Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெகோ சமன் தொலைபேசியில் 'நாமல் சேர்'; நாமல் ஏன் கலக்கமடைய வேண்டும் - மஹிந்த ஜயசிங்க !

 


பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால் குறிப்பிடுங்கள். உலகில் அவ்வாறு எங்கும் இல்லை.பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு இல்லையாயின் நாமல் ராஜபக்ஷ அச்சமடைய தேவையில்லை. அச்சமில்லை, அச்சமில்லை என்று ஊடகங்களுக்கு குறிப்பிட்டுக்கொண்டு திரிகிறார்.

ஒருசிலரது தொலைபேசியில் ' நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ' என்று உள்ளது. பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. இந்த நாமலா அல்லது பிறிதொரு நாமலா, என்பது எமக்கு தெரியாது. ஆகவே அச்சமடைய வேண்டாம்.

கொள்கலன்களை ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் தோளில் வைத்துக் கொண்டு திரிய வேண்டும். கொள்கலன் விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஹெலிகொப்டர் அனுப்பி குற்றவாளிகளை நாங்கள் பாதுகாக்க போவதில்லை என்று பொதுமக்களுக்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா போதைப்பொருளுடன் அகப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்டரில் நீர்கொழும்புக்கு வந்து நிமல் லன்சாவை கட்டிப்பிடித்தார். போதைப்பொருள் வர்த்தகத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

Post a Comment

0 Comments