Home » » மட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலசல குழியருகே இறைச்சிகளும் மீட்கப்பட்டுள்ளன.இன்று பிற்பகல் மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது மலசல கூடத்திற்குள் இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு தொகை இறைச்சிகளையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.
இதன்போது பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு உணவு தயாரிப்பவர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இருக்கவில்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
DSC09946DSC09948DSC09949DSC09950DSC09953DSC09960DSC09964
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |