தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று ஜனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்க வேண்டும்

Monday, September 30, 2019



தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம்
மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித்
தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக்
கட்சி மட்டுமே முடிவெடுத்து செயற்பட்டதன் விளைவை இன்று ஒட்டுமொத்த
தமிழ்த் தேசிய இனமும் அனுபவித்து வருகிறது. எனவே இம்முறை நடைபெறவுள்ள

ஜனாதிபதித் தேர்தலிலாவது தமிழரசுக் கட்சி தனிப்பட்ட முடிவை எடுக்காமல்
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினருடன்
கலந்துரையாடி அதில் எட்டப்படும் முடிவுகளுக்கமைய தேர்தலை
முகங்கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு வரவேண்டும். எனவே மதத் தலைவர்களும்,
துறைசார்ந்த நிபுணர்களும், பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுக்கு
அழுத்தம் கொடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து அல்லலுறும் தமிழ்த் தேசிய
இனத்தின் நலன் சார்ந்து ஒருமித்த முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும் என்று
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 28.09.2019 அன்று செட்டிகுளம் பிரதேசத்தில் கட்சித்
தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் பொழுதே அவர்
மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும்
உரையாற்றுகையில்:

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எமது தேசிய இனத்தின்
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்
நடைபெற்ற 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்
முடிவும்,2015ஆம் ஆண்டு தேர்தலில் மைத்திரியை ஆதரிக்கும் முடிவும் இலங்கை
தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவு. இரண்டு தேர்தல்களிலும்
இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவடையும் தருணத்தில் எத்தகைய நிபந்தனையையும்
விதிக்காமல் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் முடிவு
எட்டப்பட்டது. ஆனால் நாம், நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க வேண்டாம் என்று
தெரிவித்தோம். இருப்பினும் எமது கோரிக்கையை தமிழரசுக் கட்சி உதாசீனம்
செய்தது.

முதல் இரண்டு தேர்தல்களிலும் மகிந்தராஜபக்ச வென்று விடக்கூடாது என்ற
பிரச்சாரத்தை முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
திரு.இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை
வென்றெடுப்பதற்கான பேரம்பேசும் விடயத்தைக் கோட்டை விட்டுள்ளார்.கடந்த
ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரி வென்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு
புதிய அரசியல் யாப்பினூடாக நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்று தெரிவித்த
திரு.இரா.சம்பந்தன் இன்று தமிழ் மக்களை நடுத்தெருவில் கொண்டுவந்து
நிறுத்தியுள்ளார்.

எனவே,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி
தன்னிச்சையான முடிவுகள் எதனையும் மேற்கொள்ளாமல், தமிழ்த் தேசிய இனத்தின்
நலன்சார்ந்து சிந்திக்கும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு பொது
முடிவினை எட்டுவதற்கு முன்வர வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஓரணியில்
நின்று முடிவெடுத்தால் அது சிங்களத் தரப்பினருக்கு வாய்ப்பாகப்
போய்விடும் என்ற கருத்து சில தமிழரசுக் கட்சியினரால்
தெரிவிக்கப்படுகிறது. எமது உரிமைகளை நாம் பின்கதவு வழியாகப்
பெற்றுக்கொள்ள முடியாது. யாருக்கும் தெரியாமல் தென்னிலங்கை ஆட்சியாளர்கள்
எமது உரிமைகளைக் கொடுப்பார்கள் என்று சொல்வதே எம்மை நாமே
ஏமாற்றிக்கொள்ளும் செயல்.எனவே அனைத்து மதத் தலைவர்களுடனும், துறைசார்
நிபுணர்களுடனும், அனைத்து பொது அமைப்புக்களுடனும் கலந்துரையாடிய பின்னர்
எட்டப்படும் முடிவிற்கமையவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான
முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேண்டும் என்று மதத்
தலைவர்களும், துறைசார் வல்லுனர்களும், பொது அமைப்புக்களும் அரசியல்
கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழ் தரப்பினர் அரனைவரும் கூடி எடுக்கும் முடிவினை அனைத்து நாடுகளின்
இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவையும்
பெற்றுக்கொள்வதற்கும் முயற்சிக்கவேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

READ MORE | comments

அமேசான் காட்டுத் தீயை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அடுத்த அச்சுறுத்தல்!!

