Advertisement

Responsive Advertisement

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் முன்னாள் நீதிபதி இலங்கைக்குப் பயணம்!

சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாக கடமையாற்றிய மொடோ னு கூச் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் கூச் இலங்கைக்கு வரவுள்ளார்.
   
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உள்ள விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதே ஜப்பானியரான கூச்சின் இலங்கைப் பயணத்துக்கான பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் இந்த பயணம் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சர்வதேச நீதிபதி, பரணகம ஆணைக்குழுவின் ஆலோசனை குழுவிலும் அங்கம் வகித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை கூச் சந்திக்கவுள்ளார். இவர், இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். கூச்சின் இலங்கை விஜயத்தை, ஜப்பானிய தூதரகம் உறுதி செய்துள்ளது.

Post a Comment

0 Comments