இந்த நிலையில் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் எல்லையில் அமைந்துள்ள கந்தரோடை குளம் நேற்று அதிக மழை காரணமாக நீர் நிரம்பி வழிந்தோடியுள்ளது. அத்துடன் குளத்தின் கொட்டுக்கள் திறந்துவிடப்பட்டதனால் குளத்து நீர் கருவேலன் கண்டல் ஆறு ஊடாக பண்டாரவன்னியன் கிராமத்தினை நோக்கி சென்றுள்ளது.
இதனால் 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கருவேலன் கண்டல் அ.த.க பாடசாலையில் தங்கவைக்கப்பட்டனர். எவ்வாறாயினும் இன்று காலை நீர் வழிந்தோடியுள்ளதால் மக்கள் மீண்டும் குடியிருப்புக்களுக்குச் சென்றுவிட்டனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 9574 குடும்பங்களை சேர்ந்த 30499 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
86 வீடுகள் முழுமையாகவும், 2297 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 11 முகாம்களில் 1566 குடும்பங்களைச் சேர்ந்த 4889 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, துணுக்காய், வெலி ஓயா பிரதேசங்களில் இந்த பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
0 Comments