நிலவும் கொரோனா சூழ்நிலையைப் பொறுத்து நாணயத்தாள்கள், நாணயங்கள் மற்றும் காசோலைகளின் பயன்பாடுகளை குறைக்க வேண்டும் என இலங்கை வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் சில்வா இதை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்லைன் பரிவர்த்தனைகள் அல்லது அட்டை பரிவர்த்தனைகளுக்கு அதிகம் பழகுவதற்கு இது ஒரு நல்ல தருணம் என்றார்.
மேலும் சொந்தக் கணக்கு இல்லையென்றாலும், தற்போதைய சூழ்நிலையில், எந்த வங்கியும் எந்தவொரு வங்கிக் கட்டணமும் இல்லாமல் அட்டைகள் மூலம் பணம் எடுக்க மக்களுக்கு வசதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக இதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments: