சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தின் 03ம் கட்ட அபிவிருத்திப்பணி கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், அ.இ.ம. காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், கண்காட்சி கிரிக்கட் போட்டியும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சுற்றுவேலி அமைக்கும் வேலைத்திட்டம் இந்நிகழ்வின் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமது கோரிக்கையை ஏற்று உதவ முன்வந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், அ.இ.ம. காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிபுக்கு மோட்டார் சைக்கிள், ஆட்டோ என்பன அணிவகுத்து பொல்லடி ,ரபான் வாத்தியங்களுடன் ஊர்வலமாக இளைஞர்களால் அழைத்து வரப்பட்டு விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்களால் மிக கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு கழகங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து கண்காட்சி கிரிக்கட் போட்டியோன்றையும் நடாத்தினர். இப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கோப்பையும் வழங்கிவைக்கப்பட்டது.
நூருல் ஹுதா உமர்-
தொடர்புபட்ட செய்தி ......
( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதான சுற்று அமையவுள்ள வேலி நிர்மாணத்தினை தனது சொந்த நிதியில் ஆரம்பித்து வைத்தார் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் .
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு சம்மேளனம் விடுத்த வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கண்காட்சி கிறிக்கட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாயஹிப் சுமார் 5 இலட்சம் ரூபா சொந்த நிதியில் மைதானத்தை சுற்றி இட இருக்கும் வேலிக்கான பொருட்களை இந்த நிகழ்வின் போது விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதி நிதிகளிடம் கையளித்தார்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு விளையாட்டு சம்மேளனம் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்தததுடன் பொன்னாடை போரத்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தனர.
0 Comments