கல்முனை சுபத்திராராம விகாராதிபதி மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்த சந்திப்பு !

Saturday, February 29, 2020


(பாறுக் ஷிஹான்)
கல்முனை பிரதேசத்திற்கு மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்தவினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தருமான றியாஸ் தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பல்வேறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

மேலும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி மீள்குடியேற்ற திட்டமான இஸ்லாமபாத் மீள்குடியேற்ற திட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு பிரதிநிதி கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் , கல்முனை சுபத்திராராம விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர்,பள்ளிவாசல் நிர்வாகத்தினர் , இளைஞர்கள் , உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


கல்முனை சுபத்திராராம விகாராதிபதி மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்த சந்திப்பு !

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
READ MORE | comments

ஒருவழிப் பாதையாக மாறும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதி!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியின் ஆனைப்பந்தி பிள்ளையார் கோயில் சந்தியில் இருந்து வாவிக்கரை வீதி-01 சுற்றுவட்டம் வரையான 800 மீற்றர் நீளமான பகுதி எதிர்வரும் மாதம் 05ஆம் திகதியில் இருந்து (05.03.2020) வாகனப் போக்குவரத்திற்கு ஒருவழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது என மட்டக்களப்பு வீதி அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


READ MORE | comments

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- விழிப்புணர்வுடன் செயற்பட அறிவுறுத்து

இலங்கையில் தற்போது சுற்றாடல் வெப்பநிலை வழமை நிலையிலும் பார்க்க உயர் மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகரித்துள்ள வெப்பநிலையால் உடலில் ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இக் காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள்,நோயாளர்கள் தொடர்பில் அதிகூடிய கவனம் தேவையென்றும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளதாவது,
உஷ்ண நிலையை குறைப்பதற்காக அதிக தண்ணீரைப் பருக வேண்டும். அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் தமது உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய உடல் உழைப்பை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் மாலை நேரங்களில் நிழலான இடங்களில் உடற்பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் சிறுவர்களையும் வெட்டவெளியில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அவர்களை குளிரூட்டப்பட்ட அறையில் அல்லது மின்விசிறியின் கீழ் இருக்கச் செய்ய வேண்டும்.
பருத்தியிலான ஆடைகளை அணியும் அதேநேரம் குறைவான ஆடைகளையே அணிய வேண்டும். நேரடி வெயிலுக்குச் செல்லும்போது தொப்பி அல்லது குடையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
வெப்பமான உணவு அல்லது திரவம் விசேடமாக சூடான தேனீரைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறானோர் அதிக வெப்பத்தில் அல்லது சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கூடுதலான குளிர் அல்லது இனிப்புடனான பானங்களை அருந்துவது பொருத்தமற்றதாகும். மதுசாரங்களை பயன்படுத்துவதும் ஏற்புடையதாகாது.
நபர் ஒருவர் உடல் சோர்வுக்கு உள்ளாகும் பொழுதும், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுமாயின் உடனடியாக பணிகளை நிறுத்தி நிழல் உள்ள இடம் அல்லது குளிர் இடங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைப் பாரம் அல்லது மயக்க நிலை ஏற்படுமாயின் ஏனையோருக்கு தெரிவிக்க வேண்டும். சூரிய ஒளியினால் சருமம் சிவக்கக்கூடும். உடல் அரிப்பும் ஏற்படக்கூடும். சில வேளைகளில் தீக்காயம் அல்லது கொப்பளங்கள் ஏற்படக்கூடும். சன் கிறீம் மூலம் இவற்றை தடுக்க முடியும். சருமத்தில் அரிப்பு விசேடமாக, கழுத்தில், மார்பில் அல்லது மார்புக்கு அருகாமையில் ஏற்படக்கூடும்.
கடும் வெப்பத்தின் காரணமாக சிலருக்கு (Heat Strokes ) வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடும். வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் மூளை மற்றும் நரம்பு கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
பக்கவாதமும் ஏற்படக்கூடும். இலங்கையில் பக்கவாதம் பெருமளவில் காணப்படுகின்றது. விசேடமாக கடும் வெப்ப காலநிலையில் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
சிறுவர்கள், 4 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் வெப்பநிலை மாற்றத்துக்கு மத்தியில் தமது உடல் வெப்பநிலையை சமனான நிலையில் வைத்துக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
புத்திசாலித்தனத்துடன் செயற்படுதல் மற்றும் உரிய வைத்திய ஆலோசனையை பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான அதிக வெப்பநிலையுடனான காலத்திலான பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்று சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
READ MORE | comments

பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் தபாலில்


வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பப்படும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


50,000 பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், சுமார் 40,000 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பான பணிகள் ஜனாதிபதி செயலகம் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நியமனங்களில், 80% ஆனோர் பாடசாலைகளில் பயிலுனர் ஆசிரியர்களாக இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


READ MORE | comments

சாய்ந்தமருது பொதுமைதான அபிவிருத்தியை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆரம்பித்து வைத்தார்.சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தின் 03ம் கட்ட அபிவிருத்திப்பணி கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும்,  அ.இ.ம. காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், கண்காட்சி கிரிக்கட் போட்டியும் சாய்ந்தமருது -  மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  நேற்று (28) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது -  மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சுற்றுவேலி அமைக்கும் வேலைத்திட்டம் இந்நிகழ்வின் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.


தமது கோரிக்கையை ஏற்று உதவ முன்வந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், அ.இ.ம. காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிபுக்கு  மோட்டார் சைக்கிள், ஆட்டோ என்பன அணிவகுத்து பொல்லடி ,ரபான் வாத்தியங்களுடன் ஊர்வலமாக இளைஞர்களால் அழைத்து வரப்பட்டு விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்களால் மிக கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது -  மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து கண்காட்சி கிரிக்கட் போட்டியோன்றையும் நடாத்தினர். இப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கோப்பையும் வழங்கிவைக்கப்பட்டது. 

நூருல் ஹுதா உமர்-

    தொடர்புபட்ட செய்தி ......


  ( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதான சுற்று அமையவுள்ள வேலி நிர்மாணத்தினை தனது சொந்த நிதியில் ஆரம்பித்து வைத்தார் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் .

சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு சம்மேளனம் விடுத்த வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கண்காட்சி கிறிக்கட்  போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாயஹிப் சுமார் 5 இலட்சம் ரூபா  சொந்த நிதியில் மைதானத்தை சுற்றி இட இருக்கும் வேலிக்கான பொருட்களை இந்த நிகழ்வின் போது  விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதி நிதிகளிடம் கையளித்தார்.

  சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு சம்மேளனம்  கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்தததுடன் பொன்னாடை போரத்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தனர. 
READ MORE | comments

சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி கிறிக்கட் மற்றும் போட்டியும்

Friday, February 28, 2020( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி கிறிக்கட் போட்டியும் சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை  சுற்றி வேலி அமைத்தலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று ( 28 ) இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் , பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் , ஸஹிரியன் விளையாட்டுக் கழகம் ,ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் , இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் , மியன்டாட் விளையாட்டுக் கழகம் , சன் பிளவர் விளையாட்டுக் கழகம் , ஒஸ்மானியா விளையாட்டுக் கழகம் , நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் , ஏஜ் ஸ்ட்ரீல் விளையாட்டுக்கழகம் , பிளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் , பைன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் , பீமா விளையாட்டுக் கழகம் , றியல் பவர் விளையாட்டுக் கழகம் , மருதூர் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை  உள்ளடக்கியதாக  புழு நேவி ( BLUE NAVY )  என்ற ஒரு கிறிக்கட் குழுவிற்கும் கிறீன் ஆமி  ( GREEN ARMY )  என்ற ஒரு கிறிக்கட் குழுவிற்கும் இடையில் 17 ஓவர்கள் கொண்ட இந்த கண்காட்சி கடினபந்து கிறிக்கட் போட்டி இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரீ.கே.எம்.ஜலீல் தலைமையிலான புழு நேவி   ( BLUE NAVY ) கிறிக்கட் அணியினர் 17 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்.எச்.ஏ.காலித்தீன் தலைமையிலான கிறீன் ஆமி  ( GREEN ARMY )  கிறிக்கட் அணியினர் 16 2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து  130 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 4 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டனர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 18 பந்து வீச்சுகளுக்கு 33 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றி புழு நேவி  ( GREEN ARMY )  கிறிக்கட் அணி வீரர் முஹம்மட் தாஜுன் தெரிவு செய்யப்பட்டார்.பழு நேவி  ( GREEN ARMY )  கிறிக்கட் அணியின் சார்பில் முஹம்மட் பயாஸ் 34 ஓட்டங்களையும் , முஹம்மட் தாஜுன் 33 ஓட்டங்களையும் கிறீன் ஆமி ( GREEN ARMY )  கிறிக்கட் அணி சார்பில் இர்ஸாத் 36 ஓட்டங்களையும் , சஜாத் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த நிகழ்வின் போது முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதயாக கலந்து கொண்டதுடன் சுமார் 5 இலட்சம் ரூபா  சொந்த நிதியில் மைதானத்தை சுற்றி இட இருக்கும் வேலிக்கான பொருட்களையும் விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதி நிதிகளிடம் கையளித்தார்.
READ MORE | comments

மாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா? – கிளம்பும் எதிர்ப்புகள்

கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவோருக்கு சிசிச்சையளிக்கும் நிலையமாக மட்டக்களப்பு மாந்தீவினை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை அனுமதிக்க முடியாது.இதில் அரசாங்கம் ஒரு சிறந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.இது மட்டக்களப்புக்கு தேவையற்ற விடயமாகும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும்,சமூக சேவையாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(27)மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-...

உலகத்தில் குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா நோய் பரவிக்கொண்டிருக்கின்றது.இந்த வைரசு மிகவும் மோசமான வைரசாக காணப்படுகின்றது.இதுவரையும் 2000 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள்.இந்த வைரசு தொடர்பில் இதுவரையும் இலங்கையில் உயிரிழக்கவில்லை.இலங்கையில் இத்தாக்கம் குறைவாக இருந்தாலும் பல உலகநாடுகளில் அதிகரித்துள்ளது.வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்  இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியவர்கள் என எம்நாட்டில் இனம்காணப்பட்டால் அவர்களை அனுமதிப்பதற்கு இடம் தேவைப்படுவதனால் அரச வைத்திய அதிகாரி சங்கத்தால் மட்டக்களப்பு மாந்தீவு எனும் பகுதியை இனங்கண்டுள்ளார்கள்.

இதுதொடர்பான செய்தி பல ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.இம்மாந்தீவானது 1920 ஆம் ஆண்டளவில் சுமார் 500 மேற்பட்ட நோயாளிகளை சிசிச்சைக்காக அனுமதித்த இடமாகும்.தற்போது இவ்வைத்தியசாலையில் மூன்று தொழுநோயாளர்கள் அங்கு இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையை மீள் புனரமைத்து செய்து கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களுக்கு சிசிச்சை அளிப்பதற்காக அரச வைத்தியசங்கம் அனுமதி கோரியிருப்பதாகவும் அறிய முடிகின்றது.

இம்மாந்தீவானது 98 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றது.இக்காணியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பில் தொழுநோய் வைத்தியசாலை அமையப்பெற்றுள்ளது.மேலும் இத்தீவில் 40 ஏக்கர் காணியில் விவசாய நிலங்களும்,40 ஏக்கர் காணியில் காடு வனாந்தர நிலங்களாகவும் காணப்படுகின்றது.தற்போது அத்தீவை அண்டிய பகுதிகளில் சனத்தொகை அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.இம்மாந்தீவானது சுற்றுலாத்துறைக்கு ஏதுவான இடமாகவும் இருக்கின்றது.

இலங்கையில் முக்கியமான தீவுகள் இன்று சுற்றுலா வலயங்களாகவும் காணப்படுகின்றது.குறிப்பாக இம்மாந்தீவில் 100 மேற்பட்ட கட்டிடங்கள் காணப்படுகின்றது.இத்தீவிற்கு சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணமாக வெளிநாட்டுப்பறவைகளும் வந்து செல்கின்றது.இத்தீவு சுற்றுலாத்துறைக்கு கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.குறித்த கொரோனா வைரசானது எவ்வகையில் நோய்த்தொற்றுக்குள்ளாகின்றது என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.

வெளவால் பறவையினங்களினாலும் மனிதர்களுக்கு பரவக்கூடியதாக நாம்  அறிந்திருக்கின்றோம்.இதேநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் அனுமதிப்பதன் ஊடாக அங்குள்ள பறவை இனங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தொற்றக்கூடிய வாய்ப்புள்ளது.ஏன் இப்படியான தொற்றுநோய் பரவும் நோயாளிகளை இங்கு அனுமதிப்பதற்கு இங்குள்ளவர்கள் முயற்ச்சிக்கின்றார்கள் என்பது தெரியாமல் உள்ளது.

இந்த அரச வைத்தியர் அமைப்பானது கடந்த கால ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய அமைப்பாகும். அக்காரணத்தினாலோ தெரியவில்லை.அரசாங்கத்தினை பிரதிநிதிப்படுத்தும் எந்தவொரு அரசியல்வாதியும் குறிப்பாக மட்டக்களப்பினை சேர்ந்த அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.இதனை தடுத்து நிறுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் ஒன்று சேரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இவ்வளத்தினை எம்மால் விட்டுக்கொடுக்க முடியாது.இதற்கு அனைவரும் ஒன்று திரளவேண்டும்.மட்டக்களப்பு மாவட்ட நிபுணர்கள் அமைப்பு இதனை தடுத்து நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அந்தவகையில் இவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கற்பிட்டி எனும் தீவில் 14க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.இச்செயற்பாட்டை அங்கு செயற்படுத்த முடியுமா என பரிசீலித்து செயற்படுத்தலாம்.மட்டக்களப்பில் உள்ள நாம் எமது இளைஞர்கள்,மக்கள் இச்செயற்பாட்டை அனுமதிக்க முடியாது.இதில் அரசாங்கம் ஒரு சிறந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.இது மட்டக்களப்புக்கு தேவையற்ற விடயமாகும்.சனத்தொகை குறைவான மாவட்டங்கள் எத்தனையோ இருக்கின்றன.அங்கு இச்செயற்பாட்டை முறையாக நடைமுறைப்படுத்தலாம்.இது எமது மாவட்டத்திற்கு தேவையற்ற விடயமாகும்.அரச வைத்தியசங்கம் நீங்கள் அனுப்பிய திட்டவரைபுகளை உடனடியாக மீளப்பெறவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.READ MORE | comments

