இதன்படி இரண்டு பிரிவாக மின்பாவனை காலத்தை பிரித்து கட்டண சலுகைகள் வழங்கப்படவுள்ளது. இதில் மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையும் மற்றும் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையும் மின்சாரத்தை பயன்படுத்தும் காலப்பகுதியை இரண்டாக பிரித்து இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையான மின் பாவனைக்கான கட்டணத்தில் மற்றைய நேரத்திற்கான கட்டணத்திலும் பார்க்க 40 வீதம் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட வுள்ளது.
இதனை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இதற்காக தனியான மின் மானியொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments