ஆபத்தான நிலைமையினை உணர்ந்து அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபர்க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின் Covid-19 செயலணி கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் பங்குபற்றுதலோடு
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று 30.10.2020 காலை இடம்பெற்றது.
செயலணி கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பணிப்பாளர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பொலீஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர ஆணையாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், சுகாதார சேவை சம்மந்தம்பட்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஊடகத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.
குறித்த கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள்
இன்று யாழ் மாவட்ட கொரோணா செயணி கூட்டத்தில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். அந்த தீர்மானத்தினை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார் .
1. மாவட்டத்தில வழிபாட்டு தலங்களில் வழிபாட்டில் ஈடுபடுகின்ற கோயில் குருக்கள்,மதகுரு தவிர்ந்த ஏனையோர் ஆலயத்துக்குள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அது போல அன்னதானம் மற்றும் ஏனைய ஆலயசெயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது .
2. பொது மக்கள் ஒன்று கூடுகின்ற வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் சந்தை மற்றும் ஏனைய வர்த்தக செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
3. திருமண வீடுகள்- 50பேருக்கு மேற்படாமல் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ,திருமணம் மற்றும் ஏனைய வீட்டு நிகழ்வுகள் வீட்டிலேயே நடத்தவேண்டும். திருமண மண்டபங்களில் நடாத்த தடை செய்யப்பட்டுள்ளது.
4. மேலும் மரணச்சடங்கிலும் 25பேருக்கு மேற்படாதவாறு நடாத்தவேண்டும்.
5. ஏனைய வெளி இடங்களிலிருந்து இந்த மரண வீடுகளுக்கு விழாக்களுக்கும் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
6. பொதுப்போக்குவரத்து ஆசன ஒதுக்கீட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் பற்றிய விவரங்களை பெற்று கொள்வது மிக அவசியம்.
7. அங்காடி வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் அவர்களுடைய செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்களான மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விற்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது .
8. விளையாட்டு நிகழ்வுகள் யாவும் மறுத்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது .
9. பொதுமக்களுடைய கூட்டங்கள் அல்லது பொதுமக்கள் எவ்வகையிலேனும் ஒன்று கூடுவது பொறுத்தவரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
10. கல்வி நடவடிக்கைகள் - தனியார் கல்வி நிலையங்கள் குழு வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
11. தரம் 1 இற்கான பாடசாலை அனுமதி நேர்முக பரீட்சைகள் பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்றது .அதனையும் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை பேணி அதனை நடத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
12. நேர்முகத் தேர்வின் போது ஒன்று கூடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
உணவகங்களை பொறுத்தவரையிலே கூடுமானவரை எடுத்துச் செல்ல நடைமுறையினை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதாவது எடுத்துச் சென்று வீட்டிலிருந்து உண்ணக்கூடியவாறான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரியுள்ளோம்.
தொழிற்சாலைகள் நடவடிக்கைகளை பொறுத்தவரையிலே தொழிலுக்கு செல்பவர்களை கூடுமானவரை தொழிற்சாலைகளில் தங்க வைத்து அவர்கள் தொழில் புரிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
மீன் பதனிடும் நிலையங்கள் குருநகர் பாசையூர் பகுதிகளில் உள்ள மீன் பதனிடல் நிலையங்களை பொறுத்தவரையில் தற்காலிகமான முடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுடைய பரிசோதனை முடிகளை அடிப்படையாகக்கொண்டு அங்கு பணியாற்றுபவர்களுக்கான மேலதிக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
அரசாங்க அலுவலகங்களை பொறுத்தவரையிலே உத்தியோகத்தர்களுடைய தகவல் திரட்டை பெற்று வைத்திருத்தல் வேண்டும்.
முடக்கப்பட்டுள்ளள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியே செல்வதுமுற்றாக தடுக்கப்பட்டுள்ளது.
திறந்த சந்தைப் பகுதி மற்றும் பொருளாதார நிலையமாக இயங்கக்கூடிய பகுதிகள் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள் பொதுமக்கள் ஒன்று கூடுகின்ற மத ரீதியானதோ அல்லது எவ்வகையாயினும் ஒன்று கூடல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும்.
வெளி மாவட்டத்திலிருந்து வருவது தொடர்பில் தங்களுடைய பதிவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். தற்போது மேல் மாகாணத்திலிருந்து எந்த வாகனங்களும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை .
எனவே வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் தமது பதிவுகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை கிராம அலுவலர் மட்டத்தில் மேற்கொண்டுள்ளோம்.
முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அரச உத்தியோகத்தர்களிற்கு அவர்களுக்குரிய விசேட விடுமுறை சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக தீர்மானித்துள்ளோம். என தெரிவித்த அரச அதிபர் மேலும் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு புதிய விழிப்புணர்வு நடவடிக்கையினை அனைத்து மட்டங்களிலும் மேற்கொள்வதாகவும் தீர்மானித்துள்ளோம். அதாவது பொதுமக்கள் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அரச திணைக்களங்கள் போன்ற சகல இடங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு போலீஸ் தரப்பினுடைய உதவி பாதுகாப்பு தரப்பினர் உதவிகளை கோரியிருக்கின்றோம். குறிப்பாக ஒருங்கிணைப்பதற்கான மாவட்ட செயலகத்தில் ஏழு நாட்களும் இயங்கக் கூடிய வகையிலே பிரதேச செயலர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தை இணைக்க கூடியவாறாக அதனை நடைமுறைப் படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். ஒருங்கிணைப்பு அலுவலகத்தினுடைய தொலைபேசி இலக்கம் 0212225000.
இந்த இலக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு இலக்கமாக செயற்படும். கூடுமானவரை இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்.எனவே தற்போது ஆபத்தான நிலைமையில் உள்ளதன் காரணமாக அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் மாவட்ட அரச அதிபர் கோரியுள்ளார்.
0 Comments