Advertisement

Responsive Advertisement

நாளை வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை?

ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக எதிர்வரும் 28ம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த வாய்மூல அறிக்கை நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணையத்தளத்தில் வெளியிடப்படலாம் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செயற்பாடானது ஒரு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மனித உரிமைகள் ஆணையாளரின் இந்த அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்படுவதன் மூலம் உறுப்பு நாடுகள் தமது அவதானிப்புகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments