Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2020ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சையை நடத்துவது குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும்- கல்வி அமைச்சர்!!



க.பொ.த. சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில் ,கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் தினத்தை நாம் அறிவித்திருந்தோம். அதாவது அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.

தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இதேபோன்று தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை 2 வார காலத்துக்குள் மேற்கொள்வோம்.

பின்னர் தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதாயின், மீண்டும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும். அதன் அடிப்படையில் கல்வி பொது தராதர பரீட்சையை இந்த பாடசாலைகளில் நடத்த முடியுமா? என்ற தீர்மானம் 2 வார காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில் க.பொ.த பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்தும் அதாவது, பரீட்சையை நடத்துவது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments