சீன-இந்திய பதட்டம் முடிவுக்கு வராத தோற்றப்பாடு இரு தரப்புக்களின் இராணுவ குவிப்புக்கு வழிவகுத்துள்ளது. எல்லையோரத்தில் இரு நாட்டு இராணுவமும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் போர் நிகழ்வதற்கான அனைத்துபணிகளும் நிறைவு நிலைக்கு வந்துள்ளது. ஆனாலும் அரச தலைவர்கள் மத்தியில் போரைத் திட்டமிட்டபடி ஆரம்பிப்பதற்கு தடையான இராஜதந்திர நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் இரு தரப்புக்கும் இடையில் அமெரிக்காவின் அரசாங்கமும், அதன் இராணுவத் தலைமையகமான பென்டகனும் போரை தவிர்க்க இரு நாடுகளும் முன்வரவேண்டுமென கோரிக்கை விட்டுள்ளன. இரு நாடுகளும் இராஜதந்திர ரீதியான பேச்சுவாரத்தையில் ஈடுபடவேண்டுமெனவும் இந்திய –சீனா தரப்பினை கோரியுள்ளன இக்கட்டுரையும் ஏன்? பென்டகன் இந்திய-சீன தரப்புக்கள் போருக்கு போவதை தவிர்க்க வேண்டுமென கோரியது என்பதை தேடுவதாகவே அமைந்துள்ளது.
அவ்வாறு கருதுவதற்கு 1962 ஆம் ஆண்டு யுத்தமே காரணமாகும்.இந்தியாவும் -சீனாவும் 1962 இல் யுத்தம் செய்தமை தொடர்பில் அமெரிக்கத் தரப்பின் பங்கு என்ன என்பது அப்போதைய கேள்வியாகும். இந்தியத்தரப்பு குறிப்படுவதுபோல் சீனா இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது என்றும் சீனாவே யுத்தத்தை ஆரம்பித்ததாகவும் இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது என்றும் கருதப்படும் நிலையில் பாரிய குழப்பமே உள்ளது.அமெரிக்காவே இந்திய–சீன தரப்பை மோதவிட்டதாகவும்,இந்தியத்தரப்பை யுத்தத்துக்கு நகரத் திட்டமிட்டு தூண்டிய நாடு அமெரிக்கா என்றும் குற்றம் சாட்டுகினறது. இதனால் சோஸலிஸ முகாம் உடைந்ததுடன் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு அதுவுமொரு காரணமென குறிப்பிடப்படுகிறது. அதனால் இந்தியா சோவியத் பக்கமும் சீனா சோவியத் யூனியனிடமிருந்து விலகியது மட்டுமல்லாது 1970 களின் பிற்பகுதியில் அமெரிக்கா பக்கம் இணைந்து கொள்ள வழிவகுத்தது. இதனால் அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு அதிக வாய்ப்பான சூழலைத் தந்தது சோவிய அணியின் வீழ்ச்சியை முதன்மைபடுத்திய அம்சமாக சீன அமெரிக்க உறவு காணப்பட்டது.
இவ்வகைச் சூழல் ஒன்றினை மீளவும் இரு அரசுகளும் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளன என்றே தோன்றுகிறது. இரு இராணுவமும் தயார்நிலையில் இருப்பதென்பது போரை எந்த பிறசக்தியாலும் தீர்மானிக்க கூடியதாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அப்படியான சூழல் காணப்படும்போது ஏன்? அமெரிக்கா போரை தடுப்பதற்கான கோரிக்கையை விடுவித்துள்ளது அதனை சற்று விரிவாக பார்ப்போம்.
அரசியலில் எப்போதும் ஓரம்சம் வேண்டாமென கோருவதென்பது மறைமுகமாக வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே அமைவதுண்டு. ஆனால் பென்டகன் கருதுவது என்பது சற்று வேறுபட்ட தளத்தில் கருதவேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. காரணம் பென்டகன் இராணுவ ரீதியான மையம் அதற்கு இருதரப்பு இராணுவ வலிமையும் மிகத் தெளிவாக தெரிந்திருக்ககூடியது. அதிலுல் இந்தியாவின் இராணுவ வலிமை மிகத்தெளிவாக தெரிந்த நாடு உலகிலேயே அமெரிக்கா ஒன்றாகவே இருக்கும். சீனாவின் வலிமை உலகத்திற்கே தெரிவதென்பது கடினமானது. ஆனால் சீனா பலமான இராணுவத்தைக் கட்டிவளர்க்கும் நாடு என்பதை அதன் பாதுகாப்பு செலவீனத்தினை வைத்துக்கொண்டு கணிப்பிடமுடியும்.
எனவே பென்டகனுக்கு போர் ஒன்று மூண்டால் எப்படியான விளைவு இருதரப்புக்கும் உலகத்திற்கும் ஏற்படுமென்பதில் புரிதல் இருக்கும். இத்தகைய யுத்தம் ஒன்றை எதர்பார்ப்பதிலும் அமெரிக்க அதிகவிருப்பம் கொண்ட நாடாகவே சர்வதேச ஆய்வாளர்களது எதிர்வுகூறல் அமைந்திருந்தது. அதிலும் அமெரிக்காவுக்கு சீன- இந்திய முரண்பாடும் பகைமையும் அதனால் ஏற்படும் யுத்தமும் விருப்பமாகவும் அவசியமானதாகவும் அமைந்திருக்கும். காரணம் இரு சக்திகளும் ஆசியகண்டத்தை சார்ந்தவை இன்றைய பொருளாதார போட்டியும் வளர்ச்சியும் இருதரப்பும் வேகமாகக் பயணிக்கின்றன என்பதை உணர்த்துகின்றது. இவற்றின் மக்கள் தொகையால் ஏற்பட்ட சந்தையே உலகவர்த்தகத்தின் மிகப்பிரதான பங்கெடுப்பாக உள்ளது. குறிப்பாக கூறுவதனால் இருநாடுகளதும் சந்தையினாலும் பொருளாதாரக் கொள்கைளாலுமே அமெரிக்கா உட்பட்ட மேற்குலகப் பொருளாதார நெருக்கடியும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படுகிறது.
சீனாவும் -இந்தியாவும் தங்கள் சந்தைகளை திறந்த சந்தையாக கொண்டிருப்பது மேற்குலகப் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு வாய்ப்பாக விளங்குகிறது. அதிலும் இந்தியச் சந்தையானது எந்தத் தடையுமில்லாத திறந்தசந்தையாகும் சீனா தனது சந்தையை இரண்டு தளத்தில் மிகத் தெளிவாக வகைப்படுத்தி வைக்குள்ளது. ஒன்று தனது நாட்டின் எல்லைக்குள் மிக கட்டுப்பாட்டுடன் கூடிய சந்தைக்கட்டமைப்பையும்,வெளிநாடுகளில் அந்நந்த நாடுகளின் இயல்புக்கு அமைவாக சந்தையின் கட்டமைப்பில் வடிவமைத்துள்ளது. உள்நாட்டச் சந்தையை மிக தெளிவாக கட்டுப்படுத்தியுள்ள அதே சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் திறந்த சந்தையை ஊக்குவிக்கின்றது. அதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கையை வரைந்து செயல்படுகின்றது.
இதனால் பொருளாதார ரீதியல் அமெரிக்க உட்பட மேற்குலகம் சீனா-இந்தியா நாடுகளில் அதிகம் தங்கியுள்ளது. இதனை இழப்பதற்கு அந்த நாடுகள் தயாராக இல்லை. மேலும் சீனாவின் கடன்களிலும் பொருளாதார ஒத்துழைப்புக்களிலும் அமெரிக்கா அதிகமாக நெருக்கத்தினைக் கொண்டுள்ளது. அதனால் சீனாவைள பொருளாதார ரீதியில் பகைக்கவேண்டுமாயின் சீனாவுக்கு நிகரான ஒரு நாடு அமெரிக்காவுக்கு தேவையாகும். அவ்வகை நாடாக அமெரிக்கா இந்தியாவையே அடையாளம் கண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி வேகமும் போட்டிக்கான உந்துதலும் சீனா போன்றில்லை என்பதுடன் தற்போது தான் இந்தியா பொருளாதாரத்தின் அதிகமான வளர்ச்சிப்போக்கை காட்டிவருகிறது முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தைவிட ட்ரம்ப்-மோடி நெருக்கமும் அரசியல் பொருளாதார இராணுவ ஒத்துழைப்பும் அதிகமாகியுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கை கொண்டுள்ள இந்தியா அதிகமான ஒத்துழைப்புகளுக்கு தயாராகின்றது.
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் அமெரிக்க மட்டுமன்றி அமெரிக்க நாட்டு சக்திகளுடான உறவு அதிலும் இஸ்ரேலுடனான நெருக்கம் இந்தியா –சீனா யுத்தத்தை சாத்தியப்படும் என்ற கணிப்பீடு எதிர்காலத்திற்கானது. அதனை தவிர்ப்பதென்பது கடினமானதாகவே அமையும.; அவ்வகை மோதல் நிகழாதுவிட்டால் அமெரிக்க உட்பட்ட மேற்கின் இருப்பு கேள்விக்குரியதாக அமைவதனைவிட சீனா -இந்தியத் தரப்பிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். மேற்கின் பிரதான உத்தி வலுவான போட்டித்தன்மையுடைய சக்திகளை மோதவிடுவதன் மூலம் அல்லது போரை அத்தகைய சக்திகளை நோக்கி நகர்த்துவதன் மூலம் அவ்வகை சக்திகளின் இயல்பான வளர்ச்சியை முடக்குவதாகும்.
இந்தியாவுடனான நட்பு என்பதற்காக அமெரிக்கா இந்தியாவை வளர்க்கிறது அல்லது இதன் வளர்ச்சிக்காக உதவப்போகிறது என்பதல்ல. மாறாக அத்தகைய வளர்ச்சியை மட்டுப்படுத்துவும் தனது எல்லைக்குள் அடங்கவுமே நட்புறவை வளர்க்கின்றது. அவ்வாறே கடந்த அரை நூற்றாண்டுக்;கு மேலாக மேற்குலம் ஏனைய கண்ட நாடுகளை கையாண்டள்ளது. இதில் அமெரிக்காவின் தயவில் எழுச்சி பெற்ற சீனாவும் தற்போது அமெரிக்க தயவில் வளர்க்கப்படும் இந்தியாவும் மோதினால் அமெரிக்காவுக்கு பலமான எதிரி காணாமல் போய்விடும் அல்லது மேற்குக்கு சவாலிடும் தேசம் காணாமல் போய்விடும். இத்தகைய தளத்தில் சீன- இந்திய யுத்தம் ஒன்று அவசியமானது எதிர்காலத்தில் அதனை தவிர்க்க முடியாது.
ஆனால் தற்போது இரு தரப்பினை இராணு ரீதியில் அளவிட்டால் சீனா வெற்றி பெறும் நிலையிலுள்ளது. எல்லைப் பாதுகாப்பில் இந்தியா கற்பனையில் செயல்படுவதாக சீனா தரப்பு குற்றம் சாட்டுகிறது. அதனால் இந்திய தரப்பை அதிகம் தயார்படுத்தவேண்டிய கடப்பாடு அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது.அது மட்டுமன்றி சீனாவும் அமெரிக்காவின் தென்சீனக்கடல் விவகாரம், வடகொரியா விவகாரத்திற்கு பதிலாக இந்திய எல்லை விடயத்தை நோக்குகிறது. நிச்சயமாக இந்தியத்தரப்புடன் யுத்தத்துக்கு போன அனுபவத்துடன் இந்தியாவை எப்படி கையாளலாமென சீனாவுக்கு நன்கு தெரியும். பாகிஸ்தான் விடயத்தல் இந்தியாவின் நகர்வை எப்படி மட்டுப்படுத்துதல் நேபாளம், பூட்டானுடன் இந்தியாவின் செல்வாக்கை எப்படி முடிவுக்கு கொண்டுவருவதென சீனா கருகிறது. இதனால் சீனா இந்தியாவை இலக்குவைப்பதைவிட இந்தியாவின் நட்புக்கரமான அமெரிக்காவை இலக்குவைத்தே நர்க்கிறது. ஏறக்கறைய சீனாவின் தந்திரம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இது நிச்சயம் அமெரிக்காவின் பின்புலங்களை இந்திய அரசியலில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்திய ஆளும் தரப்பிலுள்ள கேரளா மேட்டுக்குடிகளும் சீனாவுடன் சுமூகமான உறவை வைத்துக்கொள்ளவும் எல்லை நாடுகளுடன் நட்புறவாக செயல்படவேண்டுமெனவும் உணருகின்றன. எல்லைநாடு பெரிய பொருளாதார தேசம் அதனுடன் பகைப்பது நியாயமற்றது தவறானது என்ற வாதம் அவர்களிடம் உண்டு.
மாறு தரப்பு மேட்டுக்குடியானது அதாவது பிராமணர் தரப்பு சீனாவுடன் முரண்பட்டுக்கொண்டு அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பெறவேண்டும் எனக் கருதுகின்றன.அதாவது சீனாவை எதிரியாகக் கருதுவது தவிர்க்கமுடியாதெனக் குறிப்பிடும் பிராமணர் தரப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமானது எனக்கூறுகிறது இத்தகைய இழுபறியை சீனா பயன்னடுத்துவதன் மூலம் அமெரிக்காவை நிராகரிக்க முனைகிறதா என்பதும் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையை கைப்பற்றி வைத்துள்ள சீனா போரை எதிர்கொள்வதன் மூலம் இந்தியமத்திய அரசை சமூகங்களுடன் மோதவிடலாமென கணக்குப்போடுகிறது.
சீனா அதனது வரைபடத்தில் என்றுமே இந்திய எல்லையோர மாநிலங்களை அதனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர எத்தனிக்கிறது அதன் நீண்டகால இலக்காகவும் கொண்டு இயங்குகிறது. எனவே இராணுவ ரீதியில் இந்தியா ஒரு போருக்கு போவதனாது இந்தியத்தரப்பு விரும்புகிறதோ இல்லையோ ஆனால் அமெரிக்கா விரும்பவில்லை. இதனை இந்திய ஆளும் தரப்புத்தான் தீர்மானிக்கவேண்டும் என்றில்லை. பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் அமெரிக்கா உட்பட மேற்குலக்கு ஆபத்தானது. சீனாவைப் பொறுத்தவரை காத்திருப்பது தயார்செய்வது எல்லையை தொடர்ச்சியாக கண்காணிப்பது என அது சரியான நகர்வை அல்லது இந்தியாவுக்கு சவாலான நிலையை எடுத்துவருகிறது. இதில் இந்தியத்தரப்பு மேலும் தனது நிலையை சிக்கலாக்கி வருகிறது. பிற அரசுகளில் தங்கியிருந்து போர்புரிவதென்பது அதன் இருப்புக்கு அபாயமானது.
இந்திய – சீனப் போரை எல்லோரும் தவிர்க்க விரும்புகின்றமை இராஜதந்திர உரையாடலில் தெளிவாக தெரிகிறது. அதனால் சீனா முன்நோக்கி நகர்கிறது. இந்தியா சிக்கலுக்குல் நகர்கிறது. அமெரிக்கா தந்திரமான எதிர்காலத்தில் மோத விடுவதற்கான உத்தியுடன் செயல்படுகிறது.