Advertisement

Responsive Advertisement

வேகமாக உடலுக்குள் ஊடுருவும் புதியவகை கொரோனா வைரஸ்-சுகாதார அமைச்சருக்கு சென்ற அறிக்கை

 


இலங்கையில் கொரோனா புதிய வைரசின் திரிபுத்தன்மை தொடர்பாக Strain அறிக்கை சுகாதார அமைச்சுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொடர்பான அறிக்கை குறித்து விசேட அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிட்டார். இதன்போது இந்த வைரசின் செயற்பாடு குறித்து சுகாதார அமைச்சர் கருத்து தெரிவித்தார். இந்த வைரஸ் துரிதமாக பரவக்கூடியது என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக ஜனாதிபதி இது தொடர்பில் ஆலோசனை வழங்கினார். இம்முறை கொவிட் - 19 வைரசின் தன்மை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கமைவாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவி உள்ளிட்ட குழுவினர் இந்த வைரசின் தொற்று தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.ஆய்வு அறிக்கை சுகாதார அமைச்சிற்கு கிடைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு அமைவாக இந்த காலப்பகுதியில் இலங்கையில் தற்பொழுது ஒருவகை Strain வைரஸ் மாத்திரமே உள்ளது. இது மினுவாங்கொடை, பேருவளை, மீன் சந்தை, உள்ளிட்ட இலங்கையில் பல இடங்களில் உண்டு.

இந்த ஆய்வின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பேராசிரியர் தலைமையிலான குழுவினர் இந்த வைரசின் அளவு மிகவும் வேகமாக உடலிற்குள் ஊடுருவி பாரிய அளவில் வளர்ச்சி அடைவதுடன் மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மையுடைய வைரஸ் என்றும் குறிப்பிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னர் இருந்த கொவிட் வைரஸ் வகையிலும் பார்க்க இந்த வைரஸ் மாறுபட்டது. இந்த வைரஸ் B142 பிரிவிற்கான துனை குழுவில் அடங்கும் சார்ஸ் வைரசுடன் தொடர்புபட்டதாகும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எமது நாட்டில் மக்களிடம் கேட்டுக்கொள்வது அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நோயை இலங்கையில் இல்லாதொழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

பொது மக்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து தங்களது ஒத்துழைப்பை இந்த வேலைத்திட்டத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments