உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும்; இறுதிக்கட்ட நடவடிக்கைகள் நடைபெறுகின்றன - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Thursday, May 16, 2024



16-05-2024

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அதேவேளை நேற்றைய தினம் நிறைவடைந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

READ MORE | comments

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு

 


16-05-2024

நேற்றைய தினம் நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

 அதன்படி, உயர்தர வகுப்புகளை ஜூன் 04, 2024 முதல் தொடங்குவதற்கு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.P

 பரீட்சைக்கான தாள் குறியிடல் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றும், O/L பரீட்சைகளை முடித்த மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகள் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, ஏறக்குறைய 452,000 மாணவர்கள் O/L பரீட்சைக்குத் தோற்றனர், அவர்களில் 388,000 பேர் முதல் அல்லது இரண்டாம் முறை வருகை தந்தவர்கள்.P

 இந்த மாணவர்கள் ஜூன் முதல் வாரத்திற்குள் உயர்தர வகுப்புகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்.இதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


READ MORE | comments

முதலாம் இடத்தை பெற்று ,கிண்ணத்தை சுவீகரித்தது குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் 🔥🔥

Monday, May 13, 2024


மட்டக்களப்பு வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சமரில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.








நடப்பு சம்பியனாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கரப்ந்தாட்டத்திற்கென வரலாறு படைத்த குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் இந்த ஆண்டுக்கான இரண்டாவது வெற்றிக்கிண்ணத்தையும் சுவீகரித்தது.

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் சித்திரைப் புதுவருட கலாசார விளையாட்டு விழா - 2024

Tuesday, May 7, 2024

 மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் சித்திரைப் புதுவருட கலாசார விளையாட்டு விழா 2024

































READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |