர் நிரம்பி வழிந்தோடியுள்ளது. அத்துடன் குளத்தின் கொட்டுக்கள் திறந்துவிடப்பட்டதனால் குளத்து நீர் கருவேலன் கண்டல் ஆறு ஊடாக பண்டாரவன்னியன் கிராமத்தினை நோக்கி சென்றுள்ளது.

இதனால் 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கருவேலன் கண்டல் அ.த.க பாடசாலையில் தங்கவைக்கப்பட்டனர். எவ்வாறாயினும் இன்று காலை நீர் வழிந்தோடியுள்ளதால் மக்கள் மீண்டும் குடியிருப்புக்களுக்குச் சென்றுவிட்டனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 9574 குடும்பங்களை சேர்ந்த 30499 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

86 வீடுகள் முழுமையாகவும், 2297 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 11 முகாம்களில் 1566 குடும்பங்களைச் சேர்ந்த 4889 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, துணுக்காய், வெலி ஓயா பிரதேசங்களில் இந்த பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

இலங்கையில் நடந்த பாரிய அதிசயம்; படையெடுக்கும் மக்கள்!

வெல்லவாய எதிலிவெவ பகுதியில் அமைந்துள்ள அரச மரம் ஒன்றில் தாமரை மலரை ஒத்த மலர்கள் பூத்திருக்கின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு வழிபாட்டிற்காக வந்தவர்களே இதனை கண்டறிந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மரம் ஒன்றில் இடைக்கிடையே இந்த மலர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இனி மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமான கடவூச் சீட்டு விநியோகம் இல்லை


குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் ”மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம்” செல்லுபடியாகும் கடவூச் சீட்டு விநியோகம் 2018.12.31ஆம் திகதியுடன் நிறுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இனி சகல நாடுகளுக்குமான கடவூச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்படுமெனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)
READ MORE | comments

கிளிநொச்சியில் மீண்டும் இன்று பலத்த மழை


இன்று வியாழக்கிழமைகாலை முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில், அங்குள்ள மக்கள் மீண்டும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், வெள்ளம் வடிந்தோடிய நிலையில் வீடுகளுக்கு திரும்பிய மக்கள் மீண்டும் முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றமையால், இதன் காரணமாக சில பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி ஆனந்தபுரம், பொன்னகர், இரத்தினபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(15)IMG_2079
READ MORE | comments

உயர்தரப் பெறுபேறு நாளை வெளியாகாது


உயர்தரப் பரீட்சை பெறுபேறு நாளை 28ஆம் திகதி வெளியிடப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு மேலும் 2 , 3 நாட்கள் எடுக்குமென பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியும் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் பெறுபேறு வெளியாகி இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளை 28ஆம் திகதி பெறுபேறு வெளியிடப்படுமென தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களத்தினால் இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.-(3)
READ MORE | comments

இன்றைய கால நிலை! யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை

Tuesday, December 25, 2018

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய கால நிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைப்பெய்யக் கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் பனி மூட்டம் நிறைந்த காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழைபெய்யும் போது சற்று பலத்த காற்று வீசக்கூடும்.
இதனிடையே, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள பொது மக்கள் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இலங்கைக்குள் வந்த அந்த 20 இலட்சம் பேர் யார்!

கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்தே ஆகக் கூடுதலான சுற்றலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தில் முதல் 11 மாத காலப்பகுதியில் 20 இலட்சத்து 80 ஆயிரத்து 627 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருப்பதாக சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 580 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர். கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 16 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்தே ஆகக் கூடுதலான சுற்றலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
READ MORE | comments

எங்கே சென்றார் ஜனாதிபதி? நான்கு நாட்களில் கொழும்பில் நடக்கப்போவது என்ன?

தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் தாய்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் அங்கு ஒருவார காலத்திற்கு தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.
நாட்டில் முழுமையான அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படாத நிலையில் ஜனாதிபதி அவர்கள் வெளிநாடு சென்றிருப்பது அமைச்சரவை நியமனங்களில் மேலும் இழுபறிநிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் அமைச்சரவை தொடர்பான சிக்கல் நீடித்துக் கொண்டிருப்பதுடன், இதுவரை அமைச்சர்களுக்கான கூட்டமும் இன்னமும் நடைபெறவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் தனப்பட்ட பயணம் இது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் அடங்கும் பொறுப்புக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று (24) வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதனை வெளியிடாது ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளமையானது மேலும் தாமதங்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 2ம் திகதியளவிலேயே தனது பயணத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாடுதிரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
READ MORE | comments

உலகம் பூராக வாழும் அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் www.kurunews.com குழுமத்தினர்

உலகம் பூராக வாழும் அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்  www.kurunews.com குழுமத்தினர்
READ MORE | comments

பாரிய வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம்!

Monday, December 24, 2018

வட மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருந்தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, பிறந்து சில நாட்களேயான குழந்தையும், தாயும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் வயல் காவலுக்குச் சென்றவர்களும் உதவிப் பணிகளுக்குச் சென்றவர்களும் வீடுகளில் இருந்தவர்களும் சிக்கியிருந்தனர்.
வீடுகளுக்குள் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மரங்களில் ஏறித் தப்பியிருந்த பலரையும் கடற்படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.






READ MORE | comments

உடனடி வெள்ள நிவாரணம் - உறவுகளுக்கு உதவுங்கள்!

தாயகத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அந்த மக்கள் பாடசாலைகளிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனை அவசரகால நிதியினை நம் உறவுகளிடம் கோரி நிற்கிறது.
மீண்டும் மீண்டும் துன்பத்தையே தாங்கி நிற்கும் எம் தாயக உறவுகளை காப்போம். உங்களால் முடிந்த உதவியை வழங்குங்கள்.
தொடர்புகளுக்கு - (647) 716-8797 / (416) 830-7703
READ MORE | comments

வன்னியில் 60 ஆயிரம் பேரைத் தவிக்க வைத்த வெள்ளம்!

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 16,872 குடும்பங்களைச் சேர்ந்த 60345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3291 குடும்பங்களைச் சேர்ந்த 10,332 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தின் காரணமாக 24 மணித்தியாலமும் செயற்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதற்கான தொலைபேசி இலக்கம் 117 என அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

மதுபான சாலைகளுக்கு பூட்டு


நத்தார் தினத்தையொட்டி நாளை (25) நாடு பூராகவுமுள்ள சகல மதுபான சாலைகளும் மூடப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. (3)
READ MORE | comments

26முதல் ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திட்டம்


எதிர்வரும் 26ஆம் திகதி நள்ளிரவு முதல் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் சில திட்டமிட்டுள்ளன.

ரயில் சாரதிகள் , கட்டுப்பாட்டாளர்கள் , நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சம்பள முரண்பாட்டு பிரச்சினையை அடிப்படையாக கொண்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. -(3)
READ MORE | comments

26ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் குறைகிறது


பஸ் கட்டணம் 4.2 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஆரம்பன கட்டணமான 12 ரூபா கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது. -(3)
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |