காரைதீவு சகா , விக்கி )
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை (30) வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.
விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார்.
இவர்கள் விவசாயிகளாவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நலக்கடலை (கச்சான்) செய்கையிலீடுபட்டுக்கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது
.
திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மாலை 6 மணிமுதல் மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: