எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் ஆயுட்காலம் முடிவடைவுள்ள சப்ரகமுவ , வட மத்தி மற்றும் கிழக்கு மாகாண சபைகளை ஆளுனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி செப்டம்பரில் அவற்றின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அவற்றை ஆளுனர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு 9 மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் முடிந்த பின்னர் அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர்களின் போது இது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றவுள்ளதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றது
0 Comments