மழையுடன் கூடிய கால நிலை தொடரும் பட்சத்தில் 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினப்புரி மாவட்டத்தில் இரத்தினப்புரி , எலபாத்த , பெல்மடுல்ல , குருவிற்ற , எகலியகொட , கிரியெல்ல , கஹவத்த , இம்புலுவே , கலவான , கொலன்ன மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய , தெரணியாகல , எட்டியாந்தோட்டை , தெஹியோவிற்ற ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள , அகலவத்த , வலலவிற்ற மற்றும் பதுரெலிய பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளிலும் மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல , பஸ்கொட , பிட்டபத்தெர மற்றும் முலட்டியான பிரதேச செயலக பிரிவுகளிலும் காலி மாவட்டத்தில் பத்தேகம , யக்கமுல்ல , நெலுவ , தவலம , நியகம மற்றும் நாகொட பிரதேசங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல மற்றும் கட்டுவான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் கங்கா இகல கோரல பிரதேச செயலக பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாவட்டங்களில் குறித்த பிரதேசங்களில் மழையுடன் கூடிய கால நிலை தொடர்ந்தால் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் இருப்போர் அவதானமாக இருக்க வேண்டும் என்பதுடன் அங்கிருந்து வெளியேறவும் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கேகாலை , இரத்தினப்புரி , களுத்துறையில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் : மக்களுக்கான எச்சரிக்கை
கேகாலை , இரத்தினப்புரி , களுத்துறையில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் : மக்களுக்கான எச்சரிக்கை
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: