வேகமாக உடலுக்குள் ஊடுருவும் புதியவகை கொரோனா வைரஸ்-சுகாதார அமைச்சருக்கு சென்ற அறிக்கை

Saturday, October 31, 2020

 


இலங்கையில் கொரோனா புதிய வைரசின் திரிபுத்தன்மை தொடர்பாக Strain அறிக்கை சுகாதார அமைச்சுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொடர்பான அறிக்கை குறித்து விசேட அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிட்டார். இதன்போது இந்த வைரசின் செயற்பாடு குறித்து சுகாதார அமைச்சர் கருத்து தெரிவித்தார். இந்த வைரஸ் துரிதமாக பரவக்கூடியது என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக ஜனாதிபதி இது தொடர்பில் ஆலோசனை வழங்கினார். இம்முறை கொவிட் - 19 வைரசின் தன்மை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கமைவாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவி உள்ளிட்ட குழுவினர் இந்த வைரசின் தொற்று தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.ஆய்வு அறிக்கை சுகாதார அமைச்சிற்கு கிடைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு அமைவாக இந்த காலப்பகுதியில் இலங்கையில் தற்பொழுது ஒருவகை Strain வைரஸ் மாத்திரமே உள்ளது. இது மினுவாங்கொடை, பேருவளை, மீன் சந்தை, உள்ளிட்ட இலங்கையில் பல இடங்களில் உண்டு.

இந்த ஆய்வின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பேராசிரியர் தலைமையிலான குழுவினர் இந்த வைரசின் அளவு மிகவும் வேகமாக உடலிற்குள் ஊடுருவி பாரிய அளவில் வளர்ச்சி அடைவதுடன் மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மையுடைய வைரஸ் என்றும் குறிப்பிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னர் இருந்த கொவிட் வைரஸ் வகையிலும் பார்க்க இந்த வைரஸ் மாறுபட்டது. இந்த வைரஸ் B142 பிரிவிற்கான துனை குழுவில் அடங்கும் சார்ஸ் வைரசுடன் தொடர்புபட்டதாகும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எமது நாட்டில் மக்களிடம் கேட்டுக்கொள்வது அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நோயை இலங்கையில் இல்லாதொழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

பொது மக்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து தங்களது ஒத்துழைப்பை இந்த வேலைத்திட்டத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

READ MORE | comments

இறக்குமதி செய்யப்பட்ட மீன் பொதிகளில் கொரோனா - உடன் விதிக்கப்பட்டது தடை

 


ஈக்வடோர் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பொதிகளில் கொரோனா வைரஸ் இருந்தமையை சீன அதிகாரிகள் கண்டு பிடித்ததை அடுத்து அந்த மீன் பொதி இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்டது.

ஈக்வடோர் கடல் உணவு தயாரிப்பு உற்பத்தியாளரான பயர்ஸ்பா நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை சீன சுங்க அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். சோதனையில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பொதிகளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, ஒரு வாரத்திற்கு அந்த நிறுவனத்திலிருந்து மீனகளை இறக்குமதி செய்ய சீன சுங்க அதிகாரிகள் தற்காலிக தடை விதித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் உறைந்த உணவுப் பொருட்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானால் அந்நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்ய ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்படும் என சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் கொரோனா உறுதியானால் ஒரு மாதத்திற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என சீன சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் பெரும்பாலும் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பெரும்பகுதிகளில் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது, இருப்பினும் மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் சமீபத்தில் நோய் பரவல் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

கிழக்கில் 3பேருக்கு தொற்று உறுதி : மட்டக்களப்பில் இருவர்

 


கிழக்கு மாகாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று இன்று(31) சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் அம்பாறையில் ஒருவருமாக மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 16வயது இளைஞன் ஒருவன் தொற்றுக்குள்ளாமை உறுதிசெய்யப்பட்டது. குறித்த நபர், பேலியகொட மீன்சந்தைக்கு சென்று வந்து கொரோனா தொற்றுக்காரணமாக சிகிச்சை பெற்றுவருபவருடன் தொடர்வை பேணியவர் என தெரியவருகின்றது.

அதேபோன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியிலும் ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பிற்கு மேசன் வேலைக்காக சென்று கடந்த நான்கு நாட்களுக்கு முதல் வருகைதந்திருந்த நிலையில், களுதாவளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். குறித்த நபருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது தொற்றுக்குள்ளானமை சற்று முன்னர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதே போன்று கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிற்குட்பட்ட இறக்காமம் பகுதியிலும் ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

மேலும் 137 கொரோனா நோயாளர்கள் அடையாளம் ...!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 38 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 99 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.
READ MORE | comments

சற்று முன்னர் மட்டக்களப்பு- களுத்தாவளையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள களுதாவளை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


குறித்த நபர் களுதாவளை முருகன் கோயில் வீதியை சேர்ந்த 28வயதுடையவர் என்பதுடன் குறித்த நபர் கொழும்பில் இருந்து வந்து தனிமைப்படுத்தலில் வைத்திருந்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
READ MORE | comments

முழு நாட்டையும் முடக்குவதா? கொரோனா தாக்கத்தோடு வாழ பழகுங்கள் - விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

 


முழு நாட்டையும் முடக்கி கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது. கொரோனா வைரஸ் தாக்கத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என ஆயுர்வேத வைத்தியத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்திட்டம் இவ்வாரம் முதல் செயற்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்குவது குறித்து ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

பல்கலைக்கழகங்களுக்கு 41000 மேற்பட்ட மாணவர்கள் அனுமதி

 


இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடங்களுக்கு 405 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இந்நிலையில், ஒக்டோபர் 28 திகதி “கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனத்தை பூரணமான பல்கலைக்கழகம் ” என அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரிவு 21 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
READ MORE | comments

தற்போது பரவும் கொரோனா வைரஸ் முன்னரை விட வீரியமானது

 


நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ், முன்னர் பரவியதை விட வித்தியாசமானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


தற்போதைய கொரோனா வைரஸ் வீரியமானது என்பதால், தொற்று பரவலின் வேகம் அதிகரிக்குமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, பேலியகொடை மீன் சந்தை மற்றும் பேருவளை துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது
READ MORE | comments

பெரியகல்லாற்றில் இடி மின்னல் தாக்கத்தால் வீட்டு மின் இணைப்பு சேதம் , மின் உபகரணங்கள் செயலிழப்பு

 


(ரவிப்ரியா)


மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாற்றில் 30ந் திகதி இரவு 7.00 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கத்தால,; அரச வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டில் உள் மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரதான மின் இணைப்பு கருவி புகைந்து எரியத் தொடங்கியது.
 
 வீட்டு உரிமையாளர்கள் புத்தி சாதூரியமாக செயற்பட்டு மின் தொழில்நுட்பவியலாளர் ஒருவரின் உதவியுடன் அதிஸ்டவசமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனால் பாரிய தீ அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. எனினும் உடல் ரீதியில் வீட்டுரிமையாளர்களான தம்பதிகள் இருவரும் சிறு பாதிப்பிற்குள்ளாகினர்;.

இதே வேளை பெரியகல்லாற்றில் பல வீடுகளில் இடி மின்னல் தாக்கத்தால,; மின் குமிழ்கள் செயலிழந்துள்ளதுடன் மின் உபகரணங்களும் பாதிக்கப்பட்டது
READ MORE | comments

திருகோணமலை- இலங்கைத்துறைமுக விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

 


திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறைமுகத்தில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இலங்கைத்துறைமுகத்தில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
READ MORE | comments

வாழைச்சேனையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை!

 


வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லாத சந்தர்ப்பத்திலும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மொத்தம் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற இடங்களில் கடமையாற்றியவர்கள், வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் விபரங்கள் திரட்டப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் தொழில் புரியும் அன்றாட தொழிலாளிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை ஐஸ் தொழிற்சாலை ஊழியர்கள், கொழும்பு சென்று வந்து தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என இருபத்தைந்து பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், இதன் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


READ MORE | comments

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும்‼‼‼‼‼ - கல்விச் செயலர்-


👉பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா சிலுமின செய்திப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கோவிட்19 தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

122 பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மாணவர்களும் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதிருக்க மீண்டும் தொலைக்கல்வி  நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திய வகையில் அரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வசதிகள் குறைந்த கிராமிய பிரதேச மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத் திட்டத்தை தயாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 5 ஆம் திகதி வழங்கப்பட்டது.

உயர் தரப்பரீட்சை முடிவடைந்த்தும் மூன்றாம் தவணை நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

சிலுமின பத்திரிகையின் முதற்பக்க செய்தி கீழே தரப்பட்டுள்ளது

copid NIE

READ MORE | comments

மாளிகா வீதியில் கரைபுரண்டோடிய வெள்ளம் : வீடுகளிலும் தஞ்சம் புகும் அபாயத்திற்கு பல ஆண்டுகளாக நிரந்தர தீர்வில்லை - உடனடி தீர்வுக்கு மக்கள் கோரிக்கை

 


நூருல் ஹுதா உமர்.


 

கல்முனை மாநகர சபை - காரைதீவு பிரதேச சபை எல்லை வீதியான மாளிகா வீதியில் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக நீடித்து வரும் வெள்ளநீர் தேங்கி நிற்கும் அவலம் இம்முறையும் தொடர்கிறது. காரைதீவு பிரதேச செயலகம்- சாய்ந்தமருது பிரதேச செயலகம். சம்மாந்துறை பொலிஸ்- கல்முனை பொலிஸ்சாய்ந்தமருது வைத்திய அதிகாரி காரியாலயம்- காரைதீவு வைத்திய அதிகாரி காரியாலயம்பொத்துவில் தேர்தல் தொகுதி- கல்முனை தேர்தல் தொகுதி என எல்லைகளை பிரிக்கும் இந்த வீதியில் மழைக்காலங்களில் பல மணிநேரம் பொதுமக்களும்வாகன சாரதிகளும் போக்குவரத்தில் ஈடுபடுவது கடினமாகவே அமைத்துள்ளது.

 




முறையான வடிகானமைப்பு கடற்கரை வீதிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் ஒழுங்கான பராமரிப்பு இல்லாமையே இந்த நிலைக்கு காரணமாக அமைகின்றது. சிறியளவிலான மழை பெய்தாலும் பெரியளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடமாக இந்த வீதி மாறியுள்ளது. எட்டு சிறிய வீதிகளின் மழைநீர் சந்திக்குமிடமாக உள்ள இந்த வீதியில் பள்ளிவாசல்
இரண்டு பாடசாலைகள்வர்த்தக நிலையங்கள்மக்களின் குடியிருப்புநாடுபூராகவும் மீன்களை விநியோகிக்கும் மீன்வாடிகள் என பல முக்கிய இடங்கள் அமைந்துள்ளது.

 

மாளிகைக்காடு ஜுனைட் வீதிபைசால் வீதிமாளிகா வீதி ஆகிய வீதிகளில் கடந்த ஒரு தசாப்தங்களாக முறையாக வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமல் மண்கல்குப்பைகள் அடைத்து கொண்டிருப்பதனால் மழைநீர் வடிந்தோட முடியாமல் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் நுழைகிறது. இதனால் சிறுவர்கள்முதியோர்கள் பல சகிக்க முடியா துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதே போன்றே சாய்ந்தமருது ஸாலிஹா அரிசி ஆலை வீதிகுத்தூஸ் வைத்தியர் வீதிமாளிகா வீதியின் நிலையும் காணப்படுகின்றது.

 

ஒவ்வொரு வருடமும் இவ்வாறு மழைநீர் தேங்கி நிற்கும் போது தற்காலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் நிரந்தர தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த வீதியில் வசிக்கும் மக்கள் மணல் மூட்டைகளை கட்டி தமது வீடுகளுக்குள் மழைநீர் வராமல் அணைகட்டி பாதுகாக்கின்றனர். மிகவும் சன நெரிசல் கூடிய இந்த வீதியில் பிரதான சாலைக்கு நிகரான வாகன போக்குவரத்தும் அதிகம். அதே போன்று வர்த்தக நிலையங்களுக்குள் மழைநீர் புகுவதனால் பல வகையான நஷ்டங்களை வர்த்தகர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. இனி எதிர்கொள்ளப்போகும் மழைக்காலத்தில் படகுகள் மூலமே பயணிக்கும் அபாய நிலை உள்ளது.

 

மாளிகைக்காடு லெனின் வீதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள தோணாஅல்- ஹுசைன் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள தோணாசாய்ந்தமருது அல்- ஹிலால் வீதியில் அமைந்துள்ள தோணாசாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தோணாசாய்ந்தமருது களப்பு ஆகியவற்றில் படர்ந்துள்ள சல்பினியா வகை தாவரங்கள்குப்பைகள்கற்கள்மரக்குற்றிகள் என்பன அகற்றப்படுவதன் மூலம் இந்த வீதியில் பல மணித்தியாலயங்களுக்கு மழைநீர் தேங்காமல் தவிர்க்கமுடியும். அத்துடன் மாளிகைக்காடு ஜுனைட் வீதிபைசால் வீதிமாளிகா வீதிசாய்ந்தமருது ஸாலிஹா அரிசி ஆலை வீதிகுத்தூஸ் வைத்தியர் வீதிமாளிகா வீதி ஆகியவற்றில் உள்ள வடிகான்களை துப்பரவு செய்து அதனுள் இருக்கும் மண்கல்குப்பைகளை அகற்றுவதன் மூலம் வடிகானுக்கு பக்கத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் மழை நீர் செல்வதை தடுத்து அங்கு வாழும் சிறுவர்கள்,முதியோர்களுக்கு நிம்மதியை வழங்க முடியும்.

 

இதனை யார் செய்வது என்பதே இங்குள்ள பிரச்சினையான விடயமாக உள்ளது. சிறப்பான திண்மக் கழிவகற்றல் சேவைதெருவிளக்கு பொருத்தும் பணிபோன்ற விடயங்களை பொதுமக்களுக்கு  வழங்கும் காரைதீவு பிரதேச சபை இந்த விடயத்தில் சற்று தொய்வு நிலையிலையே உள்ளது. கல்முனை மாநகர சபைக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பதே தெரியாதுள்ளது. மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய சாய்ந்தமருது வைத்திய அதிகாரி காரியாலயம்காரைதீவு வைத்திய அதிகாரி காரியாலயம் போன்றன இவ்விடயத்தில் அசமந்தமாகவே இருக்கின்றது. காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர்கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆகியோரின் வீடுகளும் இந்த இடத்திலையே உள்ளது. மழை நீருடன் வடிகானினுள்ள நீரும் கலந்து வீடுகளுக்குள் செல்கின்றது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பு கூறுவது?

 

காரைதீவு பிரதேச சபைகல்முனை மாநகர சபைவீதி அபிவிருத்தி திணைக்களம்சாய்ந்தமருது வைத்திய அதிகாரி காரியாலயம்காரைதீவு வைத்திய அதிகாரி காரியாலயம் போன்றன ஒன்றிணைந்து உடனடியாக இவ்விடயம் தொடர்பில் நிரந்தர நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. சில மணித்தியாலயங்கள் மட்டுமே தேங்கி நிற்கிறது. பின்னர் வடிந்து சென்றுவிடும் என கதைசொல்லி இந்த விடயத்தை இனிமேலும் கிடப்பில் போட முடியாது.

 

நாட்டின் அசாதாரண சூழ்நிலைமலேரியாடெங்குஉட்பட பல நோய்கள் இந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் இந்த காலகட்டத்தில் இந்த விடயமும் அப்பிரதேச வாழ் மக்களுக்கும் சுகாதார தரப்பினருக்கும் பாரிய தலையிடியாக மாறாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.

READ MORE | comments

தென்னிலங்கையில் பதற்றம்! சிறுவன் பலி- ஐவர் படுகாயம்

 


தென் பகுதியில் ஹம்பாந்தோட்டை - வீரகெட்டியவில் இரண்டு குழுக்களிடையே நேற்றிரவு பாரிய மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் 17 வயதான சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இவர்களில் ஐந்துபேர் படுகாயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலு. விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

READ MORE | comments

அடுத்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

 


20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்த சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமளவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான டயானா கமகே, இஷாக் ரஹுமன், எம்.ரஹீம், நசீர் அகமட், மொஹமட் ஹரிஸ், பைசல் காசிம், அரவிந்தகுமார் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக 

READ MORE | comments

60 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

 


விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


அத்துடன் 1100 இற்கு அதிகமான குழுவினர் தனிமை ப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
READ MORE | comments

கல்முனை பிராந்தியத்தில் வணக்கஸ்தலங்கள் அனைத்தும் பூட்டு

 


(காரைதீவு நிருபர் சகா)


கொரோனா  கொடுர தாக்கம் காரணமாக கல்முனைப்பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன.
நேற்று(30) வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் மீலாதுன்நபி விழா வழமைபோன்று இடம்பெறவில்லை. வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகைகளும் இடம்பெறவில்லை. - 

இந்துக்களின் கேதாரகௌரி விரதம் ஏலவே ஆரம்பித்து நடைபெற்று வந்தபோதிலும் தற்போது பக்தர்கள் ஆலயத்திற்குச் செல்லாமல் வீட்டில் இருந்து விரதத்தை அனுஸ்டித்து வருகின்றனர்.

சிவபிரானை நோக்கிய உமையம்மனின் கேதாரகௌரி விரதம் 28 நாட்கள் அனுஸ்ட்டிக்கப்படுவது. ஆலயத்திற்கு சென்று காப்பறுத்து பின்பு காப்புக்கட்டி வழிபடுவது வழமை. இம்முறை எதிர்வரும் 15ஆம் திகதி தீபாவளியன்று காப்புக்கட்டு நிகழ்வு நடைபெறவிருக்கிறது. எனினும் இன்றைய சூழ்நிலையில் காப்புக்கட்டு நிகழ்வை எவ்வாறு நடாத்துவதென்பது பற்றி மதகுருமார் சிந்தித்து வருகின்றனர்.

கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. நேற்றைய நிலைவரத்தின்படி 61பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கிழக்கின் நிலைமை மோசமடைந்துவருவதால் சுகாதாரத்துறையினரால் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன.

பொதுமக்கள் ஆலயம் பள்ளிவாசல் தேவாலயம் போன்ற வணக்கஸ்தலங்களுக்குச் செல்லாது வீட்டிலிருந்தே இறைவனை வணங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் சம்மாந்துறை ஹிஜ்ரா பதூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் பூட்டப்பட்டுள்ளதையும் இங்கு காணலாம்.
READ MORE | comments

சற்று முன்னர் கொரோனாவினால் 20ஆவது மரணம் பதிவாகியது..!!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் சற்று முன்னர் உயிரழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறித்த கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
READ MORE | comments

பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் இடம்பெற்ற நகை கொள்ளை சம்பவம்- மக்களுக்கு எச்சரிக்கை...!!

 


கொவிட் வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது , மாத்திரைகளையோ அல்லது வேறு எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று வைத்தியர்களும், சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.


பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் நேற்று முன்தினம்(29) இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்தார். பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதாக கூறி மஹவ கெத்தபஹூவ என்ற இடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம்(29) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமையில் இவ்வாறான மோசடிகளில் சிலர் ஈடுப்படுகின்றனர். இந்த மோசடிக்காரர்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர்கள் வந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாத்திரைகளையோ அல்லது வேறு எந்த மருந்துகளையோ தரமாட்டார்கள். இதனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் மூவர் அந்த வீட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிசோதனைக்காக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். அதனை உட்கொண்ட பின்னர் அவர்கள் நித்திரையாகி உள்ளனர். காலையில் பார்த்த போதே தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கணடறிந்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். மஹவ பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

முழு நாட்டுக்கும் பெரும் ஆபத்து! ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணம் வெளியானது

Friday, October 30, 2020

 


ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு, மருத்துவ சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ஆகியோர் உதவி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இன்னும் தங்கள் பொறுப்புகளைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் என்றும், அந்த நோயாளிகளைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தக்காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வௌிவருகின்றது இன்றைய மாலைசேர செய்தித் தொகுப்பு,

READ MORE | comments

மீன் பிடிப்பவரின் மனைவிக்கும் 11 மாத குழந்தைக்கும் தொற்றியது கொரோனா

 


எஹெலியகொட மருத்துவ பிரிவில் இன்று எட்டு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தை மற்றும் கொழும்பு துறைமுகக் கப்பல்களில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களில் சிறிசமன்புர பகுதியில் வசிக்கும் மீன் பிடிப்பவரின் மனைவியும், அவரது 11 மாத குழந்தை மற்றும் அவரது சகோதரரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து அவர்களது நண்பர்கள் சுமார் 200 பேர் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

READ MORE | comments

மின்னல் தாக்கியதில் கணவனும் மனைவியும் பலி !

 


காரைதீவு சகா , விக்கி )


அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை (30) வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.


விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார். 

இவர்கள் விவசாயிகளாவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நலக்கடலை (கச்சான்) செய்கையிலீடுபட்டுக்கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது
.
திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


மாலை 6 மணிமுதல் மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

அம்பாறையில் பலத்த காற்றுடன் மழை- சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு!

 


(டபிள்யூ.டிக்;ஷித்)

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை மற்றும் தம்பிலுவில், திருக்கோவில் போன்ற பகுதிகளில் வீசிய சுழல் காற்றுக் காரணமாக வீதிகளில் அதிகளவிலான தூசு மண் வீசப்பட்டன.

இதனால் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வீதிப் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டன.

இதனால் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் மழை நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது.

தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் பலவற்றிலும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மாலை வேளையில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது.
READ MORE | comments

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐக் கடந்தது...!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!!

 


மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இன்று மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து இன்று (2020.10.30) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தானது, மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியினுள் பாய்ந்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் ச்சய்ய்க்கிளில் வந்தவர் சிறு காயங்களுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த விபத்தின் மேலதிக சேதங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

ஆபத்தான நிலைமையினை உணர்ந்து அனைவருயும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்- யாழ் மாவட்ட அரச அதிபர்!!

 


ஆபத்தான நிலைமையினை உணர்ந்து அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபர்க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


யாழ் மாவட்டத்தின் Covid-19 செயலணி கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் பங்குபற்றுதலோடு
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று 30.10.2020 காலை இடம்பெற்றது.

செயலணி கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பணிப்பாளர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பொலீஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர ஆணையாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், சுகாதார சேவை சம்மந்தம்பட்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஊடகத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள்
இன்று யாழ் மாவட்ட கொரோணா செயணி கூட்டத்தில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். அந்த தீர்மானத்தினை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார் .

1. மாவட்டத்தில வழிபாட்டு தலங்களில் வழிபாட்டில் ஈடுபடுகின்ற கோயில் குருக்கள்,மதகுரு தவிர்ந்த ஏனையோர் ஆலயத்துக்குள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அது போல அன்னதானம் மற்றும் ஏனைய ஆலயசெயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது .

2. பொது மக்கள் ஒன்று கூடுகின்ற வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் சந்தை மற்றும் ஏனைய வர்த்தக செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

3. திருமண வீடுகள்- 50பேருக்கு மேற்படாமல் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ,திருமணம் மற்றும் ஏனைய வீட்டு நிகழ்வுகள் வீட்டிலேயே நடத்தவேண்டும். திருமண மண்டபங்களில் நடாத்த தடை செய்யப்பட்டுள்ளது.

4. மேலும் மரணச்சடங்கிலும் 25பேருக்கு மேற்படாதவாறு நடாத்தவேண்டும்.

5. ஏனைய வெளி இடங்களிலிருந்து இந்த மரண வீடுகளுக்கு விழாக்களுக்கும் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

6. பொதுப்போக்குவரத்து ஆசன ஒதுக்கீட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் பற்றிய விவரங்களை பெற்று கொள்வது மிக அவசியம்.

7.  அங்காடி வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் அவர்களுடைய செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்களான மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விற்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது .

8. விளையாட்டு நிகழ்வுகள் யாவும் மறுத்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது .

9. பொதுமக்களுடைய கூட்டங்கள் அல்லது பொதுமக்கள் எவ்வகையிலேனும் ஒன்று கூடுவது பொறுத்தவரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

10. கல்வி நடவடிக்கைகள் - தனியார் கல்வி நிலையங்கள் குழு வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

11. தரம் 1 இற்கான பாடசாலை அனுமதி நேர்முக பரீட்சைகள் பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்றது .அதனையும் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை பேணி அதனை நடத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

12. நேர்முகத் தேர்வின் போது ஒன்று கூடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

உணவகங்களை பொறுத்தவரையிலே கூடுமானவரை எடுத்துச் செல்ல நடைமுறையினை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதாவது எடுத்துச் சென்று வீட்டிலிருந்து உண்ணக்கூடியவாறான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரியுள்ளோம்.

தொழிற்சாலைகள் நடவடிக்கைகளை பொறுத்தவரையிலே தொழிலுக்கு செல்பவர்களை கூடுமானவரை தொழிற்சாலைகளில் தங்க வைத்து அவர்கள் தொழில் புரிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மீன் பதனிடும் நிலையங்கள் குருநகர் பாசையூர் பகுதிகளில் உள்ள மீன் பதனிடல் நிலையங்களை பொறுத்தவரையில் தற்காலிகமான முடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுடைய பரிசோதனை முடிகளை அடிப்படையாகக்கொண்டு அங்கு பணியாற்றுபவர்களுக்கான மேலதிக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசாங்க அலுவலகங்களை பொறுத்தவரையிலே உத்தியோகத்தர்களுடைய தகவல் திரட்டை பெற்று வைத்திருத்தல் வேண்டும்.
முடக்கப்பட்டுள்ளள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியே செல்வதுமுற்றாக தடுக்கப்பட்டுள்ளது.

திறந்த சந்தைப் பகுதி மற்றும் பொருளாதார நிலையமாக இயங்கக்கூடிய பகுதிகள் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள் பொதுமக்கள் ஒன்று கூடுகின்ற மத ரீதியானதோ அல்லது எவ்வகையாயினும் ஒன்று கூடல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும்.

வெளி மாவட்டத்திலிருந்து வருவது தொடர்பில் தங்களுடைய பதிவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். தற்போது மேல் மாகாணத்திலிருந்து எந்த வாகனங்களும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை .

எனவே வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் தமது பதிவுகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை கிராம அலுவலர் மட்டத்தில் மேற்கொண்டுள்ளோம்.

முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அரச உத்தியோகத்தர்களிற்கு அவர்களுக்குரிய விசேட விடுமுறை சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக தீர்மானித்துள்ளோம். என தெரிவித்த அரச அதிபர் மேலும் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு புதிய விழிப்புணர்வு நடவடிக்கையினை அனைத்து மட்டங்களிலும் மேற்கொள்வதாகவும் தீர்மானித்துள்ளோம். அதாவது பொதுமக்கள் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அரச திணைக்களங்கள் போன்ற சகல இடங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு போலீஸ் தரப்பினுடைய உதவி பாதுகாப்பு தரப்பினர் உதவிகளை கோரியிருக்கின்றோம். குறிப்பாக ஒருங்கிணைப்பதற்கான மாவட்ட செயலகத்தில் ஏழு நாட்களும் இயங்கக் கூடிய வகையிலே பிரதேச செயலர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தை இணைக்க கூடியவாறாக அதனை நடைமுறைப் படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். ஒருங்கிணைப்பு அலுவலகத்தினுடைய தொலைபேசி இலக்கம் 0212225000.

இந்த இலக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு இலக்கமாக செயற்படும். கூடுமானவரை இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.எனவே தற்போது ஆபத்தான நிலைமையில் உள்ளதன் காரணமாக அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் மாவட்ட அரச அதிபர் கோரியுள்ளார்.
READ MORE | comments

எதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் சவாலாக காணப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் நேற்று காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும். ஒன்று கூடல்களை தவிர்த்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக உற்சவங்களில் பங்பேற்பது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது, சுற்றுலாக்கள் மேற்கொள்வது போன்ற விடயங்களை தவிரத்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பாக நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது. எனவே ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் உட்பட அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு கொரோனா உறுதி

 


கொழும்பு - 14 குற்றவியல் பிரிவு (CCD) பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு அதிகாரிக்கு கொரோனா தொற்றியதை அடுத்து 20 பொலிஸ் அதிகாரிகள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.

அந்த 20 அதிகாரிகளில் 13 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

பாடசாலைகளை மீண்டும் நவம்பர் 9 திகதி ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டது!!

 


நவம்பர் 9 திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பரிசீலினை மேற்கொள்ள சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார அணுகுமுறைகள் குறித்த எழுத்து மூல பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் இணையவழிக் கற்பித்தல் தொடர்பான மேற்பார்வை ஒன்றை செய்தவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இன்மை காரணமாக இந்த மேற்பார்வையை மேற்காெள்ளத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
READ MORE | comments

ஏன் சந்திக்காமல் சென்றார் பொம்பியோ? அதிகார குறைப்பு காரணமா?

Thursday, October 29, 2020

 


20 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பிரதமர் மகிந்தவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டநிலையிலேயே அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ அவரை சந்திக்காமல் சென்றிருக்கலாம் என கொழும்பு அரசியல் மட்டத்தில் பேசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனைவை மட்டுமே சந்தித்திருந்தார்.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் சந்திக்காமல் சென்றிருப்பது அரசமட்டத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

இதற்கு முன் இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழு ஜனாதிபதி, பிரதமர் என உயர்மட்டத்தை சந்தித்தே சென்றது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்க ராஜாங்க செயலரை பிரதமர் மகிந்த ராஜபக்சவே சந்திக்க விரும்பவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

சற்று முன்னர் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

 


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 414 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுந்த 62 பேரும், முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய 352 பேருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.
READ MORE | comments

"மட்டக்களப்பில் கொரோனா தொற்று சமூக தொற்றாக மாறும் அபாயம் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்"- கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்!!

 


இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பகுதியில் 2பேருக்கு ம், பெரிய போரதீவு பகுதியில் ஒருவருக்குமாக 3கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இன்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்,


இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பெரிய போரதீவில் அடையாளம் காணப்பட்ட நபர் 2020.10.22 அன்றுகொழும்பு வம்பலப்பிட்டிய பகுதியிலிருந்து பேருந்து மூலம் வந்தவர் எனவும், அவருடன் வந்த 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் நெருங்கி பழகியவர்கள் மற்றும் அவருடன் பேருந்து மூலம் பயணம் செய்தவர்கள் உடன் அறியத்தருமாறும் பொதுமக்கள் கூடிய அளவில் வீடுகளில் இருக்குமாறும் அவர் தெரிவித்தார்.


அத்துடன் கல்முனை பிராந்தியப் பகுதியில் பொத்துவில் பகுதியில் 7பேரும், கல்முனையில் 3பேரும், மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் ஒவ்வொருவர் என மொத்தம் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வாழைச்சேனை பகுதியில் 29பேரும், மொறக்கட்டான்சேனை மற்றும் பெரியபோரதீவு பிரதேசங்களில் ஒவ்வொருவருமாக மொத்தம் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் தொடர்புடைய வாழைச்சேனையை சேர்ந்த 72 குடும்பங்களை சேர்ந்த 281பேரும், மொறக்கட்டான்சேனையை சேர்ந்த 4குடும்பங்களை சேர்ந்த 12பேருமாக கிழக்கு மாகாணத்தில் 1750க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 466பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போரதீவு பகுதிக்கு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த பிரதேசம் சன நடமாட்டம் குறிக்கப்பட்டு காணப்படுவதாகவும் அவ்வாறு வேறு யாராவது அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பாக தேசிய கொரோனா தொற்று தடுப்பு குழு முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் இதுவரை இவ்வாண்டு 2550பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும் அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் கடந்த மாதம் மாத்திரம் 164 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் நீர் தேங்கி நிக்கக் கூடிய இடங்கள், நீர் தங்கி , மற்றும் சிரட்டைகள், அத்துடன் நீர் தேங்கக்கூடிய பொருட்கள், கிணறுகள் தொடர்பில் கவனம் எடுக்குமாறும், சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை மிக மோசமாக பரவி வருவதாகவும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை தங்கள் பாதுகாக்க முடியுமான ஏற்பாடுகளை செய்ய வேன்டும் என்றும் கூடிய அளவு வீட்டினுள் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |