Advertisement

Responsive Advertisement

கிழக்கு உட்பட பல பாகங்களில் காலநிலை மாற்றம்

நாட்டின் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில இடங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.10 அளவில் தாராக்குண்டு, பள்ளமடு, புதூர், புதுக்குடியிருப்பு மற்றும் கொக்கிளாய் ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் .

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்று கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளின் வானிலை மாற்றம்

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka

Post a Comment

0 Comments