மர்மமான முறையிலான ஒரு எண்ணெய் கசிவு ஏற்பட்டு பிரேசிலிய மாநிலங்களில் கடற்கரைகளையும் மாசுபடுத்தியுள்ளது பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
பிரேசிலின் வடகிழக்கு பிராந்தியத்தின் 3,000 கிலோமீட்டர் (1,860 மைல்) கடற்கரையோரத்தில் உள்ள கடற்கரைகள் இந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனமான இபாமா தெரிவித்துள்ளது.
அந்த எண்ணெயைப் பரிசோதித்ததில் இவை அந்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல எனத் தெரியவந்துள்ளது. பிரேசில் வட கிழக்கு கடற்கரையில் பெரிய அளவில் எண்ணெய் சிந்தி உள்ளதை அடுத்து இது தொடர்பாக விசாரணையை அந்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இப்போது வரை ஆறு கடல் ஆமைகள் மற்றும் ஒரு கடற்பறவை இறந்துள்ளன. எண்ணெய் பூசப்பட்ட சில பறவைகள் மற்றும் கடல் ஆமைகள் கழுவப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். மீன்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துள்ளதா என தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அமேசான் காட்டுத்தீ பிரேசிலை இரு வழியாக்கிய நிலையில், அடுத்து இந்த மர்ம முறையிலான எண்ணெய் கசிவு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
READ MORE | comments

ரணிலின் வாகனத்தில் அஷ்ரபின் போராளிகள் ஏறப்போவதில்லை : தலைமைத்துவ சபைக்கு தே. கா. மீயுயர் சபை அதிகாரமளிப்பு !!!



நூறுல் ஹுதா உமர்.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் தலைமையில் கொழும்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி கிழக்குவாசலில் நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானத்துக்கு அமைவாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நாட்டின் இஸ்திர தன்மையை உருவாக்க  மேற்கொள்ளவேண்டிய விடயங்கள், பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், சகல இன மக்களும் நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய அவசியம் தொடர்பில் ஆராயபட்டது.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் போராளிகள் யாரும் ஐ.தே. கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை அவருடன் சேர்ந்து பயணிப்பதில்லை அவரது வாகனத்தில் ஏற வேண்டிய தேவை அஷ்ரபின் போராளிகளுக்கு இல்லை என்றும். கடந்த கால தேர்தல்களில் நாம் முன்வைத்த பயங்கரவாதத்தை முடித்தல், வடக்கு கிழக்கை பிரித்தல் போன்ற ஒப்பந்தங்களை போன்று இம்முறையும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட திட்டங்களை முன்வைத்து தீர்மானங்களை மேற்கொள்ள தலைமைத்துவ சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

எல்லா இனங்களும் நிம்மதியாக வாழக்கூடிய தீர்வை முன்னிறுத்தி இணக்கப்பட்டுடன் பயணிக்க கூடியதாக புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் யாப்பை விரிவாக ஆராய்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தலைமைத்துவ சபைக்கு மீயுயர் சபை வழங்கியது.

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்துவந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் நாட்டினதும், மக்களினதும் நலனில் அக்கறை கொண்டு தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் தே. காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட வரலாறு நடைபெற்றது.

ஏற்கனவே எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்புடன் பேசி, ஆராய்ந்து தீர்மானத்தை நிறைவேற்ற தலைமைத்துவ சபை பணிக்கப்பட்டு நேற்றைய கூட்ட முடிவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

அனுராதபுர காட்டுக்குள் மர்மமான முறையில் செத்துக் கிடக்கும் யானைகள்? பின்னணி குறித்து வெளியான தகவல்

Sunday, September 29, 2019

அனுராதபுரத்திலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான உயிரிழந்த யானைகள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் சாந்தி பூஜைக்காக யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஹபரன, துன்மிகுளம் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

யானைகளின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னும் பல யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்தினரும் வனவிலங்கு அதிகாரிகளும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை கடும் போட்டியாளராக எண்ணும் மற்றைய போட்டியாளரின் நன்மைக்காக இந்த யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆட்சியின் போது குட்டி யானை ஒன்றை வீட்டில் வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கோத்தபாய ராஜபக்ஷ சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




READ MORE | comments

அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்

Saturday, September 28, 2019

அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனை - சாய்ந்தமருது பகுதியின் எல்லையில் அமைந்துள்ள மயானம் மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களை பயன்படுத்தி நேற்று மாலை நான்கு மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது இரு ட்ரக் வண்டிகளில் வருகை தந்த சுமார் 50 இற்கும் அதிகமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குறித்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியிலுள்ள சில வீதிகள் இராணுவத்தினரால் மறிக்கப்பட்டதுடன், செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

எனினும் எதுவித ஆயுதங்களோ தடயப்பொருட்களோ குறித்த தேடுதலில் சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.









READ MORE | comments

ஒக்டோபர் 07 - 12 வரை ஆசிரியர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு

கல்வி பாதிப்புக்கு அமைச்சரே பொறுப்பு
ஜோசப் ஸ்டாலின்
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி மீண்டும் எதிர்வரும் ஒக். 07ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை தொடர் வேலைநிறுத்தத்தில் களமிறங்கப்போவதாகவும் இதனால் மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் இழப்பை கல்வி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.  கடந்த இரு தினங்களாக அதிபர்களும் ஆசிரியர்களும் மேற்கொண்ட சுகயீன விடுமுறைப் போராட்டம் வெற்றியளித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.   செப்டம்பர் 26,27ஆகிய இரு நாட்களும் அதிபர்களும் ஆசிரியர்களும் சுசுகயீன விடுமுறைப்  போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக கல்வியமைச்சருக்கு நாம் எழுத்துமூலம் அறிவித்திருந்தபோதும் அவர் அது தொடர்பில் எமக்கு எவ்வித பதிலையும் அனுப்பவில்லை. ஆகக்குறைந்தது கடிதம் கிடைத்தது என்பதைக்கூட தெரியப்படுத்தவில்லை.
அதன் காரணமாகவே நாம் திட்டமிட்டதுபோல் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டோம் என்றும் அவர் கூறினார்.  

READ MORE | comments

மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் சமூக விழிப்புணர்வு நடை பவனி’

மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர், சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘சமூக விழிப்புணர்வு நடை பவனி’ இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
பாடசாலையில் இருந்த ஆரம்பமான இவ் நடை பவனியில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் உற்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இவ் நடை பவனி புனித மிக்கேல் கல்லூரியின் பாரம்பரிய பெருமையை காட்டுவதாகவும், மாணவர்களது ஆற்றல்கள், திறன்கள், சாதனைகளை புலப்படுத்துவதாகவும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்க கோருவதாகவும் காணப்பட்டது.
கல்லூரியின் பண்பை சமூகத்தில் உயர்த்தி வைக்கவும் ஒற்றுமையே நம் பலம் என்பதை கல்லூரி மாணவர், பழைய மாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் உணர்த்தும் முகமாக ஏற்பாடு செய்த இந் நிகழ்வினுடாக சாதனை படைத்த மாணவர்களது வெற்றிக் கிண்ணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.

READ MORE | comments

நெதர்லாந்து உதவி திட்டத்தில் தரகு பணம் பெற்ற ராஜித மற்றும் சத்தியலிங்கம்!!


வவுனியா வைத்தியாசாலைக்கு கிடைக்கப்பெற்ற நெதர்லாந்து உதவி திட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்களும் தரகு பணம் பெற்றமை தற்பொழுது அம்பலமாகியுள்ளது இது தொடர்பாக மேலும்தெரியவருவதாவது

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி உதவியை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைக்கான ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் அண்மையில் வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித
சேனரத்தின மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நெதர்லாந்து நிதி உதவி திட்டம் தொடர்பாக நாம் ஆராய்ந்த போது பல
திடுக்கிடும் உண்மைகள்  வெளிவந்தன அதவாது இவ் நெதர்லாந்து உதவி
திட்டத்தின் மூலம் 15 வீதத்திற்கும் மேற்பட்ட தரகு பணம் சத்தியலிங்கத்திற்கும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்களுக்கும்
பரிமாறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள்
கிடைக்கப்பெற்றுள்ளது அதேபோல் தரம் குறைந்த மருத்துவ உபகரணங்களை வடக்கு
மாகாணத்திற்கு வழங்கிவிட்டு அவ் உபகரணங்கள் தரமான கொள்வனவு போல் காட்டி நிதி மோசடிகளில் இவ் இருவரும் ஈடுபட்டிருந்தனர் என்ற அதிரச்சிகரமான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அத்துடன் சத்தியலிங்கம் அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபொழுது வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கென கொள்வனவு செய்யப்பட்ட இரத்த சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றிருந்தது இவ் ஊழல் மோசடி தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் சத்தியலிங்கத்தை பதவி நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்த முனைந்தபோது சம்பந்தன்
அவர்கள் விக்கினேஸ்வரனுடன் தொடர்பு கொண்டு சத்தியலிங்கம் அவர்கள் மீது விசாரணை நடத்தவேண்டாம் அவர் இராஜினாமா செய்வார் என கூறியதை அடுத்து அவ்
விசாரணை அறிக்கை முழுமையடைவதற்கு முன் கிடப்பில்போடப்பட்டது.

மேலும் இவ் இரத்த சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவிற்காக
ஆஸ்ரேலியாவிலிருந்து சேகரிக்கப்பட்ட நிதியில்  பாரிய ஊழல் இடம்பெற்றிருந்தது இதனால் தரம் குறைந்த இயந்திரம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் இவ் இயந்திரம் தரமானதா இல்லையா
என்பதை உயிர் மருத்துவ பொறியியலாளர்கள் (Bio Medical Engineer’s) மூலம் தர நிர்ணயம் செய்து உன்மை நிலையை அறிந்து கொள்ளமுடியும் என வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அண்மைக் காலங்களில் வவுனியா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு செய்த சிறுநீரக நோயாளர்கள் உட்பட பலர்  குறுகிய காலத்தில் இறப்பதாகவும்
இதன் மூலம் இவ் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் தரம் குறைந்ததா என்ற
சந்தேகத்தை எழுப்புகின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அத்துடன் சத்தியலிங்கத்திற்கும் ராஜிதசேனாரத்தினவுக்கும் உள்ள நல்லுறை பயன்படுத்தி அரசாங்கமானது இலங்கையில் நடந்த இன அழிப்பின் உண்மை தன்மையை
உலகிற்கு மறைத்துள்ள செயற்பாடும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது
சத்தியலிங்கம் அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபோது வடக்கு மாகாண ரீதியில் குடும்பநல உத்தியோகத்தர்களை கொண்டு யுத்தகாலத்தில் இடம்பெற்ற
இழப்புகளை திரட்டும் பணி நடைபெற்றது இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் தகவல் திரட்டும் போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அதாவது யுத்தகாலத்தில் இறந்தவர்கள்
காயப்பட்வர்கள்; சொத்தழிவுகள் விசேடதேவைக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை என்பன அரசாங்கம் கூறியதை விட இரண்டு மடங்காக காணப்பட்டுள்ளது இதை
சத்தியலிங்கம் அவர்கள் ராஜித அவர்களுக்கு தெரிவித்த பொழுது
அரசாங்கத்திற்கு இவ் விடயம் பாரிய சவாலாக இருக்கப்போகின்றது என கருதிய ராஜித தன்னுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அப்போதைய வடமாகாண சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கத்தை கொண்டு அவ் செயற்திட்டத்தை நிறுத்தியுள்ளார் இதற்காக இருவருக்கும் இடையில் பல பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக நம்பதகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாழும் தமிழ் மக்கள் சொல்லனாத்
துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்நிலையில் உயிரைபாதுகாக்கும் இவ் மருத்துவ துறையில் மலிந்து காணப்படும் ஊழலை செய்யும் இவ்வாறன ஊழல் பேர்வழிகளை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற மக்கள் முன்வரவேண்டும் என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
READ MORE | comments

தமிழ் மக்கள் வாக்களிக்காமல் ஒதுங்கி இருந்தால் இதுவே நடக்கும்! எச்சரிக்கும் கட்சி தலைவர்!

Friday, September 27, 2019

ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நிபந்தனைகளின்றி ரணில் - மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கம் தம்மை ஏமாற்றி விட்டதாக நீலிக் கண்ணீர் வடித்து தங்களுக்குள்ளேயே குமுறுவதாக இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் விஸ்ணு காந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பல்வேறு நெருக்கடிகளில் இருந்தும் பாதுகாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பில் கேள்வியெழுப்ப வேண்டும் எனவும் விஸ்ணு காந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பொன்று கொழும்பு - என்.எம்.பெரேரா மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
ஸ்ரீலங்காவின் மூன்று பிரதான சிங்களக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டிய நிலைக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விஸ்ணு காந்தன், கடந்த காலங்களில் நிபந்தனைகளின்றி தமிழ் மக்களை வாக்களிக்க வைத்தமையே இதற்கு பிரதான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதற்கு பின்னராக காலப்பகுதியிலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுவரும் காரணத்தாலேயே தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்கள் எவருக்கும் வாக்களிக்க தயங்குவதாகவதாகவும் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் விஸ்ணு காந்தன் கூறுகின்றார்.
எவ்வாறாயினும் தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தை தகுந்த நேரத்தில் பயன்படுத்தாது ஒதுங்கியிருந்தால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தேவையற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் எனவும் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் எச்சரித்துள்ளார்.
READ MORE | comments

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் கண்டன போராட்டம்


கதிரவன் திருகோணமலை

நீதிமன்ற அவமதிப்க்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் சிவில் அமைப்புகளால் போராட்டங்கள் நடத்தப்ட்டு  வருகிறது. திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் வெள்ளிக்கிழமை 2019.09.27 காலை 10.00 மணிக்கு கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பெருமளவிலான  சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு விதமான பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.



10.45 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் போராட்ட களத்திற்கு வந்து அவர்களின் பிரச்சிகைளைக் கேட்டறிந்தார். உரிய அதிகாரிகளுடன் தொடர் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழா வண்ணம் இருக்க எல்லோரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.




















READ MORE | comments

கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை தொடர்பான ஆவணத்தின் உறுதிப்படுத்திய பிரதியை உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது சம்பந்தமான ஆவணங்கள் தம்மிடம் இல்லை எனவும் அது பாதுகாப்பு அமைச்சில் இருப்பதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் அப்படியான ஆவணம் தம்மிடம் இல்லை என பாதுகாப்பு அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் அந்த ஆவணங்கள் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனை தவிர 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மெதமுலன பகுதியின் வாக்குச் சாவடியுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாக்குச் சாடியில் பணியாற்றி அதிகாரிகள், ஊழியர்கள், கட்சி பிரதிநிதிகளின் விபரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்குமாறு நீதிமன்றம், ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை சம்பந்தமாக 2005 ஆம் ஆண்டு பதிவேட்டின் 13305 இலக்கத்தின் கீழ் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கணனி அச்சு பிரதிகளில் அந்த இலக்கத்தின் கீழ் வேறு ஒருவரின் பெயர் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

இது சிங்கள பௌத்த நாடு; ஏற்றுக்கொண்டால் இருங்கள்! இல்லையேல் உடமைகளுடன் வெளியேறுங்கள்!

ஒட்டு மொத்த நாட்டையும் ஒரே சட்டத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்ககூடிய ஒருவரே, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைப்பிரிவில், நேற்றைய தினம் ஞானசார தேரர் முன்னிலையானதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது,
வாக்கு மூலமொன்றை வழங்கவே வந்தேன்.
கண்டியில் ரத்ன தேரர், உண்ணாவிரதமிருந்த போது, கிழக்கு மற்றும் மேல்மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் என்று நான் கூறியிருந்தேன்.
இதுதொடர்பாக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவே நான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் அழைக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.
மேலும் நான் இங்கு ஒரு கேள்வி எழுப்புகிறேன். இந்த நாடு யாருடையது? இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எது? இந்த நாடு 2500 வருடங்களுக்கு முன்னரும் இருந்தது.
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தோற்றம் பெறும் முன்னரே, இந்த நாடு இருந்தது. இந்த கலாசாரத்தை நாம்தான் தற்போதுவரை கொண்டுவந்துள்ளோம். ஆனால், எமக்கு இப்போது சிங்களம் பேச முடியாதுள்ளது.
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சிங்களம் தெரியாதமையால், எமக்கும், எமது மொழியை பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாம் மிகவும் கவலையடைகிறோம். இதனை தமிழர்களும், முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் வாழ வேண்டுமெனில், முதலில் சிங்கள மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் எனவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் தலைவராக வருபவர், தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என்பதோடு, தெற்கிலுள்ள சட்டத்திட்டங்களை வடக்கு கிழக்கிலும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒருவராகவும், வடக்கும் கிழக்கும் இலங்கையின் பகுதி என்பதை நிரூபிக்கும் ஒருவராகவும் இருத்தல் அவசியமாக இருக்கிறது.
இதன் ஊடாக மட்டுமே இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும்.
இவ்வாறான ஒருவர் தான் நாட்டுக்கு தலைமையேற்க வேண்டும். நாம் அண்மையில் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த போது, எமக்கு தமிழ் நாட்டுக்கு சென்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.
வடக்கு ஒன்றும் தமிழ் நாட்டின் ஒரு பகுதி அல்ல. அங்கும் எமது நாட்டின் சட்டத்திட்டங்கள் செல்லுபடியாகும். அங்கு, அரசமைப்பு மதிக்கப்படவில்லை. இதனால், அங்கு எம்மால் நீதியை எதிர்ப்பார்க்க முடியாது.
இவற்றையெல்லாம் மாற்றியமைக்கும் ஒரு தலைவர் வரவேண்டும். இதனை நாம் இப்படியே விட்டுவிட்டால், எதிர்க்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியேற்படும்.
இது சிங்கள பௌத்த நாடாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்காதவர்கள், தங்களது உடமைகளுடன் தாராளமாக வேறு நாடுகளுக்கு செல்லாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பில் நடமாடும் அமானுஷ்யம்! சி.சி.டி.வியில் ஆதாரம்.. பூனையுடன் கொஞ்சி விளையாடும் ஆவி!!

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் அமானுஷ்யமான உருவமொன்று நடமாடுவது சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
வீடொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வியிலேயே இந்த உருவாகம் பதிவாகியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அமானுஷிய உருவம் என்ன என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த வீடியோவைச் சுற்றி உள்ளவர்கள் “அவளுக்கு பூனை ஆசை தானே. பூனையை கொஞ்சுகின்றாள் பார், உண்மை, ஏஞ்சல் போன்ற உருவம்” என்றெல்லாம் கதைக்கின்றனர்.
இந்த சி.சி.டி.வி உண்மையா என்பது வெளிவராத நிலையில், இது தொடர்பான செய்தி தற்போது தீயாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



READ MORE | comments

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி


பாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது.

மனித வள அபிவிருத்தியிலே மிக முக்கிய பங்கு வகிக்கின்ற அதிபர்கள்,
ஆசிரியர்கள் கல்வி சமூகத்தினர் நீண்டகாலமாக சம்பள நிலுவைகளும் பதவி
உயர்வுகளும் வழங்கப்படாமல் இருக்கின்றனர். கல்வி நடவடிக்கைகளுக்கென
2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலே 3,000 மில்லியன் ரூபாய்
பணம் ஒதுக்கப்பட்டும் கூட, அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள்
வழங்கப்படவில்லை என்பதுடன் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்று
இன்றுவரையும் தெரியவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை
அவர்களுக்கு பதவி உயர்வுகள், சம்பள நிலுவைகள் உட்பட எந்தவிதமான தீர்வு
கிடைக்கவில்லை.இவர்கள் கடந்த 24 வருடங்களாக பதவி உயர்வு சம்பள நிலுவகைள்
ஏனைய அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டிலே மனிதவள அபிவிருத்திதான் உண்மையில் ஒரு நிலையான
அபிவிருத்தியாக இருக்கும். அப்படிப்பட்ட மனிதவள அபிவிருத்தியை
அர்ப்பணிப்போடு செய்துகொண்டிருக்கின்ற அதிபர், ஆசிரியர்களுடைய
பதவியுயர்வுகள், சம்பள உயர்வுகள், சம்பள நிலுவைகள் எதையும் இந்த
அரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்கள்
மீண்டும் நாடுதழுவிய ரீதியிலே பாரிய தொழிற்சங்கப் போராட்டமொன்றைச்
செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள். இந்த நாட்டிலே வைத்தியர் சங்கம்,
ஆசிரியர் சங்கம், அதிபர் சங்கம் போன்ற பல்வேறுபட்ட தொழிற்சங்கத்தினர்
தங்களுடைய உரிமைக்காகவும், பதவியுயர்வுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும்,
நீதி வேண்டித் தொடர்ந்து போராட வேண்டிய ஒரு நிலைமைக்குத்
தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரச துறையில் பதவியுயர்வுகள் அல்லது சம்பள
உயர்வுகள் தொடர்பாகவும்இ அதேபோல் தனியார் துறையிலும் முறையான ஒரு
கொள்கைத் திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும். அதற்காக முறையான ஒரு
சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த நிலைமைகள் இல்லாதவரைக்கும் இந்த
நாட்டிலே தொடர்ச்சியான தொழிற்சங்கப்  போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது
தவிர்க்க முடியாததொன்றாக இருக்கும்.

இந்த நாட்டினுடைய தேசிய வருமானதின் முதுகெலும்பாக இருந்து உழைத்துக்
கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு தொடர்பாக
நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தினால்
அறிவிக்கப்பட்டதன்படி 50 ரூபாய் மேலதிகச் சம்பளத்தை பெறுவதற்கு
தோட்டதொழிலாளர்கள்; தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தியும்  இதுவரை
அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொகை வழங்கப்படவில்லை. அரசாங்கம் இந்தத்
தொழிலாளர்களின் சம்பளத்தை 50 ரூபாயினால் அதிகரித்துக் கொடுப்பதற்கு
எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையிலே,
இப்போதைய நிலையில் 50 ரூபாய் என்பது மிகவும் சொற்ப தொகையாகும். மிகுந்த
கஷ்டத்திற்கு மத்தியிலே நாட்டின் தேசிய வருமானத்திற்கு முதுகெலும்பாக
உழைத்துக்கொண்டிருக்கின்ற இந்தத் தொழிலாளர்களின் விடயத்தில் அரசாங்கம்
எந்தவிதமான கவனமும் செலுத்தமால் அவர்களைப் புறக்கணிப்பதென்பது மிகவும்
கண்டிக்கத்தக்கது. ஆகவே, சம்பளத் திருத்தச் சட்டமூலத்தினூடாக தோட்டத்
தொழிலாளர்களுடைய சம்பளத்தை அதிகரித்து கொடுப்பதற்கு கௌரவ அமைச்சர்
அவர்களும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்ததிலே குறிப்பாக வடக்கு, கிழக்கு
மாகாணத் தமிழ் மக்களுடைய பங்களிப்பு பெரியளவிலானதாக  இருந்தது. வடக்கு
மாகாணத்திலே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதாரண சிற்றூழியர்
நியமனங்களுக்குக்கூட வடக்கு மாகாணம் தவிர்ந்த பிற மாவட்டங்களில்
இருக்கின்றவர்கள் நியமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல்
ரீதியான உள்நோக்கத்தோடு அந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அரசாங்கம்
இத்தகைய நியமனங்களை வழங்கும்போது அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற கல்வி
கற்ற இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வட மாகாணத்திலே,
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்ற ஆயிரக் கணக்கான
இளைஞர்கள் யுவதிகள் இன்று வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், வடக்கு
மாகாணத்திலுள்ள பல்வேறுபட்ட திணைக்களங்களுக்குஇசுகாதாரத் துறையாக
இருக்கலாம், கல்வித்துறையாக இருக்கலாம், மின்சார சபையாக இருக்கலாம் -
சாதாரண சிற்றூழியர் நியமனம்கூட வேறு மாகாணங்களிலுள்ளவர்களை அரசியல்
செல்வாக்கோடு நியமனம் செய்கிறார்கள். அபிவிருத்தி நடவடிக்கையாக
இருக்கலாம் அல்லது அரச நியமனங்களாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும்
அரசாங்கம் அது தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டும்.

வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இருக்கின்ற தமிழ் மக்களுடைய
வாக்குகள் உங்களுக்குத் தேவையாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலாக
இருக்கலாம் அல்லது ஏனைய தேர்தல்களாக இருக்கலாம், அவர்களுடைய வாக்குகள்
உங்களுக்கு மிக முக்கியமாக இருக்கின்றது. ஆனால், அவர்களிடமிருந்து
வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்ற நீங்கள், அவர்களுடைய பொருளாதார ரீதியான
அபிவிருத்தியிலோ அல்லது வேலைவாய்ப்பிலோ அல்லது நிரந்தரமான தொழில்
முயற்சியை மேற்கொள்வதிலோ எந்தவிதமான அக்கறையையும் செலுத்துகின்றீர்கள்
இல்லை. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கின்றது. 4
வருடங்களுக்கு முன்பாக இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கிய
மக்கள் உங்களை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் கொண்டுவந்தார்கள்.
இருந்தபோதிலும் இந்த 4 வருட காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும்
குறைந்தபட்சம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தொழிற்சாலைகளைப்
புனரமைப்பதற்குக்கூட உங்களால் முடியவில்லை அல்லது புதிய தொழிற்சாலைகளை
அமைக்க முடியவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஆயிரக் கணக்கான
இளைஞர், யுவதிகள் இன்று வேலையில்லாத நிலையிலிருக்கிறார்கள்.
பட்டதாரிகளுக்குக்கூட நியமனம் வழங்க முடியவில்லை; தொண்டர்
ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க முடியவில்லை. தமிழ் மக்களுடைய வாக்குகளைப்
பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் இந்த 4 வருட காலமாக வடக்கு கிழக்கில்
எந்தவிதமான அபிவிருத்தியையும் செய்யவில்லை.

ஜனாதிபதி வேட்பாளராக உள்ளவர்களும் சரி , அமைச்சர்களாக
இருக்கின்றவர்களும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் வடக்கு நோக்கி வந்து
ஒவ்வொருவிதமாக கதையைச் சொல்கின்றார்கள். சஜித் பிரேமதாஸ அவர்கள், 'நான்
ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினையை  6 மாத காலத்திற்குள்ளே
தீர்ப்பேன்' என்று கூறுகிறார். அவருடைய கட்சியின் தலைவரான பிரதம மந்திரி
அவர்கள், தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 3 வருடகால அவகாசம்
தாருங்கள் என்று சொல்கின்றார். 

நீங்கள் வடக்கை நோக்கிவந்து தமிழ் மக்களை
மீண்டும் ஏமாற்றுவதற்காக ஒவ்வொருவிதமான கதையைச்
சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். குறைந்தபட்சம், யுத்தத்தால்
பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே
சிதைவடைந்திருக்கின்ற தொழிற்சாலைகளைப் பொருளாதார ரீதியாக நன்மைபெறும்
வகையில் புனரமையுங்கள்! புதிய தொழிற்சாலைகளை உருவாக்குங்கள்! வேலை
வாய்ப்புக்களை வழங்கும்போது அந்த மாகாணத்திலிருக்கின்றவர்களுக்கு அந்த
வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, நீங்கள் அந்த மக்களது
வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கின்றீர்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே நியமனங்களைப் பெற்றிருப்பவர்கள்
எங்கேயிருந்து வந்திருக்கின்றார்கள்? என்று பாருங்கள்! அதாவது, யாழ்.
பல்கலைக்கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு
வெளிமாவட்டத்திலிருந்து நபர்களைக் கொண்டுவந்து நியமனம்
வழங்குகின்றார்கள். நீங்கள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக
இருந்தும்கூட உங்களால் இதனைத் தடுக்க முடியவில்லை.இப்போது எல்லா
விடயங்களும் முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே,
இந்த அரசாங்கம் தனக்கு வாக்களித்த மக்கள் விடயத்தில் நீதியாக நடந்துகொள்ள
வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
READ MORE | comments

புனித மிக்கேல் கல்லூரியின் 'மைக் வோக்' நடைபவனி - 2019


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 146 ஆவது ஆண்டை முன்னிட்டு  ஏற்பாடு செய்துள்ள 'மைக் வோக்' நடைபவனி மட்டக்களப்பு நகரில்  சனிக்கிழமை (28) நடைபெறவுள்ளது 

'மைக் நடைபவனி'  28.09.2014 சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து ஆரம்பமாகிறது.

இப் பவனியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும், புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகருமான யோசப் பொன்னையா ஆண்டகை ஆரம்பித்து வைப்பார்.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அருட் தந்தை எம்.ஸ்ரனிஸ்லோஸ் தலைமையில் பாடசாலையிலிருந்து ஆரம்பமாகும் நடைபவனி மத்திய வீதி, திருமலை வீதி வழியாக இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை வரை சென்று மீண்டும் திருமலை வீதி வழியாக வந்து பார் வீதியூடாக அரசடிச் சந்திவரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடையும்.
இதில் பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா, பிரதி மற்றும் உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் என பெருந்தொகையானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாடசாலை கல்வியில், விளையாட்டு மற்றும் ஏனைய செயல்பாடுகளில் வெற்றி பெற்ற கேடயங்கள், கிண்ணங்கள், சாரணர், மற்றும் சவால் சவால் கிண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட விருதுகளை சுமந்த வாகன ஊர்தி  ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் வகையில்   விசேட சிறப்பம்சமாகும்.
கல்லூரியின் பெருமைகளையும் அதன் சரித்திரத்தையும், சாதனைகளையும் எடுத்துக் காட்டும் அலங்கார ஊர்திகள், பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்ட  மைக் நடைபவனி மட்டக்களப்பு சமூகத்திற்கும், முழு இலங்கைக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் அருமை பெருமைகளை பறைசாற்றும் முகமாக இந்நிகழ்வினை பழைய மாணவர் சங்கம் ஒவ்வொரு வருடமும் செப்ரம்பர் இறுதி வாரத்தில் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. 
READ MORE | comments

இஸ்லாமிய தீவிரவாதி ISIS குழுவைச்சேர்ந்த சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாரியின் உடல் எச்சங்களை காத்தான்குடி 3 பள்ளிவாசலில் புதைக்க நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமிய தீவிரவாதி ISIS குழுவைச்சேர்ந்த சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாரியின் உடல் எச்சங்களை காத்தான்குடி 3 பள்ளிவாசலில் புதைக்க நீதிமன்றம் உத்தரவு


READ MORE | comments

எதிர்வரும் 10ஆம் திகதி எமது பலத்தை நிரூபிப்போம்! மாபெரும் திட்டம் வகுத்துள்ள ஐ.தே.க!

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியும், மக்கள் பலத்தை நிரூபிக்கும் மாபெரும் கூட்டத்தை ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியும் நடத்தவுள்ளோம்.
நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பட்டதன் பின்னர் சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்க கட்சியின் மத்திய செயற்குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் பிரதமர் தலைமையில் கூடி இணக்கம் கண்டது. அதன்பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தத் தீர்மானம் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதன்போது தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டுவருவதல் மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழித்தல் உள்ளிட்ட எமது அரசு இணக்கம் தெரிவித்த அரசமைப்பு முறைமையை உருவாக்குதல் என அனைத்து முக்கிய விடயங்களையும் நிறைவேற்றுவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் பிரதமர் மற்றும் கட்சியின் தலைமைப் பதவி ரணில் விக்கிரம சிங்கவிடம் தொடர்ந்தும் இருக்கும். இதற்கும் அனைவரும் இணைக்கம் தெரிவித்தனர். எமது ஜனாதிபதி – எமது பிரதமரின் தலைமையில் ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் நாம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியாக இணைந்து பரந்த கூட்டணியாகத் தேர்தலில் களமிறங்கவுள்ளோம். இதுவரை எம்முடன் இணையாத கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பரந்த கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றியைப் பெற்றுக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |