போரதீவுப்பற்றில் காடுகளுக்கு தீவைத்த பாதகர்கள் -பெருமளவான பறவைள் அழிப்பு

Tuesday, July 31, 2018

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியபோரதீவு-பழுகாமம் ஆற்றுப்பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று இரவு குறித்த ஆற்றங்கரையினை சூழவுள்ள நாணற்புற்கள் மற்றும் காடுகளில் இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்திருக்கலாம் எனவும் பல பறவைகள் இடங்களை பறிகொடுத்த நிலையில் அல்லாடிவருதையும் காணமுடிகின்றது.

வயல்வெளிகள் மத்தியில் குறித்த ஆறும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாகவும் இயற்கையின் உறைவிடமாகவும் உள்ள நிலையில் அவற்றினை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.யு.ஐ.குணவர்த்தன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி பிரதேச செயலக உதவியுடன்  குறித்த தீயினை கட்டுப்படும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர் விக்னேஸ்வரன் மற்றும் பிரதேசசபை ஊழியர்களும் பங்குகேற்புடன் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றாடலையும் காடுகளையும் பாதுகாக்கப்போவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றபோதிலும் இவ்வாறான இடங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.READ MORE | comments

பெரியநீலாவணையில் மருத்துவபீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்காவது மாணவி சனோம்யா

செ.துஜியந்தன்

அம்பாறை மாட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமமான பெரியநீலா வணைக்கிராமத்தில் நான்காவது வைத்தியராக மருத்துவ பீடத்திற்க்கு நேரடியாக மாணவி வி.சனோம்யா தெரிவு செய்யப்படடுள்ளார். 
இவர் தனது ஆரம்பக்கல்வியினை பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் நான்கு வரை கல்வி கற்றிருந்தார். அதன்பின் கல்முனை கார்மேல்பற்றிமா தேசியபாடசாலையில் கல்வி கற்றவர். 2017 க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று 2ஏ, 1சீ பெறுபேறுபெற்று 42 ஆவது நிலையில் சித்தி பெற்றிருந்தார். 
வெளியாகியுள்ள பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் விக்னேஸ்வரன் சனோம்யா கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் தந்தை கே.விக்கினேஸ்வரன் கல்முனை மாநகரசபையில் சுகாதாரமேற்பார்வையாளராக கடமைபுரிகின்றார். அத்துடன் விவசாயத்திம் வீட்டுத்தோட்டம் ஆகியவற்றிலும் ஈடுபட்டுவருகின்றார்.
சாதாரண குடும்பத்தைச்சேர்ந்த இம் மாணவி பெரியநீலாவணைக்கிராமத்தின் சார்பாக நேரடியாக மருத்தவ பீடத்திற்க்குச் செல்லும் நான்காவது மாணவியாக இருப்பதினால் கிராம மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

பொத்துவில் பசறிச்சேனை கிராமத்தில் யானை உட்புகுந்து அட்டகாசம்

செ.துஜியந்தன்பொத்துவில் பசறிச்சேனை(பெரிய உல்லை) பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3மணியளவில் யானைகள் கூட்டமாக  கிராமத்திற்குள்  உட்புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
அதிகாலை வேளையிலே பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் பிளிறல் சத்தத்துடன் உள் நுழைந்துள்ளது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

உள் நுழைந்த யானைகள் அங்கு மக்களால் பயிரிடப்பட்டிருந்த பயிர்ச்செய்கைகளையும், பயனுள்ள தென்னை மரங்களையும் துவம்சம் செய்துள்ளன. கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்கள். பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்டுவதற்க்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
READ MORE | comments

பாடசாலை விடுமுறை தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்


தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டம்பர் 3ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை ஆகஸ்ட் 20ஆம் திகதி 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)
READ MORE | comments

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வட்டியில்லா கடன்


முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லா விசேட கடன் திட்டமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் வைபை மற்றும் வீதி வரைபட தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த கடன் திட்டத்தை வழங்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் மூல வண்டியை மின்னியல் முறைமைக்கு மாற்றியமைப்பதற்காகவும் கடனை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)
READ MORE | comments

பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து வானுக்கு தீவைத்த வாள்வெட்டுக் குழுவினர்!

கொக்குவிலில் நேற்று பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றனர். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலே பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற வானின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீவைத்துள்ளது. அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் அந்தக் கும்பல் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்துக்குள் 8 பேர் கொண்ட ஒரே கும்பலால் கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை உள்ளிட்ட 5 இடங்களில் வவன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
   
READ MORE | comments

பகிடிவதைக்கு எதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை


பகிடிவதைக்கு எதிரான சட்டதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பகிடிவதைகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு நீதவான் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடமில்லை. குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும். பகிடிவதைக்கு எதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் பிள்ளைகள் என்ன செய்கின்றனர்? பல்கலைக்கழகம் முடிவடைந்து வீடு திரும்புவதற்கு ஏன் தாமதம் அடைகிறது என்ற விடயங்களில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘ஆபிரிக்காவின் பழங்குடி இன மக்களிடையே கூட இடம்பெறாத சம்பவங்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதைகளின் போது இடம்பெறுகின்றன. பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பகிடிவதைகளுக்கு அஞ்சி பல்;கலைக்கழக கல்வியை நடுவிலேயே விட்டுவிடுகின்றனர். பல தற்கொலைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சப்ரகமுவவிலிருந்து போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களிடம் தகவல்களைப் பெற முடிந்தது. அதற்கமைய ஆறு பஸ்களில் மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஏழு தடைவகள் மாணவர்கள் அவ்வாறு வந்து சென்றுள்ளனர். அதற்காக 2.1 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத அப்பாவி மாணவர்கள் வீணாக தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொள்கின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தைப் பேண முடியாவிட்டால் அங்கு நிர்வாகம் செய்வது மிகவும் கஷ்டமான விடயமாகும். இவ்வாறான குழப்ப நிலையை ஏற்படுத்துவதன் பின்னணியில் அரசியல் சக்திகள் இருக்கின்றன. குறிப்பாக வங்குரோத்து நிலையை அடைந்துள்ள குழுவொன்று செயற்படுகிறது. அது மாத்திரமன்றி அப்பாவி மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் பணத்தை செலவுசெய்ய வைக்கும் நோக்கில் செயற்படும் குழுவொன்றும் உள்ளது.

புதிய மாணவர் அணியொன்று பல்கலைக்கழகத்துக்கு நுழைய முன்னர் அதில் நுழையவிருக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை பல்கலைக்கழம் தொடங்க முன்னரே வகுப்புக்களுக்கு இணைத்துக் கொள்கின்றனர். இவர்களைக் கொண்டு பல்கலைக்கழக செயற்பாடுகளை முடக்கும் திட்டங்கள் மேற்கெபள்ளப்படுகின்றன ‘சேப் ஹவுஸ்’ களில் மிகவும் மோசமான வகையில் பகிடிவதைகளை இடம்பெறுகின்றன என்றும் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். -(3)
READ MORE | comments

கொழும்பில் விரைவில் ”லைட்” ரயில் சேவை

Monday, July 30, 2018


கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன தெரிவித்தார்.

இந்த வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அது கடுவல வரையில் விரிவுபடுத்தப்படும். இதற்கமைவாக இலகு ரயில் பாதைகள் ஐந்து 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்பட உள்ளன.

இதில் ‘சிவப்பு’பாதையாக அடையாளப்படுத்தப்பட்ட திட்ட நடவடிக்கைப் பணிகள் றாகம, கடவத்தை, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி வரையில் இடம்பெறும்.பசுமை வீதியாக அடையாளப்படுத்தப்படும் இரண்டாவது கட்டப் பணி களனி தெமட்டக்கொட, பிலியந்தலை ஊடாக மொரட்டுவை வரையில் இலகு ரயில் சேவைக்காக அமைக்கப்படவுள்ளது.

மூன்றாம் கட்டம் ‘ரோஸ்’ நிற இலகு ரயில் பாதையாக அமைக்கப்பட உள்ளது. வத்தளை டயர் கூட்டுத்தாபன சந்தியில் இருந்து அங்கொட, பத்தரமுல்லை ஊடாக கொட்டாவை வரை அமைக்கப்படும். இந்த வீதிக்கான தள ஆய்வறிக்கைப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

இந்த மூன்று இலகு ரயில் பாதைகளும் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ரயில் பாதைகள் இலகு மின்சார ரயில் சேவைக்காகப் பயன்படுத்தப்படும். இது மூன்று ரயில்பாதைகளுக்கு வரையறுக்கப்படும் என்றும் பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன மேலும் தெரிவித்தார். -(3)
READ MORE | comments

வாழைச்சேனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் கைது!

மட்டக்களப்பில், கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில் பெண்கள் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு குழுவினரால், பிறைந்துரைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 360 கிராம் கஞ்சாவும் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் முப்பதும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் மிக நீண்ட நாட்களாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் இவர்களிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சாவை ஐநூறு ரூபாவுக்கு விற்பனை செய்யும் கஞ்சா பொதிகள் 110 பக்கட்டுக்களும் பொதி செய்வற்கு பயன்படுத்தும் பொலிதீன், மெழுகுதிரி, கஞ்சாவை எடை வைக்கும் தராசு போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சகோதரிகள் என்பதுடன் இவர்கள் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

15 வருடங்களில் பின் பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் : பார்வையிட 3 இடங்களில் முகாம்கள்


15 வருடங்களுக்கு பின்னர் நாளை (31) பூமிக்கு மிக அருகில் வரவுள்ள செவ்வாய்க் கிரகத்தை பார்வையிடுவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 3 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் நாளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை முகாமொன்று அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை இவற்று மேலதிகமாக பொலனறுவை , திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

நாளைய தினம் பூமிக்கு 57.6 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தில் செவ்வாய்க்கிரகம் பயணிக்கவுள்ளது.

இதேவேளை 2020இலும் அதனை தொடர்ந்து 2035ஆம் ஆண்டிலும் இதேபோன்று செவ்வாய்கிரகம் பூமிக்கு அருகில் வரவுள்ளது. -(3)
READ MORE | comments

இன்று நள்ளிரவுக்கு பின் ரயில்கள் ஓடாது?


இன்று (30) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

ரயில் சாரதிகள் , ரயில் கட்டுப்பாட்டாளர்கள் , ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரே இவ்வாறாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதனால் நாளைய தினம் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் 2 நாட்களுக்கு தொடரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)
READ MORE | comments

நாளை நள்ளிரவுக்கு பின் கருத்தரங்குகள் , வகுப்புகளுக்கு தடை


நாளை (31) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , வகுப்புகள் , கலந்துரையாடல்கள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் என்பன தடை செய்யப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோன்று 1ஆம் திகதி நள்ளிரவு முதல் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , வகுப்புகள் , கலந்துரையாடல்கள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் என்பன தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டத்திற்கமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)
READ MORE | comments

2020 ஜனாதிபதி வேட்பாளர் நானா? சங்கக்கார பதிலளித்தார்


தான் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பதிலளித்துள்ளார்.

தான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லையெனவும் தனக்கு அவ்வாறான நோக்கங்கள் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தலில் சங்கக்கார வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)
READ MORE | comments

நேற்று இரவு மட்/காத்தான்குடியில் நடந்த வீதி விபத்தின் cctv கானொளி

நேற்று இரவு 29/07/2018 11:15 pm காத்தான்குடியில் நடந்த வீதி விபத்தின் cctv கானொளி
 காத்தான்குடி பிரதான வீதி (இரும்பு தைக்க பள்ளி) முன்பாக இடம்பெற்ற விபத்தின் வீடியோ காட்சிகள்.
 இதில் இருவர் விபத்தில் சிக்கி ஒருவர் காயங்களுடனும் மற்ற ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஆரையம்பதி அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்தில் சிக்கியவர்கள் இருவரும் தமிழ் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

விரைவில். நலம்பெற இறைவன் அருள் புரியட்டும்
READ MORE | comments

சிங்கப்பூரில் பதக்கம் வென்றார் பாண்டிருப்பு மாணவன் சஞ்ஜய்

செ.துஜியந்தன் 

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினாப்போட்டியில் கலந்து கொண்ட பாண்டிருப்பைச்சேர்ந்த விஸ்வலிங்கம் சஞ்ஜய் அங்கு நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பெற்று  வெங்கலப்பதக்கத்தினை சூவிகரித்துக் கொண்டார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்விபயிலும் மாணவன் சஞ்ஜய் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட சர்வதேச கணித வினாப்போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று சிங்கப்பூரில் நடைபெறும் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் கடந்த 26 ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற மாணவன் விஸ்வலிங்கம் சஞ்ஜய் நேற்று(29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணித வினாப்போட்டியில் 16 நாடுகளில் இருந்து வருகை தந்த மாணவர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடம் பெற்று வெங்கலப்பதக்கத்தினை சூவிகரித்துக் கொண்டார். மாணவன் சஞ்ஜயின் தந்தை விஸ்வலிங்கம் கணித ஆசிரியர் என்ப
READ MORE | comments

ரோட்டரி கழகத்தின் 2018 -2019 ஆண்டுக்கான தலைவர் பதவி பிரமாண நிகழ்வு

Sunday, July 29, 2018

மட்டக்களப்பு   ரோட்டரி கழக  ஆண்டு நிறைவு நிகழ்வும்  2018 -2019 ஆண்டுக்கான புதிய ரொட்ரி கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தின்  மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் 59 வது    ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்திற்கான  2018 -2019  ஆண்டுக்கான புதிய தலைவருக்கான பதவி பிரமாண நிகழ்வும்  ரோட்டரி கழக  தலைவர்   எஸ் .சங்கரலிங்கம்  தலைமையில் (  28 ) மாலை பயினியர் வீதியில் உள்ள ரோட்டரி கழக மண்டபத்தில்  நடைபெற்றது . 

ஆரம்ப நிகழ்வாக  ரோட்டரி கழக உறுப்பினர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர் .இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களின்  புதிய அங்கத்தவர்கள்  அறிமுக  நிகழ்வுகளும் தொடர்ந்து ரோட்டரி  கழக  அங்கத்தவ நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .இதனை தொடர்ந்து 2018 -2019 ஆண்டுக்கான புதிய  ரோட்டரி  கழக தலைவராக வி பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் கே இ .கருணாகரன் மற்றும் ரோட்டரி கழக தலைவர்கள் புதிய   உறுப்பினர்கள்  பெண் ரோட்டரி கழக  உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,


READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |