20 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பிரதமர் மகிந்தவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டநிலையிலேயே அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ அவரை சந்திக்காமல் சென்றிருக்கலாம் என கொழும்பு அரசியல் மட்டத்தில் பேசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனைவை மட்டுமே சந்தித்திருந்தார்.
எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் சந்திக்காமல் சென்றிருப்பது அரசமட்டத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
இதற்கு முன் இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழு ஜனாதிபதி, பிரதமர் என உயர்மட்டத்தை சந்தித்தே சென்றது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்க ராஜாங்க செயலரை பிரதமர் மகிந்த ராஜபக்சவே சந்திக்க விரும்பவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: