இன்று வியாழக்கிழமைகாலை முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில், அங்குள்ள மக்கள் மீண்டும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், வெள்ளம் வடிந்தோடிய நிலையில் வீடுகளுக்கு திரும்பிய மக்கள் மீண்டும் முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றமையால், இதன் காரணமாக சில பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி ஆனந்தபுரம், பொன்னகர், இரத்தினபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(15)

0 Comments