Home » » புனித மிக்கேல் கல்லூரியின் 'மைக் வோக்' நடைபவனி - 2019

புனித மிக்கேல் கல்லூரியின் 'மைக் வோக்' நடைபவனி - 2019


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 146 ஆவது ஆண்டை முன்னிட்டு  ஏற்பாடு செய்துள்ள 'மைக் வோக்' நடைபவனி மட்டக்களப்பு நகரில்  சனிக்கிழமை (28) நடைபெறவுள்ளது 

'மைக் நடைபவனி'  28.09.2014 சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து ஆரம்பமாகிறது.

இப் பவனியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும், புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகருமான யோசப் பொன்னையா ஆண்டகை ஆரம்பித்து வைப்பார்.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அருட் தந்தை எம்.ஸ்ரனிஸ்லோஸ் தலைமையில் பாடசாலையிலிருந்து ஆரம்பமாகும் நடைபவனி மத்திய வீதி, திருமலை வீதி வழியாக இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை வரை சென்று மீண்டும் திருமலை வீதி வழியாக வந்து பார் வீதியூடாக அரசடிச் சந்திவரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடையும்.
இதில் பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா, பிரதி மற்றும் உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் என பெருந்தொகையானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாடசாலை கல்வியில், விளையாட்டு மற்றும் ஏனைய செயல்பாடுகளில் வெற்றி பெற்ற கேடயங்கள், கிண்ணங்கள், சாரணர், மற்றும் சவால் சவால் கிண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட விருதுகளை சுமந்த வாகன ஊர்தி  ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் வகையில்   விசேட சிறப்பம்சமாகும்.
கல்லூரியின் பெருமைகளையும் அதன் சரித்திரத்தையும், சாதனைகளையும் எடுத்துக் காட்டும் அலங்கார ஊர்திகள், பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்ட  மைக் நடைபவனி மட்டக்களப்பு சமூகத்திற்கும், முழு இலங்கைக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் அருமை பெருமைகளை பறைசாற்றும் முகமாக இந்நிகழ்வினை பழைய மாணவர் சங்கம் ஒவ்வொரு வருடமும் செப்ரம்பர் இறுதி வாரத்தில் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |