Home » » சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி கிறிக்கட் மற்றும் போட்டியும்

சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி கிறிக்கட் மற்றும் போட்டியும்



( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி கிறிக்கட் போட்டியும் சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை  சுற்றி வேலி அமைத்தலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று ( 28 ) இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் , பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் , ஸஹிரியன் விளையாட்டுக் கழகம் ,ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் , இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் , மியன்டாட் விளையாட்டுக் கழகம் , சன் பிளவர் விளையாட்டுக் கழகம் , ஒஸ்மானியா விளையாட்டுக் கழகம் , நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் , ஏஜ் ஸ்ட்ரீல் விளையாட்டுக்கழகம் , பிளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் , பைன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் , பீமா விளையாட்டுக் கழகம் , றியல் பவர் விளையாட்டுக் கழகம் , மருதூர் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை  உள்ளடக்கியதாக  புழு நேவி ( BLUE NAVY )  என்ற ஒரு கிறிக்கட் குழுவிற்கும் கிறீன் ஆமி  ( GREEN ARMY )  என்ற ஒரு கிறிக்கட் குழுவிற்கும் இடையில் 17 ஓவர்கள் கொண்ட இந்த கண்காட்சி கடினபந்து கிறிக்கட் போட்டி இடம்பெற்றது.




நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரீ.கே.எம்.ஜலீல் தலைமையிலான புழு நேவி   ( BLUE NAVY ) கிறிக்கட் அணியினர் 17 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்.எச்.ஏ.காலித்தீன் தலைமையிலான கிறீன் ஆமி  ( GREEN ARMY )  கிறிக்கட் அணியினர் 16 2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து  130 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 4 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டனர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 18 பந்து வீச்சுகளுக்கு 33 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றி புழு நேவி  ( GREEN ARMY )  கிறிக்கட் அணி வீரர் முஹம்மட் தாஜுன் தெரிவு செய்யப்பட்டார்.பழு நேவி  ( GREEN ARMY )  கிறிக்கட் அணியின் சார்பில் முஹம்மட் பயாஸ் 34 ஓட்டங்களையும் , முஹம்மட் தாஜுன் 33 ஓட்டங்களையும் கிறீன் ஆமி ( GREEN ARMY )  கிறிக்கட் அணி சார்பில் இர்ஸாத் 36 ஓட்டங்களையும் , சஜாத் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த நிகழ்வின் போது முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதயாக கலந்து கொண்டதுடன் சுமார் 5 இலட்சம் ரூபா  சொந்த நிதியில் மைதானத்தை சுற்றி இட இருக்கும் வேலிக்கான பொருட்களையும் விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதி நிதிகளிடம் கையளித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |