ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு உடனடித் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு பராமரிப்புச் சபை தயாராக இருப்பதாக மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலும் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமையில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளதால் 24 மணித்தியாலயமும் எமது பராமரிப்புக் குழுவினர் செயல்படுகின்றனர் என்றார்.
மின்சார பிரச்சினைகள் தொடர்பில் 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குவதன் மூலம் எமது குழுவினர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments