Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறக்குமதி செய்யப்பட்ட மீன் பொதிகளில் கொரோனா - உடன் விதிக்கப்பட்டது தடை

 


ஈக்வடோர் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பொதிகளில் கொரோனா வைரஸ் இருந்தமையை சீன அதிகாரிகள் கண்டு பிடித்ததை அடுத்து அந்த மீன் பொதி இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்டது.

ஈக்வடோர் கடல் உணவு தயாரிப்பு உற்பத்தியாளரான பயர்ஸ்பா நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை சீன சுங்க அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். சோதனையில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பொதிகளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, ஒரு வாரத்திற்கு அந்த நிறுவனத்திலிருந்து மீனகளை இறக்குமதி செய்ய சீன சுங்க அதிகாரிகள் தற்காலிக தடை விதித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் உறைந்த உணவுப் பொருட்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானால் அந்நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்ய ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்படும் என சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் கொரோனா உறுதியானால் ஒரு மாதத்திற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என சீன சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் பெரும்பாலும் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பெரும்பகுதிகளில் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது, இருப்பினும் மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் சமீபத்தில் நோய் பரவல் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments