தங்காலை - குடாவெல்ல பகுதியில் 25 வயதுடைய இளம் தாய்க்கு கோவிட் -19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு 21 நாட்களேயான குழந்தை இருப்பதாகவும், பெண்ணுடன் சேர்த்து குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் கண்டியில் இருந்து கிரிபத்கொட - பெலியகோடா மீன் சந்தையில் ஒரு வாரம் வேலை செய்து விட்டு, உறவினரின் வீட்டில் தங்கி குடாவெல்ல பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் கிரிபத்கொடையில் வசிக்கும் அவரது உறவினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பின்னர் தான் அவருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து குறித்த பெண்ணுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குறித்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments: