Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாதனை பொறியியல் பிரிவில் முதலிடம்!

2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவ மாணவிகள் மாவட்டத்தில் பொறியல் துறை, மருத்துவத்துறைகளில் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து மருத்துவ பீடத்திற்கு 6 பேரும், பொறியியல பிரிவிற்கு 12 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பொறியியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முகமட் பர்ஹாத் என்ற மாணவன் முதலிடத்தினைப் பிடித்துள்ளதுடன், 3, 4, 5, 7, 8ஆம் இடங்களையும் ஏனைய மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையில் மருத்துவ பீடத்துக்கு 6 பேரும், பொறியியல் பீடத்துக்கு இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் ஒரு மாணவி முதலிடம் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி ரரணியா சுபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பின் புனித சிசிலியா பெண்கள் தேசியப் பாடசாலை, சிவானந்தா தேசியப்பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளிலும் மருத்துவ, உயிரியல், பொறியியல் பீடங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இப் பெறுபோறுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், சிறப்பு நிலை பெறறவர்கள் தொடர்பான விபரங்கள் பின்னரே கிடைக்கப்பெறும் என்றும் அதிபர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகங்களுக்குத்தெரிவான மாணவ, மாணவிகளுக்கு பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Post a Comment

0 Comments