கல்லடிப் பால சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆளுனருடனான கலந்துரையாடல் !


(LEON)
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண கௌரவ
ஆளுனர் அனுராதா யகம்பத் அவர்களுக்கும், தேசிய தன்னார்வ தொண்டு
நிறுவனமான அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. முரளிதரன்
அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில்
நடைபெற்றது. 

அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் மட்டக்களப்பில் புதிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக கல்லடிப் பாலத்தினை சாகசப் பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான முக்கிய
விடயங்களை ஆளுனர் அவர்கள் ஆராய்ந்ததுடன் பாலத்தின் தற்போதைய
நிலைமையினையும் பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களும்
கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் தவிசாளர் திரு. ஹரி பிரதாப்
அவர்களும் கலந்து கொண்டு கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தியில்
இத்திடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக ஆளுனருக்கு தெளிவு படுத்தினார்.
இலங்கையில் புகழ்பெற்ற பாலமாகத் திகழ்ந்த கல்லடிப்பாலம் அண்மைக்கால பல தற்கொலைகளுக்கான மையமாக மாறிவரும் நிலையில் இத்திட்டம் பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதோடு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அபிவிருத்தி செய்யப்படும் என அம்கோர் நிறுவனப்பணிப்பாளரினால் ஆளுனரிடம் தெரிவிக்கப்பட்டது.

கல்லடிப் பால சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆளுனருடனான கலந்துரையாடல் !

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
READ MORE | comments

மட்டக்களப்பு வலயக் கல்வி புதிய பணிப்பாளராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார் நியமனம் உத்தியோகபூர்வமாக 02.03.2020 அன்று கடமையைப் பொறுப்பேற்பு

மட்டக்களப்பு கல்வி வலய புதிய பணிப்பாளராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோக பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிறந்த கல்வி நிருவாக சேவையாளரான சுஜாதா அவர்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர்.

இவரது உத்தியோகபூர்வமான கடமையேற்பு வருகின்ற திங்கள்(02) அன்று இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் இடமாற்றம் பெற்றுச் சென்ற திருமதி ஹரணியா சுபாகரன் அதிபர் அவர்களுக்க்கான பிரியாவிடை நிகழ்வு


மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய திருமதி ஹரணியா சுபாகரன் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்கின்றார். அவரது பிரியாவிடை நிகழ்வு இன்று(28) பாடசாலையில் நடைபெற்றது.

திருமதி சுபாகரன் அவர்கள் வின்சட் மகளிர் தேசிய பாடசாலையின் 19 ஆவது அதிபர் ஆவார், கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் பொறுப்பேற்ற அவர் 2020 பெப்ரவரி மாதம் வரையான இரண்டு வருட காலப்பகுதியில் அதிபர் சேவையினை வகித்துள்ளார்.

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான சிறப்பு பட்டதாரியான திருமதி சுபாகரன் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2017 இல் தேர்வாகி உள்வாங்கப்பட்டார். மட்/வின்சன்ட் தேசிய பாடசாலையின் பழைய மாணவியான இவர் பட்டபின் கல்வி டிப்ளோமாவினை பூர்த்தி செய்துள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டம் கற்றுக்கொண்டிருக்கின்றார்.

பிரியாவிடை நிகழ்வில் தற்போதைய அதிபர் தவத்திருமகள் உதயகுமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்வில் இடமாற்றம் பெற்று செல்லும் திருமதி சுபாகரன் அவர்களுக்கு மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள் வாழ்த்துச் சொல்லி கௌரவித்தனர். திருமதி ஹரணிகா சுபாகரன் அவர்கள் வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பெரியநீலாவணை புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயத்தில் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா செலவில், கிழக்கு ஆளுநரால் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு !!


நூருல் ஹுதா உமர்
 
கிழக்கு மாகாண சபை நிதி  ஒதுக்கீட்டில் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கல்வி வலய  மருதமுனை கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடம்  திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (28) பகல் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், 
சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுள் நஜீம் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர். 

மேலும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் சங்கத்தினர் , பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |