கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிசேக தின மணவாளக்கோல சகஸ்சிர சங்காபிசேக பெருவிழா இன்று பிற்பகல் வெகுவிமர்சையாக நடைபெற்றது.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவனற்றை ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயம் 2012ஆம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிசேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வருடாந்தம் மஹா கும்பாபிசேக தின மணவாளக்கோல சகஸ்சிர சங்காபிசேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க விரதராஜக்குருக்கள் தலைமையில் இந்த சங்காபிசேக நிகழ்வு நடைபெற்றது.
1008 சங்குகளைக்கொண்டதாக இந்த சகஸ்சிர சங்காபிசேக பெருவிழா நடைபெற்றதுடன் இதன்போது விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் விசேட கும்பபூஜை மூல மூர்த்திக்கு அபிசேகம் என்பன நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தி மற்றும் பரிபால மூர்த்திகளுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இந்த உற்சவ பெருவிழாவில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: