இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பகுதியில் 2பேருக்கு ம், பெரிய போரதீவு பகுதியில் ஒருவருக்குமாக 3கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இன்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்,
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பெரிய போரதீவில் அடையாளம் காணப்பட்ட நபர் 2020.10.22 அன்றுகொழும்பு வம்பலப்பிட்டிய பகுதியிலிருந்து பேருந்து மூலம் வந்தவர் எனவும், அவருடன் வந்த 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் நெருங்கி பழகியவர்கள் மற்றும் அவருடன் பேருந்து மூலம் பயணம் செய்தவர்கள் உடன் அறியத்தருமாறும் பொதுமக்கள் கூடிய அளவில் வீடுகளில் இருக்குமாறும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கல்முனை பிராந்தியப் பகுதியில் பொத்துவில் பகுதியில் 7பேரும், கல்முனையில் 3பேரும், மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் ஒவ்வொருவர் என மொத்தம் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வாழைச்சேனை பகுதியில் 29பேரும், மொறக்கட்டான்சேனை மற்றும் பெரியபோரதீவு பிரதேசங்களில் ஒவ்வொருவருமாக மொத்தம் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் தொடர்புடைய வாழைச்சேனையை சேர்ந்த 72 குடும்பங்களை சேர்ந்த 281பேரும், மொறக்கட்டான்சேனையை சேர்ந்த 4குடும்பங்களை சேர்ந்த 12பேருமாக கிழக்கு மாகாணத்தில் 1750க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 466பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போரதீவு பகுதிக்கு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த பிரதேசம் சன நடமாட்டம் குறிக்கப்பட்டு காணப்படுவதாகவும் அவ்வாறு வேறு யாராவது அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பாக தேசிய கொரோனா தொற்று தடுப்பு குழு முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மட்டக்களப்பு பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் இதுவரை இவ்வாண்டு 2550பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும் அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் கடந்த மாதம் மாத்திரம் 164 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் நீர் தேங்கி நிக்கக் கூடிய இடங்கள், நீர் தங்கி , மற்றும் சிரட்டைகள், அத்துடன் நீர் தேங்கக்கூடிய பொருட்கள், கிணறுகள் தொடர்பில் கவனம் எடுக்குமாறும், சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலைமை மிக மோசமாக பரவி வருவதாகவும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை தங்கள் பாதுகாக்க முடியுமான ஏற்பாடுகளை செய்ய வேன்டும் என்றும் கூடிய அளவு வீட்டினுள் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments: