கிழக்கு உட்பட பல பாகங்களில் காலநிலை மாற்றம்

Thursday, August 30, 2018

நாட்டின் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில இடங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.10 அளவில் தாராக்குண்டு, பள்ளமடு, புதூர், புதுக்குடியிருப்பு மற்றும் கொக்கிளாய் ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் .

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்று கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளின் வானிலை மாற்றம்

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka
READ MORE | comments

சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் நேற்று(29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்ற மாடுகள் ஒன்பதே இருவேறு இடங்களில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
READ MORE | comments

மேலும் சரிந்தது ரூபாவின் மதிப்பு!

அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 162.40 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

படுவான்கரையில் மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிராக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகள் சட்ட விரோதமான முறையில் கடத்தப்படுவதாகவும் அவற்றினை தடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் பட்டிப்பளையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட கால்பண்ணையாளர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

பொலிஸாரே படுவான்கரை மக்களின் வளங்களை சுரண்டுவதை தடைசெய்,பொலிஸாரே சட்ட விரோத மாடு கடத்தலை தடைசெய்,மாடுகள் களவாடப்படுவதை பொலிஸாரே தடுத்து நிறுத்து போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

யுத்ததிற்கு பின்னர் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகளை கடத்திச்செல்லும் நிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பகுதிகளில் வாகனங்களில் வருவோர் மேய்ச்சலில் உள்ள தமது மாடுகளை களவாடிச்செல்வதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றபோதிலும் பொலிஸார் போதிய நடவடிக்கைகள் எடுப்பதில்லையெனவும் இங்கு கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினார்.

மண்முனைப்பாலம் அமைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான மாடு கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான நடவடிக்கையெடுத்து தமது கால் நடைகளை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எஸ்.பண்டாரவிடம் கேட்டபோது,

இந்த ஆண்டு இதுவரையில் 75க்கும் மேற்பட்ட சட்ட விரோத மாடு கடத்தல்கள் தமது பொலிஸ் நிலையத்தினால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக சட்ட விரோதமான நடவடிக்கைகள் பிடிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் உதவிகள் மேலும் கிடைக்குமிடத்தில் சட்ட விரோத மாடு கடத்தலை தடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.










READ MORE | comments

வெல்லாவெளியில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

Add caption
மட்டக்களப்பு- வெல்லாவெளி, சின்னவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றுக்காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தம்பிராசா குணராசா (வயது 47) என்றும், மாட்டு பட்டிக்குச் சென்ற வேளையிலே காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகியதாகவும் தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
READ MORE | comments

கொழும்பு வருகிறார் மற்றொரு ஐ.நா நிபுணர்!

வெளிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சுதந்திர நிபுணர் ஜீன் பாப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 3 முதல் 11ஆம் திகதி வரை அவர் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமது இந்தப் பயணத்தின் போது மனித உரிமை விடயங்களில் இருந்து வெளிநாட்டு கடன்கள் மற்றும் ஏனைய நிதிக்கடமைகள் தொடர்பாக, ஆராயப் போவதாக ஜீன் பாப்லோ தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

செப்டம்பர் 7ல் மட்டக்களப்பில் ஹர்தாலுக்கு அழைப்பு

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் செப்டம்பர் 07ஆந் திகதி மாவட்டம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இவ்விடயம் தொடர்பாக வியாழக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் -

புல்லுமலை தண்ணீர் தொழிற்ச்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல.

 புல்லுமலை கிராமமானது குடி தண்ணீர் இல்லாத மிகவும் வரட்சியான வானத்தை நம்பி வாழும் கிராமமாகும்.

இந்த நிலையில் நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான நீர் உறிஞ்சப்படுமானால் சிறு குளங்களும் வற்றி கிராமமே சுடுகாடாகி விடும் நிலை ஏற்படும்.

மட்டக்களப்பு புல்லுமலை கிராமத்தில் காத்தான்குடி நகர சபை தலைவரால் தண்ணீர் தொழிற்சாலை அமைத்து  நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான குடி தண்ணீரை போத்தலில் அடைத்து அரபு நாட்டிற்கு விற்பனை செய்யும் திட்டமாகும்.

 இதனால் கால போக்கில் புல்லுமலையையும் அதனை அண்டியுள்ள கிராமங்களும் வரண்ட நிலமாக மாறிவிடும். குறித்த கிராமங்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் பிரதானமாக கொண்ட கிராமமாகும்.

இதனை நிறுத்துமாறு கோரி பல தடைவைகள் ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறியும்  கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை மற்றும் ஜனாதிபதி  இவ்விடயத்தை அலட்சியம் செய்த காரணத்தினால் இதை  கண்டித்து செப்டெம்பர்  7ம் திகதி  மாவட்டம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 7ம் திகதி  மட்டக்களப்பு மாவட்ட மக்கள்  வீட்டிற்குள் முடங்கியிருந்து வெளியே வராது போராட்டத்தை முன்னெடுக்க வருமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதே சமயம் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வர்த்தக வணிக வியாபாரிகள் அன்றைய தினம் ஒத்துழைப்பு வழங்குமாறும்,  பொது மக்கள் போக்குவரத்துக்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்” என்று தெரிவித்தார்.
READ MORE | comments

இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்


காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம், - International Day of The Disappeard- வருடந்தோறும் ஆகஸ்டு 30ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச்சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போகசெய்வதாலோ அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் போய்விடும். இதையே காணமல் போதல் என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள்.missing-person-in-srilanka-720x450
சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, காணாமல் போதலை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும் கட்டாயமாக காணாமல் செய்யப்படுதல் என்பது தடை செய்யபப்ட வேண்டும் என்றே ஐ.நா கூறுகிறது.
அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா கூறுகிறது. எனினும் அப்படி காணாமல் செய்வோரை இரகசிய சிறைகூடங்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ விடும் நிலை இன்னமும் தொடர்கிறது. உலகெங்கும் பல இலட்சம் பேர் காணாமல் போயுள்ளார்கள். எத்தனை பேர் என குறிப்பிட்டு நிச்சயமாக சொல்ல எந்த அமைப்பும் முயற்சி எடுக்கவில்லை.234
கைதாகி காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (FEDEDAM) எனும் அரச சார்பற்ற அமைப்பு, 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது லத்தீன் அமெரிக்காவில், சந்தேக நபர்கள் ரகசியமாக கைது செய்யப்படும் முறைமையை எதிர்த்து முதன்முதலாக கோரிக்கை வைத்தது. கொஸ்டாரிக்காவில் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச மன்னிப்பு சபை, ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பனவும், காணாமல் செய்யப்படுவோருக்கு எதிராக போராட தொடங்கின. இதையடுத்து காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் மக்களிடையேயும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டது.Kaanaamal-aakkappadoor
உலக மகா யுத்தங்களின் போதே அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக இரண்டாம் உலக போரின் போது ஹிட்லரின் கொடூர நடவடிக்கையால் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட யூதர்கள் காணாமல் போயுள்ளனர்.
ரவுல் வாலன்பெர்க் (Raoul Wallenberg) : இரண்டாம் உலக போர் காலத்தில், காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்நாளை அர்பணித்த ஒரு ஹீரோ என்றே இவரை சொல்லலாம். 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதாபிமானி என இன்றளவும் பாராட்டப்படுகிறார். காரணம் இவர் மட்டுமே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட காணாமல் போனவர்களை அவர்களது குடும்பத்தினருக்கு மீட்டுக்கொடுத்துள்ளாராம். ஆனால் இவரின் முடிவு பரிதாபகரமானது. 1945ம் ஆண்டு ஜனவரி 17ம் ட்யிகதி ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்.90
காணாமல் போனவர்கள் பலர் தமது சொந்த முயற்சியினால் குடும்பங்களுடன் ஒன்றிணைவதும் நடந்து வருகிறது. ஒரு சிலர் பத்து, இருபது வருடங்களுக்கு பிறகு தற்செயலாக தமது நெருங்கிய உறவுகளுடன் ஒன்று சேரும் நெகிழ்ச்சி தருணங்களை உருவாக்கி கொள்கிறார்கள்.ஆனால் ஆயுத முனையில் காணமல் போவோரில் பலர், காணாமல் போன குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டு விடுகிறார்கள் என்பது பலரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மையாக உள்ளது.dcp6979876464
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு முடிவுற்ற சிவில் யுத்தத்தின் பின்னரும், அதற்கு முன்னரும் வி.புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.(15)
READ MORE | comments

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்


கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பிரதி காவற்துறை மா அதிபருக்கு ஊடகவியலாளர் தகவலை வழங்கியுள்ளார்.இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பெண் கணவனால் கைவிடப்பட்டவர் எனவும், ஜந்து வயதில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை ஒன்றும் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இவர் இறுதியாக நேற்று முன்தினம் இரவு மாலை 7.15 மணிக்கு ஆடைத் தொழிற்சாலையில் தனது கடமையினை நிறைவு செய்திருக்கிறார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.(15)
READ MORE | comments

பாண்டிருப்பில் அருகிவரும் மட்பாண்ட கைத்தொழில்

Wednesday, August 29, 2018

செ.துஜியந்தன்

அக்காலத்தில் மண் சட்டியில் சோறு, கறி சமைத்து வாய்க்கு ருசியாக சாப்பிட்டு நோயற்ற வாழ்க்கையை அம் மக்கள் வாழ்ந்தார்கள். மட்பாண்ட தொழிலையே தமது சீவனோபாயமாக கொண்டு வாழ்கை நடத்துபவர்களும் எம் மத்தியிலுள்ளனர். இத் தொழிலாளர்கள் பல்வேறு கஷ;டங்களுக்கு மத்தியிலே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்புக் கிராமம் ஒரு காலத்தில் மட்பாண்ட உற்பத்திக்கு பேர்போன கிராமமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் களி மண்ணிலான பாத்திரங்கள் நாட்டின் நாலா பகுதிக்கும் எடுத்துச்செல்லப்பட்டு  விற்பனை செய்யப்படுகின்றது. 
பாண்டிருப்பு மக்கள் அன்று தொடக்கம் இன்று வரை குடிசைக்கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான ஜீவனோபாயத் தொழிலாகச் செய்துவருகின்றனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, உலை மூடி, குண்டான் சட்டி, கூஜா போனற பொருட்கள் அழகும் நேர்த்தியும் மிக்கவை. தரத்தில் மிகச் சிறந்ததாகவும் விளங்குகின்றன. 
இம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு கை கொடுக்கும் மட்பாண்ட தொழிலுக்கு எவரும் கை கொடுக்க முன்வராத நிலையில் இதனை நம்பிவாழும் பல குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். பலர் இத் தொழிலை கை விட்டுள்ளனர். 
மண் சட்டியில் சோறு, கறி சமைத்து சாப்பிடும் ருசியே தனி ருசிதான். வெகுவிரைவில் உணவுகள் பழுதடைந்து விடாது. பக்கவிளைவுகள் எதுவும் மண் பாத்திரங்களை பயன்படுத்தினால் ஏற்படுவதில்லை. இன்றை காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும், இலகுவாக வேலைகளைச் செய்து கொள்வதற்கும் என வித விதமான அலுமினியப் பாத்திரங்களில் உணவுகளை அவசர அவசரமாக சமைத்து உண்டு வருகின்றார்கள். 
அலுமினிப் பாத்திரங்களில் சமைத்து சாப்பிடும் போது அதிலுள்ள நச்சுத் தன்மைகள் உணவிலும் கலந்து கொள்கின்றது இன்று களி மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பழைய மண் வாசனையைப்பற்றி எவருக்கும் தெரியவாய்ப்பில்லைதான். 
கிராமிய குடிசைக் கைத்தொழில் விருத்திக்கு அரசு பல திட்டங்களை முன்வைத்து வருவதாக கூறுகின்ற போதிலும் குடிசைக் கைத்தொழில் விருத்தியடைந்ததாக தெரியவில்லை. காலங்காலமாக இம் மக்களைச் சூழ்ந்திருக்கும் வறுமையும், ஏழ்மையும் இன்றும் அவர்களை விட்டுபபோகவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் பாண்டிருப்பில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மட்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலிலே ஈடுபட்டனர். 
இன்று இவ்வாறான ஒரு நிலையைக் காணமுடியவில்லை. நாகரீகம் வளர்ச்சியடைய இத்தொழிலை செய்பவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதினால் பலர் இத்தொழிலை கைவிட்டுள்ளனர். இன்று குறிப்பிட்டுக் கூறக்கூடியளவிற்கு 65 குடும்பங்கள் மாத்திரமே மட்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 35 வருடங்களாக லட்சுமி என்பவரும் இத்தொழிலைச் செய்து வருகின்றார். அவர் வீட்டிற்குள் நுழையும் வாசலிலே களி மண் வெயலில் காயப்போடப்பட்டிருந்தது. செய்யப்பட்ட சட்டி பானைகளும் வெயிலில் கிடந்தது. மட்பாண்ட உற்பத்திக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவரது வளவில் பரவிக்கிடந்தன.  லட்சுமியம்மாவின் கையில் கிடைக்கும் ஒரு பிடி களிமண் சட்டியாகவும், பானையாகவும், முட்டியாகவும், மூடியாகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் உருமாறிக்கொண்டிருந்தது. 
முன்னரைப் போல் மட்பாண்ட தொழிலைச் செய்யமுடியாதளவிற்கு மனம் நொந்துபோயிருக்கின்றனர். தற்போது களிமண் ஒரு லோட் 8000 ரூபாவும், பட்டுமண் ஒரு சிறிய மெசின் லோட் 4000 ரூபாவும், ஆயிரம் உரிமட்டைக்கு 4000 ரூபாவும், வைக்கோல் 2000 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுக்ன்றது.இவற்றை இந்த விலை கொடுத்து பெற்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்கள் இந்த தொழிலைச் செய்கின்றனர். 
குறைந்த முதலீட்டில் கூடியவருமானம் ஈட்டித்தரும் சட்டி,பானைத் தொழிலுக்கு ஊக்குவிப்பை வழங்குவதற்கு இன்று வரை எமக்கு எவருமே உதவவில்லை என ஏக்கத்துடன் கூறுகின்றனர். 
'நாலு சட்டி பானவைச்சுத்தான் குடும்ப சீவியத்தக் கொண்டு போறம். வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்புச்செலவு என எல்லாவற்றையும் இதுல கிடைக்கிற வருமானத்த வைச்சுத்தான் ஒப்பேற்றுறம். வாறாக்கள் எல்லாரும் அதச் செய்வம் இதச்செய்வம் எண்டு சொல்லுறாங்க. படம் பிடிக்காங்க போறாங்க. ஒண்டும் செய்யிறாங்கல்ல'என்றார் சாந்திமணி. 
மட்பாண்ட உற்பத்திக்கு இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ளது. பாண்டிருப்பில் உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானைகளை கொள்வனவு செய்வதற்காக தென்னிலங்கையிலிருந்தும். பெருமளவிலான மக்கள் வருகின்றார்கள். 
இங்கு 200 தொடக்கம் 300 வரையான சட்டி, பானைகளை ஒன்றாக அடுக்கி ஒரு சூளையில் வைத்து சுட்டு எடுக்கின்றார்கள். இதில் 50 வரையான சட்டி பானைகள் உடைந்தும், வெடித்தும் கழிவாக போய்விடும். மொத்தமாக வியாபாரிகளுக்கு ஒரு சட்டி அதன் அளவிற்கு ஏற்ப 50 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனை செய்கின்றனர். ஏனையவை அதன் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு சூளையில் இருந்து 15 ஆயிரம் ரூபாவிற்கு  மேல் பணம் சம்பாதிக்கலாம் என லட்சுமி கூறுகின்றார். 
மட்பாண்ட தொழிலுக்கான சரியான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள அரசினாலோ, அரசசார்பற்ற நிறுவனங்களினாலோ, அரசியல்வாதிகளினாலோ இன்று வரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. வங்கிகளில் கூட மட்பாண்ட தொழிலுக்கு கடனுதவிகள் வழங்கப்படுவதில்லை. மட்பாண்ட தொழிலில் ஈடுபடுபவர்களை மாற்றாந்தாய் மனப்போக்கிலும், ஏதோ இழிவான தொழில் செய்பவர்கள் போலவும் சிலர் பார்க்கின்றனர். 
கடந்த காலங்களில் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் ஏன்? பாராபட்சம் காட்டுகின்றது? என்று இவ்வூர் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். 
இலங்கையில் முதன் முதலில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கொண்டு சட்டி, பானைச் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு  அச்சங்கம் ஊடாக மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்ட இடம் பாண்டிருப்பாகும். அருகிவரும் இவ் மட்பாண்ட குடிசைக்கைத் தொழிலை மீண்டும் கடடியெழுப்ப நல்லாச்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
READ MORE | comments

மண்முனைப்பற்றில் பொதுமக்களுக்கு மூலிகைக்கஞ்சி வழங்கல்

செ.துஜியந்தன்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  உத்தியோகஸ்தர்களின் அனுசரணையில் ஒவ்வொரு புதன்கிழமையும் அலுவலகத்திற்குவருகை  தரும் பொதுமக்களுக்கு மூலிகைக்கஞ்சி வழங்கப்பட்டுவருகின்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்களை வரவேற்று உசரித்துவருகின்றனர்.
,
ஆராக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்குடனும், அருகிவரும் பாரம்பரிய உணவுக்கலாசார முறையினை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் பிரதேச செயலகத்தினால் இவ் மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

ஒரு நாளைக்கு ஒரு வாய்ப்புற்று நோயாளி இனங்காணப்படுகின்றார்கள் -சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஒருவர் வாய்புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இனங்காணப்பட்டுவருவதாக மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம்,மண்முனைப்பற்று சுகாதார திணைக்களம்,பல் வைத்தியர் சங்கம் என்பன இணைந்து நடாத்திய வைத்திய முகாம் இன்று காலை மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைத்திய முகாமில் பல் வைத்திய நிபுணர் டாக்டர் அனுஸ்க மற்றும் எட்டு பல் மருத்துவர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பல் சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கியதாக இந்த பல் சிகிச்சை வைத்தியமுகாம் புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

இதன்போது பல் சுத்தப்படுத்தல்,பல் அடைத்தல் மற்றும் ஏனைய பல் பிரச்சினைகள் தொடர்பிலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

முக்கியமாக வாய்ப்புற்று நோயின் தாக்கம் தொடர்பில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அது தொடர்பான பரிசோதனைகளும் நடாத்தப்பட்டன.

புகையிலை பாவனை மற்றும் மதுவருந்துதல் உட்பட பல்வேறு காரணிகளினால் ஏற்படும் வாய்ப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டல்கள் நடாத்தப்பட்டதாக மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.ரமேஸ் தெரிவித்தார்.

பல் வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி தினமும் ஓருவர் வாய்ப்பு நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் வாய்ப்புற்றினால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு ஒன்பது மணித்தியாளங்கள் தேவைப்படுவதுடன் சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இந்த சத்திர சிகிச்சை முகாமில் சுமார் 250க்கும்மேற்பட்டவர்கள் பங்குகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.








READ MORE | comments

இலங்கைக்கு நேர் மேலாக சூரியன்


இலங்கைக்கு நேர் மேலாக சூரியன் 28 ஆகஸ்ட் முதல் 7 செப்டெம்பர் வரை உதிக்கும் என்றும் இதன் காரணமாக கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் முன்டம்பிட்டி, கல்விலான், வடகாடு மற்றும் திருக்குளம் ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

கிளிநொச்சியில் இளம் பெண்ணின் சடலம் மீட்ப்பு


கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.
இதே வேளை அவர் அந்த பகுதியிலுள்ள யுவதியாக இருப்பதற்கு வாய்ப்பில்லாத படியால், தூர இடத்தை சேர்ந்த ஒருவரே கொலைசெய்யப்பட்ட நிலையில் அங்கு வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.(15)
2 3 4 5
READ MORE | comments

பொத்துவிலில் வெடிமருந்து உட்கொண்டமையினால் யானை ஒன்று பரிதாபமாக பலி

Monday, August 27, 2018

செ.துஜியந்தன்

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொத்துவில் கிராம நிலதாரி பிரிவு 19 பூவரசந்தோட்டம் எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
அப்பகுதி்யில் நடமாடிய பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொத்துவில் நாவலாற்றை அன்மித்த பூவரசந் தோட்டம் வயல் காணிப்பகுதியிலேயே குறித்த யானை உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.


இதேவேளை யானையின் மரண விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொத்துவில் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மொகமட் றாபி சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார். விசாரணைகளின் போது வாய் வெடி மருந்தினை உட்கொண்டமையினால் வெடிமருந்து குறித்த யானையின் வாயினுல் வெடித்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் யானையின் உடலை பிரேதப்பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்ததார்


இதே வேளை சம்பவ இடத்தில் இரண்டு வாய் வெடி மருந்து உருண்டைகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
READ MORE | comments

கல்முனை நகரின் மத்தியில் துப்பரவு செய்யப்படாத வடிகானால் துர்நாற்றம் விசும் நிலை

செ.துஜியந்தன்

கல்முனை நகரின் மத்தியில் மக்கள் வங்கிக்கு முன்புறம் போக்குவரத்து பொலிஸார்கடமையில் ஈடுபடும் எதிரே அமைந்துள்ள கழிவு நீர் வடிந்தோடும் பெரியவடிகானில் குப்பைகள் மற்றும் மண் அடைத்து நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியிலுள்ள கடைவியாபாரிகள் போக்குவரத்துச் செய்யும் மக்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகிவருகின்றனர்.
கல்முனையில் மிக நீண்டகாலமாக அம்மன்கோவில் செல்லும் வீதி, இராமகிருஸ்ணமிசன் வித்தியாலம், வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் குறித்தவீதியில் அமைந்துள்ள வடிகான் துப்பரவு செய்யப்படாத நிலையிலுள்ளது. இவ் வடிகான் ஊடாகச் செல்லும் கழிவு நீர் கல்முனை பிரதான வீதியின் குறுக்கே ஊடறுத்துச் செல்லவேண்டும். ஆனால் இடைநடுவில் கழிவு நீர்தேங்கி நிற்கின்றது.
அத்துடன் இவ் வடிகானுள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என்பன குவிந்து கிடப்பதோடு மண் அடைத்தும் உள்ளது. இதனால் கல்முனை நகர் துர்நாற்றம் வீசும் நிலையிலும், தொற்றுநோய் ஏற்படும் வகையிலும் உள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டு:டுகின்றனர். கல்முனை மாநகர சபைக்கு கடந்தகாலங்களிலும் இவ்விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டிய போதிலும் இன்று வரை அவ் வடிகான் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போதுள்ள மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் நகரின் மத்தியில் கழிவு நீர் தேங்கிநிற்கும் வடிகானை துப்பரவு செய்து பொதுமக்களின் உடல், உள சுகாதாரத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கமுன்வரவேண்டும் என கல்முனை பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 
READ MORE | comments

எங்கள் நிலத்தை எங்களுக்குத்தாருங்கள் 278 குடும்பங்களும் மீளக்குடியேறும் வரை நிலமீட்பு போராட்டம் தொடரும் இன்று 14 ஆவதுநாளாக பொத்துவில் கனகர்கிராம மக்கள் போராட்டத்தில்

செ.துஜியந்தன்

பொத்துவில் பிரதேசத்திலுள்ள கனகர்கிராம மக்கள் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பித்த எங்கள் நிலத்தை எங்களிடம் தாருங்கள் நிலமீட்பு போராட்டம் இன்று(27)  14 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
பொத்துவில் பிரதேசத்தில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் சேனைப்பயிர் செய்துவந்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோபண்டாரநாயக்கா காலத்தில் இம் மக்களின் மேட்டுநிலப்பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஊக்குவிப்புக்களும் வழங்கப்பட்டுவந்துள்ளன. 
இந் நிலையில் 1980 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் அப்போது அமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்  கனகரெட்டணம் இம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இவ் வீட்டுத்திட்டம் 30வீடுகள் கொண்டதாக அமைக்கப்பட்டு கனகர்கிராமமாக 1981 இல் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் 1983, 1984, 1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக பல்வேறு இடங்களிலும் இம் மக்கள் வாழ்ந்துள்ளனர். 
2009 இற்குப்பின்னர் தமது கிராமத்தில் மீளக்குடியேறச் சென்றவர்களை வனவிலங்குத்துறை திணைக்களம் அங்கு செல்லவிடாமல் எல்லைக்கற்களை இட்டு அது தமக்குரிய பகுதியாக பிரகடனப்படுத்தி மக்களைத் தடுத்துவருகின்றனர். கடந்த 28 வருடமாக பொறுத்துப்பார்த்த பொத்துவில் கனகர்கிராம மக்கள் தற்போது பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து நிலமீட்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக பலரிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இங்கு இருவருடங்களுக்கு முன்பு நேரடியாக வருகைதந்த அமைச்சர் சுவாமிநாதன் அம் மக்களின் காணிகளை பார்வையிட்டு தீர்வு தருவதாகச் சொல்லிச்சென்றிருந்தார். அது போல் காணி ஆணையாளரும் கனகர்கிராம மக்களின் காணியினை பார்வையிட்டு உறுதிமொip வழங்கிச்சென்றிருந்தார். அரசியல்வாதிகளும், அதிகாரிகளம் வாக்குறுதிகளை வழங்கிச்சென்ற போதிலும் இதுவரை மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படாதுள்ளது. 
தற்போது பொத்துவில் கனகர்கிராம மக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், இடையிடையே பெய்யும் மழையிலும் வீதியில் இறங்கி பகல் இரவாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது காணி தமது கைக்கு கிடைக்கும் வரையும் தற்போதுள்ள 278 குடும்பங்களையும் மீளக்குடியேற்றும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 
READ MORE | comments

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள்.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும்  மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவமானது கடந்த 06.08.2018(திங்கட்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இறுதி நாளான இன்று 26.08.2018(ஞாயிற்றுக்கிழமை)   தீர்த்தோற்சவ நிகழ்வுகள் காலை 9.30 மணியளவில் மண்டூர் மூங்கிலாற்று சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Add caption




READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |