Home » » மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் வகுப்பறைகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டடம் மற்றும் முன் நுழைவாயில் திறப்பு விழா

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் வகுப்பறைகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டடம் மற்றும் முன் நுழைவாயில் திறப்பு விழா


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடங்களுடனான விஞ்ஞான ஆய்வுகூடமும் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
தேசிய பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 23 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிட திறப்பு பாடசாலை அதிபர் க.தம்பிராஜா தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



இந்த திறப்புவிழாவில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் அமைச்சின் செயலாளர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



இதன்போது பாடசாலை சமூகம் மற்றும் அரசியல்வாதிகளினால் இராஜாங்க அமைச்சர் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வின் போது உரையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் அவர்கள் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு 8.3 கோடி ரூபா நிதியினை பௌதீக வளாப்பற்றாக்குறைக்காக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களின் பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்படக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 































Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |