போலி நாணயத்தாள்கள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களின் பயன்பாடு அதிகரிக்கக் காணப்படக்கூடும்.
எனவே உங்களுக்கு கிடைக்கும் நாணயத்தாள்கள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு அளிக்கவும்.
அதிகளவில் ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் தான் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் 596 ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களும் 2025 ஆம் ஆண்டில் 535 ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி நாணயத்தாள்களை வைத்திருத்தல்,அச்சிடுதல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 20 வலுட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
0 Comments