இலங்கை வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

Thursday, June 30, 2016

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடந்துவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில்  உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தை அரசாங்கம் வரவேற்கிறது.
அதுபோன்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.
இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
பாராட்டுக்களையும், சரியான விமர்சனங்களையும், ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இரண்டுமே, முன்னேற்றங்களுக்கு உதவியாக இருக்கும்” .
READ MORE | comments

சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க மறுப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் பிணை வழங்க இன்று வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அவரது பிணை மனுவை 21.7.2016 வரை ஒத்திவைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
READ MORE | comments

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாது கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
கடந்த 30வருடகாலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை குறைகூறிக்கொண்டே எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையே இருந்துவந்தாகவும் இனிவரும் காலங்களில் குறைகூறிக்கொண்டிருப்பதை விடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடங்களுடனான விஞ்ஞான ஆய்வுகூடமும் ஆகியவற்றை இன்று வியாழக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடகிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் அரசாங்கம் அக்கரையாக செயற்பட்டுவருகின்றது.இந்த ஆண்டு கல்வி அபிவிருத்திக்காக 83பில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.வரலாற்றில் கல்வி அபிவிருத்திக்காக பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
ஒரு நாட்டின் அபிவிருத்தியானது கல்வியில் தங்கியுள்ளது.அந்தவகையில் கல்வியின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஜனாதிபதியும பிரதமரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த கல்வி அபிவிருத்தியை நோக்க கொண்டு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்காக 548மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.ஏ.பி.சி.டி என பாடசாலைகள் வகுக்கப்பட்டு 708 பாடசாலைகள் இந்த நிதி மூலம் அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து மேற்கொள்ளும் செயற்றிட்டமாகவே இது அமையும்.
கேகாலை பகுதியில் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பத்தில்லையென இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்கள்.அதற்கு காரணம் குறித்த பகுதிகளில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லாத காரணமாகும்.
கல்வி என்னும்போது வெறுமனே மாணவமாணவிகளை மட்டும் சொல்லிவிடமுடியாது.ஆசிரியர்களை உள்வாங்கவேண்டும்.அதற்கு ஏற்ப அதிகாரிகளை உள்வாங்கவேண்டும்.சில பகுதிக்கு வழங்கப்படும் நிதியொதுக்கீடுகள் கூட சரியானமுறையில் செல்லாத நிலையே இருந்துவருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான அரசியல்கட்சியாக வடகிழக்கில் செயற்பட்டுவருகின்றது.ஐக்கிய முற்போக்கு முன்னணி மலையத்தில் பலமான அரசியல் சக்தியாக செயல்பட்டுவருகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாது என்பதே எனது கருத்தாகும்.அரசாங்கத்தினை குறைகூறிக்கொண்டிருப்பதை விட அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்.
கடந்த 30 வருடகாலமாக அரசாங்கங்களை குறைகூறிக்கொண்டே எங்களின் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.குறைகூறுவதில் இருந்து அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலைக்கு மாறவேண்டும்.தேவைப்பாட்டால் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படும் முயற்சியையும் மேற்கொள்வோம்.அதன்மூலம் அரசாங்கத்தினை ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறவேண்டும்.
READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் வகுப்பறைகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டடம் மற்றும் முன் நுழைவாயில் திறப்பு விழா


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடங்களுடனான விஞ்ஞான ஆய்வுகூடமும் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
தேசிய பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 23 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிட திறப்பு பாடசாலை அதிபர் க.தம்பிராஜா தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



இந்த திறப்புவிழாவில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் அமைச்சின் செயலாளர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



இதன்போது பாடசாலை சமூகம் மற்றும் அரசியல்வாதிகளினால் இராஜாங்க அமைச்சர் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வின் போது உரையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் அவர்கள் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு 8.3 கோடி ரூபா நிதியினை பௌதீக வளாப்பற்றாக்குறைக்காக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களின் பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்படக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 































READ MORE | comments

அவசர அம்புலன் சேவைக்கு 1990 ஐ அழைக்கவும்

Wednesday, June 29, 2016

இலங்கையில் அவசரகால வைத்தியசாலைக்கு முன்னரான, பராமரிப்பு அம்புலன்ஸ் சேவையின் அவசரகால பதில் நடவடிக்கை நிலையத்திற்கான கட்டணமில்லா இலவச அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் நடவடிக்கையெடுத்துள்ளார்.
இலங்கையில் அவசரகால வைத்தியசாலைக்கு முன்னரான, பராமரிப்பு அம்புலன்ஸ் சேவையின் அவசரகால பதில் நடவடிக்கை நிலையத்திற்கான கட்டணமில்லா இலவச அழைப்பு இலக்கமாக “1990” குறும் இலக்கத்தை கட்டணமின்றி செயற்படுத்த சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
READ MORE | comments

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆராய விசேட குழு

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக ஆராய விசேட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை தற்காலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தினரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளினை கருத்திற் கொண்டு, முறையான போக்குவரத்து சேவையினை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் செய்வது தொடர்பில் 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை சாராம்சம் செய்வதற்காக குறித்த நிறுவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றினை நியமிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
n10
READ MORE | comments

மத்திய வங்கியில் ஜனாதிபதியும் பிரதமரும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மத்திய வங்கிக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு மகளிர் அரிமா கழகத்தின் புதிய நிர்வாகத்தினர் பதவியேற்பு நிகழ்வு

மட்டக்களப்பு மகளிர் அரிமா கழகத்தின் புதிய நிர்வாகத்தினர் பதவியேற்பு நிகழ்வு மட்டகளப்பு  பூம்புகார் லயன்ஸ் கழக மண்டபத்தில் மாலை இடம் பெற்றது.
2015ஃ2016 வருடத்துக்கான கழகத்தின் தலைவி அரிமா. சாந்தா ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரிமா. எந்திரி என்.பி.ரஞ்சன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதம அதிதியால் 2016ஃ2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் அரிமா கழகத்தின் தலைவியான அரிமா பாரதி கென்னடி அவர்களுக்கு அலுவலக முத்திரைகளை வழங்கி புதிய தலைவிக்கு பொறுப்புகளை வழங்கிவைத்தார்.
மகளிர் அரிமா கழகத்தின் புதிய செயலாளராக அரிமா டிலாந்தி தவக்குமார், பொருளாளராக ஹேதாரணி, மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக அரிமா nஐயபிரபா சுரேஸ், அரிமா கௌரி,அரிமா கலாநிதி நதீரா மரியசந்தானம், அரிமா, வசந்தகுமாரி, அரிமா ஜனார்த்தனி ஆகியோரும் பதவியேற்றனர்.
முதலாவது, இரண்டாவது மூன்றாவது உப தலைவிகளாக அரிமா டாக்டர் ரோசி, அரிமா டெலினா பிரின்ஸ், அரிமா தணுஜா ஜுட் போன்றோரும் டேமராக அரிமா ஜெனிராவும், ரெயில் ருயிஸ்டராக அரிமா பிரியதர்சினியும் பதவியேற்றனர்.
இந்நிகழ்வில் 2016ஃ2017 வருடத்துக்கான வலயத்தலைவர் அரிமா ராஜா, பிராந்திய தலைவர் அரிமா ஸ்ரீரங்கன், பிராந்திய செயலாளர் அரிமா முரளிதரன், ஆளுநரின் விசேட ஒருங்கிணையாளர் அரிமா மனோகரன், ஆளுநரின் நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணையாளர் அரிமா தர்ஷன் ஆகியோரும் 2015ஃ2016க்கான   கபினட் செயலாளர் வலயத்தலைவர் பிராந்திய தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
விடைபெற்று செல்லும் தலைவி தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு ஞாபகார்த்த நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தார். எதிர்கால திட்டங்களைப் பற்றி நிருவாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தலைவி அரிமா பாரதி கென்னடி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிற அரிமா கழகங்களின் ஆசியுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

c-02

c-03
c-04

READ MORE | comments

குடிபான வகைகளில் சீனியின் அளவு குறிப்பிடப்பட வேண்டியது கட்டாயமாகின்றது

Sunday, June 26, 2016

குளிர்பானங்கள் உள்ளிட்ட சகல வகை குடி பானங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அந்த பானங்கள் அடைக்கப்பட்டுள்ள போத்தல்களில் குறிப்பிடப்பட வேண்டுமேன சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மதல் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அவ்வாறான நோயாளர்கள் தாம் குடிக்கும் பானங்களின் சீனியின் அளவை இலகுவில் அறிந்துக்கொள்ளக் கூடிய வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

ஒக்டோபர் மாதம் முதல் மின்சார கட்டணத்தை அறவிடும் புதிய முறை

கால எல்லையின் அடிப்படையில் மின்சார கட்டணத்தை அறவிடும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, காலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை மற்றும் இரவு 10.30 மணிமுதல் காலை  5.30 மணிவரை என இரண்டு காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு மின் கட்டணம் அறவிடப்படும். இரவு 10.30 மணிமுதல் காலை 5.30 மணிவரை பாவிக்கப்படும் மின்சாரத்துக்கு அறவிடப்படும் கட்டணம்  சாதாரண கட்டணத்தைவிட நூற்றுக்கு 40 சதவீதத்தால் குறைவடைந்து காணப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறைக்குள் உள்வாங்கப்பட விரும்பும் பாவனையாளர்கள் சிறிய கட்டணமொன்றை செலுத்த வேண்டும் என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.
ஒக்டோபர் மாதம் முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

புதிய மின் கட்டண முறையை அறிமுகப்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானம்

மின்சார பாவனையாளர்களுக்கு கட்டண  சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் புதிய கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்து.
இதன்படி  இரண்டு பிரிவாக மின்பாவனை காலத்தை பிரித்து கட்டண சலுகைகள் வழங்கப்படவுள்ளது. இதில் மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையும் மற்றும் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையும் மின்சாரத்தை பயன்படுத்தும் காலப்பகுதியை இரண்டாக பிரித்து இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையான மின் பாவனைக்கான கட்டணத்தில் மற்றைய நேரத்திற்கான கட்டணத்திலும் பார்க்க 40 வீதம் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட வுள்ளது.
இதனை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இதற்காக  தனியான மின் மானியொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

நாளை வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை?

ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக எதிர்வரும் 28ம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த வாய்மூல அறிக்கை நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையத்தளத்தில் வெளியிடப்படலாம் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செயற்பாடானது ஒரு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மனித உரிமைகள் ஆணையாளரின் இந்த அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்படுவதன் மூலம் உறுப்பு நாடுகள் தமது அவதானிப்புகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
READ MORE | comments

25 வருடகால தடை நீங்கி காங்கேசன்துறை வீதி இன்றுமுதல் பாவனைக்கு!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன.
இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், காங்கேசன்துறை வீதி வழியாக குறுகிய நேரத்தில் போக்குவரத்து செய்யக்கூடியதாக காணப்படுவதாக பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, விரைவில் காங்கேசன்துறை புகையிரத நிலையமும் மக்கள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

READ MORE | comments

இலங்கை கடற் பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம்!

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுள்ள கடற் பிரதேசங்களில் இன்று பலத்த காற்று வீசும் சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் போது சில பகுதிகளில் 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் சற்று அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு உன்னிச்சைக்குளத்தில் நீராடச் சென்ற 4 இளைஞர்களில் ஒருவர் மரணம்

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நண்பகல் நண்பர்களாகச் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் சகதிக்குள் மூழ்கியுள்ளார்.
அங்கிருந்த ஏனையவர்கள் இந்த ஆபத்தை அறிந்து சகதிக்குள் மூழ்கியவரைக் கயிற்றைக் கட்டியிழுத்து கரைசேர்த்து கரடியனாறு மாவட்ட வைத்தியசாலைக்குச் சேர்ப்பித்த போதிலும் இடைவழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டமாவடி மீறாவோடையைச் சேர்ந்த நுபீர் முஹம்மத் இர்பாஸ் (வயது 22 ) என்பவரே மரணித்தவராகும். இச்சம்பவம் பற்றி ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
READ MORE | comments

மத்தியக் கிழக்கிற்கு அனுப்புவதாக கூறி பெண்களை இந்தியாவில் நிர்க்கதியாக்கும் நிறுவனம்

Saturday, June 25, 2016

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை தொழிலுக்காக அனுப்புவதாக கூறி இந்தியாவுக்கு அனுப்பி அவர்களை நிர்க்கதியாக்கும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
விமான டிக்கற் விற்றபனை செய்யும் நிறுவனமொன்றே இதனுடன் தொடர்பு பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் பெண்ணொருவர் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டு இந்தியாவில் நிர்க்கதியாக்கப்பட்ட தகவல் வெளியான நிலையிலேயே அடிக்கடி பல பெண்கள் இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் நடவடிக்கையெடுத்துள்ளது.
READ MORE | comments

பதவியிலிருந்து விலகவுள்ளார் கமெரோன்

Friday, June 24, 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பிரதமர் அலுவலகலத்துக்கு வெளியிலிருந்து தனது மேற்படி முடிவை கமெரோன் அறிவித்திருந்தார்.
READ MORE | comments

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறியும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
“பிரெக்ஸிட்´ என அழைக்கப்படும் அந்த விலகல் குறித்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக, இதுவரை இல்லாத அளவு 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பொது வாக்கெடுப்பின்போது பெய்த மழையையும் பொருள்படுத்தாது லட்சக்கணக்கானோர் வாக்களித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இலங்கை நேரப்படி 10.00 மணிவரையான நிலவரப்படி 90 சதவீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் (1,08,42,366) மக்களும், விலக வேண்டும் என 52 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர்.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய ஒன்றியம்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின.
1993–ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்த்துக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம், வேலைவாய்ப்புகளை பெறலாம், கல்வி கற்கலாம், தொழில் தொடங்கலாம்.
இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.
இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள்.
பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிறநாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த நாட்டில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்துக் கணிப்பு நேற்று ஆரம்பமாகிய நிலையில், அதிக மக்கள் வெளியேற வேண்டும் என்றே வாக்களித்துள்ளனர்.
எவ்வாறாயினும் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தால் அந்த நாட்டின் பணமான பவுண்ட் மதிப்பு சரியும் வாய்ப்பு உள்ளது.
இந்த சரிவானது இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளின் பணத்தின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தொடரவேண்டும் என்ற தரப்பு வெல்லக்கூடும் என்று சில கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியதை அடுத்து பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு உயர்ந்து பின்னர் மீண்டும் சரிந்தமை கூறத்தக்கது.
READ MORE | comments

கல்விச் சேவை சிக்கனக் கடனுதவு சங்கத்தின் கிழக்கு மாகாண இயக்குனராக பா.செல்லத்துரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

வரையறுக்கப்பட்ட கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவு சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான இயக்குனராக  ஆசிரியர் பாவநாசம் செல்லத்துரை தேர்ந்தெடுக்ப்பட்டுள்ளார்.
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசலையில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி வருகின்ற இவர் சென்ற மாதம் நடைபெற்ற பொதுச் சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் பட்டிருப்பு வலயத்தின் சார்பில் பொதுச் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
 பொதுச் சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் அண்மையில கொழும்மில் அமைந்துள்ள தலைமைக் காரியாலத்தில் நடைபெற்றது. இதன் போதே  கிழக்கு மாகாணத்திற்கான இயங்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அரச கரும மொழி திணைக்களத்தில் சிங்கள மொழிக் கான வளவாளராகவும் செயற்பட்டு வருவதுடன் மும் மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

மட்டக்களப்பில்சுவாமி தந்திரதேவா மகராஜ் நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு வியாழக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது ..
அமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்தி எமது பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியில் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.DSC_1527DSC_1528DSC_1537
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |